அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, நவம்பர் 03, 2013

அமல்களின் சிறப்பு !


நீங்கள் ஆடை அணிந்தாலும் , நீங்கள் -ஒழு செய்தாலும் வலது பக்கங்களைக் கொண்டே ஆரம்பியுங்கள் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூஹுர்ரைரா (ரலி)

ஆதாரம்: அஹ்மத்

அல்லாஹ் ஏதாவது ஒரு மனிதருக்கு ஒரு ஊரில் மரணத்தை ஏற்படுத்தினால் அவருக்கு அந்த ஊரில் ஏதாவது தேவையை ஏற்படுத்துவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :மத்ர் (ரலி)
ஆதாரம்: திர்மிதி

நீ செய்யும் நற்காரியம் உனக்கு மகிழ்ச்சியளித்தால்  உனது தீயச் செயல் உனக்கு துக்கமளித்தால் நீர் பூரணமான முஃமின் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூஉமாமா (ரலி)
ஆதாரம்: அஹ்மத்

எவர் ஆபாச வார்த்தைகள் பேசாமலும் கெட்ட செயல்கள் செய்யாமலும் ஹஜ் செய்கிறாரோ அவர் தனது தாய் பெற்ற குழந்தை போல் (பாவம் கழிந்து ) திரும்புகிறார் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்: புகாரீ

தனக்குச் சொந்தமில்லாத ஒன்றை தனக்குரியது என்று வாதிடுபவன் நம்மைச் சார்ந்தவனில்லை .அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூஜூர்ரான் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்

ஒரு மனிதன் மற்ற மனிதனின் ஒரு பகுதி நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொண்டால் , கியாமத்நாளில் ஏழு பூமிகளுகுள் அவன் ஆழ்த்தபடுவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: சாலிம் (ரலி)
ஆதாரம் :புகாரீ

உங்களில் எவர் ஒரு தீய செயலைக் காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும் .அவரால் அது முடியவில்லையெனில் அதை தமது நாவால் தடுக்கட்டும் .அவரால் அதையும் செய்ய முடியவில்லை எனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும் .இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பவர் :அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!