அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, மார்ச் 27, 2015

ஒழுக்கத்தைப் பேணுவோம்!

நற்குணம்!ஒழுக்கம்!நல்ல பண்புகள்!
அல்லாஹ்வின் திருபெயரால்.......

''மெய்யாகவே நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால் இத்தகைய விஷயத்தில் இனி ஒரு காலத்திலும் நீங்கள் பிரவேசிக்காதிருக்கும்படி அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.''
-அல்குர்ஆன் [24..17]


அண்ணல் நபி [ஸல்] அவர்களின் அருமை பிராட்டியார் ஹஜ்ரத் ஆயிஷா நாயகி [ரலி] அவர்கள் மீது அவதூறு கூறப்பட்டதை கண்டிக்கும் வகையாக, இத்திருவசனம் 'அந்நூர்' என்ற அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. ஆண் , பெண்களின் மீது அவதூறு கூறும் பழக்கம் ஆதிகாலந்தொட்டு இன்று வரை நீடிக்கும் தவறான தகாத பழக்கமாகும். பிறரிடம் என்ன குறைகள் காணலாம் என கழுகுக் கண்களைக் கொண்டு ஆராயும் பெண்கள் மிகப்பலர். சிறிய தவறுகளைக் கூட பூனைகளை யானைகலாக்கி படம் பிடித்துக் காட்டி மகிழ்வுறும், மட்டரகமான மனிதர்கள் நச்சரவங்களாக நாட்டிலே நடமாடி வருகின்றனர். இந்த கிசுகிசுப்பினால் எத்தனை கசப்புகள், மனஸ்தாபங்கள், பிளவுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன என்பதை ஒரு சிறிதளவும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

இஸ்லாம் ஒழுக்கத்தை எப்படி பேணவேண்டும் என்பதை சொல்லித்தருகிறது. ஒழுக்கமாக எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது.  நபிவழியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லக் கூடிய சிலர்கள் , அவர்கள் ஒழுக்கத்தை மறந்துவிடுகிறார்கள். அருவருப்பாகவும், அசிங்கமான சொல்லையும் தான் பயன்படுத்துகிறார்கள். ஒருவொர்கொருவர் அவதூர்களை அள்ளி வீசுவதைப் பார்க்கிறோம். நபிமொழிகள் எத்தனைகள் உள்ளன நற்குணத்தைப் பற்றியும், ஒழுக்கத்தை பற்றியும். 

நபி [ஸல்] அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.  [புகாரி ]

இன்று இந்த நற்குணம் நம்மிடத்தில் காண்பது மிக அரிது!  இன்று அதிகமாக துர்குணம் உள்ளவர்களைத்தான் காண முடிகிறது. 

விசுவாசிகள் இத்தகைய மோசமான மனநிலை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும், ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெரும் தவறான இச்செய்திகளை தங்கள் நாவால் கூறிக் கொண்டு திரியமாட்டார்கள் என்றும், அவதூறு கூறுதல் மாபெரும் பாவம் என்று உணர்ந்து அதிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றும்,  இணையில்லா இறைவன் நல்லுபதேசம் செய்கிறான். மானக்கேடான விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, ஷைத்தானின் ஏவுதலுக்கு சிரம் சாய்த்து, அடிபணிந்து, தாமும் கெட்டு , பிறரையும் கெடுத்து வாழும் காரியத்தை இனி ஒரு காலத்திலும் செய்யக் கூடாது என்பதே மேல் கூறப்பட்ட வசனத்தின் கருப்பொருளாகும்.

அரட்டை அரங்ககங்களில் கூடி கூடிப் பேசி பிறரின் குடியை கெடுக்கும் ஈனச் செயல்களில் ஈடுபட்டு, அருவருப்பான அவதூர்களை பரப்பாதிர்க்க நமது ஆரணங்குகள் சபதம் மேற்கொள்ள வேண்டும். பேசுமுன் சிந்தித்து நல்லன பேசுவோம். பரப்புவோம். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் பேணுவோம் . அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோம்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. நர்கிஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!