அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், மார்ச் 14, 2017

​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு💕💑👫🔐💯☔🌠🌋திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு கனிவார்ந்த ஸலாம்…

அஸ்ஸலாமு அழைக்கும்

துவக்கத்தில், உங்கள் இல்வாழ்க்கை சீறும் சிறப்புமாக நடைபெற என் மனமார்ந்த பிரார்த்தனைகளைக் காணிக்கையாக்குகின்றேன். மனிதவாழ்வின் அனைத்துக் கட்டங்களுக்கும் தேவையான வழிகாட்டல்களைப் போதிக்கும் மார்க்கமாக இஸ்லாம் அமையப் பெற்றுள்ளது. அக்கட்டங்களை அடையக்கூடியவர்கள் தத்தமது கட்டத்திற்குத் தக்க வழிகாட்டல்களை எடுத்துக் கொள்வது கடமையாகும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தளவில் அது ஆரம்பத்திலிருந்தே சீர்செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கேற்ற வழிகாட்டல்களை எல்லாம் அறிந்த அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே வழங்க முடியும். அத்தகைய வழிகாட்டல்களைத் தந்தவனும் எம்மிடத்தில் அதன் பிரதிபளிப்பு காணப்படவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான். எனவே, அப்போதனைகளை சமுகத்திற்கு மத்தியில் தெளிவுபடுத்தும் பாரிய பொறுப்பு உலமாக்களையே சாரும் என்ற அடிப்படையில் அதில் ஒரு முயற்சியாக இத்தாள் உங்கள் கரங்களை வந்தடைந்துள்ளது. தயவு கூர்ந்து சில நிமிடங்களைச் செலவு செய்து சற்று நிதானமாக இதனை வாசித்துப் பாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக!


அன்புடன்,
எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)

கணவன், மனைவி உரிமைகள்

திருமணம் என்பது கணவன், மனைவி ஆகிய இருவருக்கிடையில் உள்ள உறுதியான தொடர்பாகும். இத்தொடர்பு நீடிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. எனவே, இத்தொடர்பு நீடிப்பதற்குத் தேவையான கடமைகளை இஸ்லாம் இனங்காட்ட தவறவில்லை. அவை சரிவரப் பேணப்படுமிடத்து நிச்சயமாக இல்லற வாழ்க்கை இன்பமாகவும், சுகண்டியாகவும் அமையும். இந்த அடிப்படையை அல்லாஹூத்தஆலா பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

‘(மனைவியரான) அவர்களின் மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு முறைப்படி உரிமைகளும் உண்டு ஆண்களுக்கு (பெண்களாகிய) அவர்கள் மீது ஓரு படித்தரமுமுண்டு’ (அல்பகறா: 228)

இந்த வகையில் இவ்விருபாலாரினதும் உரிமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

இருசாராரும் தங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் பேண வேண்டிய உரிமைகள்
கணவனின் உரிமைகள்
மனைவியின் உரிமைகள்
 இருவரும் தங்களுக்கு மத்தியில் பேண வேண்டிய உரிமைகள்

1. இருசாராரும் தங்களுக்கு மத்தியில் நல்லுறவை மலரச் செய்தல். இந்த வகையில்

இருவரும் நற்பண்புகளைப் பேணிக்கொள்ளல்.
ஒருவரையொருவர் மதித்தல்.
கனிவாகப் பேசுதல்.
நகைச்சுவை, விளையாட்டாகப் பழகுதல்.
சிறு தவறுகளைப் பெரிதுபடுத்தாதிருத்தல்.
ஒருவரையொருவர் மனம் நோவாது நடந்து கொள்ளல்.
(உதாரணமாக பெற்றோர்களைத் திட்டுதல்)
 இதனையே அல்லாஹ் கூறும் போது:

‘மேலும், அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்’ ( அந்நிஸா: 19)

2. ஒருவரையொருவர் திருத்திப்படுத்தல்.

இதனடிப்படையில்

தம்மை அலங்கரித்துக் கொள்ளல்.
துர்வாடைகளை அகற்றல்.
அழகான ஆடைகளை அணிந்து கொள்ளல். இவ்வாறான நடைமுறைகளைப் பேணுவது, குறித்த அவ்விருவரும் தவறான வழியில் செல்வதைவிட்டும் தடுக்கும்.
 3. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.

இதன்படி

இருவரினதும் குறைகளை ஒருவருக்கொருவர் மறைத்தல்.
தம் அந்தரங்க விடயங்களை வெளிப்படுத்தாதிருத்தல்.
பிறரிடத்தில் ஒருவரையொருவர் அலங்கரிக்காதிருத்தல்.
 4. ஒருவருக்கொருவர் கனிவாக உபதேசம் செய்து கொள்ளல்.

