அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஏப்ரல் 19, 2014

நபிகளாரின் வாழுவும் வாக்கும்

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

பெரும்பாலும் முஸ்லிம்களிடம் கல்வி ஞானம் இல்லாததனால் அன்று முதல் இன்று வரை மூடநம்பிக்கைகளை அதிகம் அதிகம் செய்து வருகிறார்கள் . இன்று அல்லாஹ்வின் கிருபையால் மார்க்க கல்வி அறிந்துக் கொள்ள நிறைய வசதிகள் ,வாய்ப்புகள் இருக்கின்றன . ஆனால் , அவைகளை பயன்படுத்திக் கொள்ள நமக்கு நேரம் இல்லை . உலக காரியங்களில் நாம் முழ்கி இருக்கிறோம் . 

வழிப்போக்கனைப் போன்று வாழ்!

உலகத்தில் நீ அந்நியனைப் போன்று. அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு! 
நபிமொழி-6416]

வினையும் விசாரணையும் 

நீங்கள் மறுமையில் புதல்வர்களாயிருங்கள் ,, இம்மையில் புதல்வர்களாகிவிடாதீர்கள்  . இன்று வினை உண்டு ,, விசாரணை இல்லை. நாளை விசாரணை உண்டு,, ஆனால் , வினை இல்லை .
[அலீ [ரலி] - பக்கம் -355]

ஏக்கப் பெருமூச்சு வேண்டாம் !

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே தம்மைவிடக் கீழானவர்களை அவர் நினைத்துப் பார்க்கட்டும்!
நபிமொழி -6490]

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
தமது வாழ்வாதாரம் [ரிஸ்க் ] விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப்படுவதையும் யார் விரும்புகின்றாரோ அவர் தமது  உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் புகாரீ ]

உமர் பின் அல்கத்தாப் [ரலி] அவர்கள் கூறியதாவது..

[ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த ] கைதிகள் சிலர் நபி [ஸல்] அவர்களிடம் வந்தார்கள்  . அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலுட்டுவதர்காக [த் தன் குழந்தையைத் தேடினாள் .குழந்தை கிடைக்கவில்லை.எனவே] கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை  [வாரி] எடுத்து [ப் பாலுட்டினாள் . தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து ] த் தன் வயிற்றோடு அணைத்துப்  பாலுட்டலானால்.
அப்போது எங்களிடம் நபி [ஸல்] அவர்கள் ,  ''இந்தப் பெண் தன்  குழந்தையை தீயில் எரிவாளா? சொல்லுங்கள்! '' என்றார்கள் . நாங்கள் , ''இல்லை , எந்நிலையிலும் அவளால் எரிய  முடியாது '' என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களம் ,  ''இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ்  தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று சொன்னார்கள் .

அல்லாஹ்வின்  அன்பும், இரக்கமும் எப்பொழுதும் விசுவாசம் கொண்ட அனைத்து முஸ்லிம்களின் மீது  இருக்கும். ஆனால் நாம் தான் எந்த முஸ்லிம்கள் மீது அன்பும் , இரக்கமும் இல்லாமல்  இருந்து வருகிறோம் . ஒருவர்கொருவர் உதவியும் , ஒத்தாசையும்  செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறோம். நமக்குள் போட்டியும், பொறாமையும்  தான் மலிந்துக் கிடக்கிறது என்பது உண்மை. 

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத்  தன்னிடம் வைத்துக் கொண்டான். [மீதியிருக்கும்] ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தால் குதிரை தனது  குட்டியைவிட்டுக் கால்குளம்பை தூக்கிக் கொள்கிறது.

இதை அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் .. புகாரீ]

அல்லாஹ்வின் ஒரு பங்கு மட்டும் அன்பு இந்த உலகத்திற்கு இறக்கப்பட்டது என்றால்  , மீதியுள்ள தொண்ணூற்று ஒன்பது பங்கை அல்லாஹ் தன்னிடம் வைத்துக் கொண்டான்  . ஒரு பங்கே இவ்வளவு அன்பு என்றால் ! மீதியுள்ளதை என்ன சொல்வது?  நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அல்லாஹ்வின் மீது ஆதரவை  இழக்க கூடாது . அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவான். அதில் ஒரு சிறு துளி கூட சந்தேகம் இல்லை. அல்லாஹ்  மன்னிக்க முடியாத ஒரு மிக பெரிய பாவம்  அது தான் இணை வைப்பதாகும். சில முஸ்லிம் மக்கள்கள்  உணர வேண்டும் .புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த தர்கா வழிப்பாடுவிடயத்தில்  . 

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்..

அல்லாஹ்வையே வழிபடுங்கள் ,, அவனுக்கு எதையும் இணைகற்பிக்காதீர்கள் . மேலும் தாய் தந்தையருக்கும் , நெருங்கிய உறவினர்களுக்கும் , அனாதைகளுக்கும் , ஏழைகளுக்கும் , உறவினரான அண்டை வீட்டாருக்கும் , உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும் , [பிரயாணம், தொழில் போன்றவற்றில்]  கூட்டாளியாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் [அன்புடன்] நன்மை செய்யுங்கள் ,, அல்லாஹ் அகந்தை கொள்பவனையும்  தற்பெருமை கொள்பவனையும்  நேசிக்கமாட்டான்.
அல்குர் ஆன் .. 4..36]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..

அண்டை வீட்டார் குறித்து என்னிடம்  [வானவர்] ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார்கள் . எந்த அளவுக்கென்றால் ,  [எங்கே] அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன். 

இதை அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்.. புகாரீ]

அண்டை வீட்டார்  ' [அல்ஜார்] என்பது ,  முஸ்லிம்-முஸ்லிமல்லாதவர், நல்லவர் -கெட்டவர்  , நண்பர்- பகைவர், உள்ளூர்வாசி- வெளியூர்வாசி,  உறவினர்- அந்நியர்  ஆகிய எல்லா வகையினரையும் குறிக்கும்  . 

அண்டை வீட்டார் விஷயத்தில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் . அது சம்பந்தமாக நிறைய ஹதீஸ்கள்  உள்ளன.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அண்ணல் நபி [ஸல்] அவர்களைப் பின்பற்றி வாழச் செய்வானாக  ! அல்லாஹ்வும் ,அவன் தூதர் நபி [ஸல்] அவர்களும் சொல்லாத எந்தகாரியத்தையும்  நாம் செய்யாமல் இருக்க அல்லாஹ் நமக்கு கிருபைச் செய்வானாக! ஆமீன் ..................
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!