அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், ஜனவரி 20, 2014

கேள்வியும் பதிலும்!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
நமக்கு ஒரு நல்லது நடந்தால் நாம் சந்தோசபடுகிறோம் மாறாக நமக்கு ஒரு சோதனை வந்தால் அழுது புலம்பி பெரிய ஆர்பாட்டம் செய்கிறோம் . இது மனித இயல்பு என்று கூட சொல்லாம் . ஒரு முஃமினுக்கு எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் " என்று சொல்வார் . இது ஒரு முஃமினின் பண்பு .

ஓர் அடியான் இறைவனுக்கு எப்பொழுது பொருத்தமாவான் ? (இந்த கேள்வியை ராபியா (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது) அதற்க்கு அவர்கள் பதில் கூறினார்கள் , "அவன் இறைவன் தனக்கு நல்கிய நற் பேருகளுக்கு நன்றி செலுத்துவது போன்று தனக்கு அவன் நல்கும் சோதனைகளுக்கு துன்பங்களுக்கும்  எப்பொழுது நன்றி செலுத்துகின்றானோ அப்பொழுதே இறைவன் அவனைப் பொருந்திக் கொள்வான் என்று கூறினார்கள் .

அல்லாஹ்வின் பொருத்தம் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல , இருப்பினும் நாம் கொஞ்சம் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும் . அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். அமல்கள் செய்யும் போது அல்லாஹுக்கு மட்டும் என்று நீயத்து (நல்ல எண்ணம் ) வைக்க வேண்டும் .

பாவமன்னிப்பு கோரின் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா ?
அவன் இறைவனின் நாட்டம் இருந்தால் தானே பாவ மன்னிப்பு கோருவான் இல்லையெனில்  அவன் ஒருபோதும் மன்னிப்புக் கோரமாட்டான் . எனவே அவன் இறைவனின் நாட்டப்படி பாவ மன்னிப்புக் கோரின் இறைவன் அவனுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்ளத்தானே செய்வான் . இறைவன் அவன் பக்கம் திரும்பின்  அவனும் இறைவன் பக்கம் திரும்பத்தானே செய்வான் .

ஒருவர் பாவமன்னிப்புக் கோருகிறார் என்றால் இறைவன் அவரின் பாவத்தை மன்னிக்கத்தான் போகிறான் .அல்லாஹ்வின் நாட்டப்படி அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறார் என்று பொருள் . அதற்காக நாம் சும்மா இருக்க கூடாது , நாமும் மனதில் நல்ல எண்ணம் வைக்க வேண்டும். உணவு தட்டில் இருக்கிறது கையைக் கொண்டு போனால்தான் உணவை எடுத்து சாப்பிட முடியும் . நாம் முயற்சி செய்ய வேண்டும் , நாம் பாவத்தை எண்ணி வருந்த வேண்டும். அல்லாஹ் நம் உள்ளத்தையும் , செயல்களையும் பார்கிறான் என்பதை மறக்க வேண்டாம்.

வலி யார் ? என்று வினவப்பட்டது .
"எந்த நேரமும் தம் ஆன்மாவை இறைத் தியானத்தில் வைத்திருப்பவன் தான் " என்று மறுமொழி பகர்ந்தார்கள் .

"கஞ்சன் யார் ?
"தன் நப்சிர்கு  மிகவும் அவசியமாக உள்ள தேவைகளைக் கூடப் பணம் ஆசையின் காரணமாக வெறுப்பவன் "

"இறையச்சம் என்றால் என்ன ?
"அதுவே இதயத்தின் விளக்காகும் . இறைவன் தன்னை ஏற்றுக் கொள்வான் என்று எண்ணித் தவறு செய்து கொண்டே இருப்பவன் அழிந்து விடுவான் "

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!