உண்மையைக் கொண்டு வஸிய்யத் செய்தல்.
பொறுமையைக் கடைபிடித்தல்.
அல்லாஹ்வை வழிப்படுவதற்கு உதவியாக இருத்தல்.
உறவினரை இணைந்து நடக்க ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல்.
குழந்தை வளர்ப்பிக்கு உதவி புரிதல்.
 மனைவியின் கடமைகள்

1. கணவனுக்கு வழிப்படுதல்.

அவ்வாறு வழிப்படுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.

நல்ல விடயமாக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்கு மாறுசெய்யக்கூடியதாக இருக்கக் கூடாது
தனது சக்திக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
தனக்குத் தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.
2. இன்முகத்துடன் வரவேற்றல், சந்தோசப்படுத்தல்

3. வீட்டில் தரித்திருத்தல்

அல்லாஹ் கூறுகின்றான்: ‘இன்னும் (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள்’ (அல் அஹ்ஜாப்: 33)

கணவனின் அனுமதியுடன் அவசிய தேவைகளுக்காகச் செல்லல்.
கணவன் அனுமதித்த பயணங்களின் போது இஸ்லாமிய வழிமுறைகளைப் பேணிக்கொள்ளல்.
இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘கணவனின் அனுமதியின்றி ஒரு மனைவி வெளிக்கிழம்பிச் செல்வது ஹராமாகும். அப்படிச் செல்வது தண்டனைக்குறிய குற்றமுமாகும். இதன்காரணமாக அவள் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டாள்’.

தன் கணவனின் சொத்துக்களையும், பிள்ளைகளையும் பாதுகாத்தல்.
அவளது மானத்தையும் கன்னியத்தையும் பேணிக்கொள்ளல்.
கணவன் விரும்பாதவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது.
கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது.
கணவனின் சுபாவங்களைப் புரிந்து செயற்படல்.
கணவன் அழைத்தால் அவரின் அழைப்புக்கு பதிலளித்தல்.
4. அவ்வப்போது சிறந்த ஆளோசனைகளை வழங்குதல்.

5. நன்றியீனமாக நடந்து கொள்ளாதிருத்தல்.

கணவனின் கடமைகள்

1. மஹர் கொடுத்தல்

2. செலவு செய்தலும், தேவைகளைப் பூர்த்தி செய்தலும்.

3. அன்பு காட்டல்.

அநியாயம் செய்யாதிருத்தல்.
வீண்சந்தேகம் கொள்ளாதிருத்தல்.
பொறுமையைக் கடைபிடித்தல்.
4. அவள் விடயத்தில் ரோஷம் கொள்ளல்.

5. இஸ்லாமிய வழிகாட்டல்களைக் கற்றுக்கொடுத்தலும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும்.

6. பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தடுக்காதிருத்தல்.

7. எல்லோருக்கும் முன்னிலையில் கண்டிக்காதிருத்தல்.

8. அன்பளிப்புக்கள், வாழ்த்துக்கள் போன்றவற்றைப் பரிமாறல்.

9. அவளின் நல்ல செயல்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தல்.

10. அவளின் ஆளோசனைகளுக்கு இடம் கொடுத்தல்.

இல்லறம் நீடிக்க பொதுவான சில அடிப்படைகள்…

இல்லற வாழ்க்கையில் பிரச்சினைகள், சிக்கல்கள் ஏற்படுவது சகஜம். அது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட.
எவரும் குழப்பமில்லாமல் தன் வீடு இருப்பதை எதிர்பார்க்க முடியாது.
நபியவர்கள் கூட இதுவிடயத்தில் விதிவிலக்கல்ல. தமக்கு நபியவர்கள் செலவுக்குக் கொடுப்பது போதாது என்பதற்காக அவர்களது மனைவியர் சண்டையிட்ட செய்தி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். நபியவர்களின் சத்தத்தைவிட அவர்களின் சத்தம் உயர்ந்ததின் காரணமாக நபியவர்கள் ஒரு மாத காலம் அவர்களைவிட்டும் விலகியிருந்தார்கள்.
ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு எப்போதும் இடம் கொடுக்கக்கூடாது.
எப்போதும் அவசரப்படக்கூடாது, எடுத்ததற்கொள்ளலாம் சந்தேகப்படவும் கூடாது.
பிரச்சினைகளின் போது சுமூகமாக இருந்து பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டும். மற்றும் சந்தேகங்களை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் வேண்டும்.
ஆக்கம்:அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக் மதனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!