அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் ?யாரேனும் ஒருவர் பெரும் பாவம் செய்து விட்டால் அதிலிருந்து அவர் மீட்சி பெற கீல்க்கண்டன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
1-வது தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்த வேண்டும் .2-வது தாம் செய்த குற்றத்தை உடனடியாக விட்டு விட வேண்டும். 3-வது இனிமேல் அக்குற்றத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். பிற மனிதர்களுக்கு ஏதேனும் தீங்கிளைத்திருந்தால் அவரிடம் சென்று மன்னிப்பு கோர வேண்டும் ; பிறகு அல்லாஹ்விடம் அழுது துஆ கேட்க்க வேண்டும் . இவற்றுக்குத்தான் தவ்பா என்று சொல்லப்படும் இதில் ஒன்றை விட்டாலும் தவ்பா உண்டாகாது .


புறம் பேசிய பின் என்ன செய்ய வேண்டும்?

ஒருவரிடம் ஒரு தவறான செயலை கண்டு மற்றவரிடம் அதை சொல்லுவதுதான் புறம் என்று சொல்லப்படும். ஆனால் , தவறு செய்தவர் அவ்வாறு மற்றவரிடம் சொல்வதைப் பொருந்திக் கொண்டால் குற்றமில்லை . ஒருவரிடம் கேட்ட செயல் இல்லாமலிருந்து அதை இருப்பதாக மற்றவரிடம் சொல்வதற்கு  அவதூறு என்று கூறப்படும் . இந்த குற்றத்தை செய்வதினால் இரு வகை குற்றமுண்டாகும் . ஒன்று புறம் பேசியது . மற்றொன்று பழி சுமத்திய குற்றம் . ஒருவரிடம் இருக்கும் தவறை அவரின் முதுகுக்கு பின்னால் பேசுவதும் புறமாகும் .
ஒருவரை நல்வழியில் கொண்டு வரும் நோக்கத்துடன் அவரிடம் உள்ள தவறி மற்றவர்களிடம் எடுத்து சொல்வது குற்றமில்லை . ஆனால் , இவ்வாறு செய்வதில் அறவே கெட்ட எண்ணம் கூடாது . புறம் பேசுவது மாபெரும்  குற்றமாகும் .
இந்த தவறை செய்த குற்றவாளிகள் பாவமீட்சி பெற கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும் . யாரை பற்றி பேசப்பட்டதோ அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் . மேலும்  அவரிடம் இல்லாத விஷயத்தை கூறி இருந்தால் யாரிடம் சொல்லப்பட்டதோ அவரிடம் சென்று தான் அன்னாரிப் பற்றி சொல்லியது தவறு என்று கூற வேண்டும் .பின்னர் இத்தவறு செய்ததை நினைத்து வருந்தி இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்து அந்த தவறை உடனே விட்டு விட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கோர வேண்டும்! இவ்வாறு செய்யா விட்டால் புறம் பேசிய குற்றதிருக்கு  மறுமையில் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!