அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஜனவரி 24, 2018

சோதனைகள் வருவது எதனால் ?

சோதனைகள் வருவது எதனால் ?
ஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக  வந்துடே இருக்கு.!தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.!
கேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.?

2.அல்லாஹ்  அன்பினால் கொடுக்கும் சோதனையா.?

3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.?

4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும்.?
பொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.?
தெளிவான விளக்கம் தாங்க.!


🔵பதில்🔵

இறைநம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஒரு விஷயம் அல்லாஹ் நமக்கு விதித்ததை தவிர வேறொன்றும் நடக்காது என்பது.

அல்லாஹ் தன் திருக்குரானில் முழுமையாக நன்மை,தீமையை அருளியுள்ளான். அதன் படி நாம் நன்மையான காரியங்களை பின்பற்றியும்,தீமையான காரியங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். இது நம் வாழ்வியல் முறை. இதற்கிடையில் தாமாக ஏற்படும் நல்லது கெட்டதுக்கு இதுதான் காரணம் என ஆராய்வது கூடாது. இது போன்ற குழப்பத்தில் தான் ஷைத்தான் மிக எளிதாக ஊடுருவுவான்.

நாம் ஈமானில் உறுதியுள்ளவர்களாக இருந்தால் நம் அறிவுக்கெட்டிய விஷயத்தை தாண்டி ஆராயக்கூடாது. நமக்கு அல்லாஹ் கொடுத்த பகுத்தறிவை கொண்டு நமக்குட்பட்ட விஷயங்களைத்தான் சிந்திக்க வேண்டும்.

அதை விடுத்து நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்களுக்கு இது காரணமா?அது காரணமா? என்று யோசிப்பது இஸ்லாத்திற்கு முரணான சிந்தனையாகும்.

அல்லாஹ் தான் நாடியதை தவிர வேறொன்றும் நமக்கு நடக்காது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளான். இது எதுவானாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதை தாண்டி நாம் சிந்திப்பது இறைநம்பிக்கைக்கு மாற்றமான ஒன்றாகும்.

அல்லாஹ் இத்தகைய சூழ்நிலையில் பொறுமையை கடைபிடிக்க மட்டும்தான் கூறியுள்ளான்.

இஸ்லாத்தை பொறுத்தவரை ஒருவருடைய சுமையை மற்றவர்கள் ஏற்க முடியாது.
அவரவர்கள் செய்ததின் பலன் அவரவர்களுக்கே.
அல்லாஹ் தான் நாடியவருக்கு சோதிப்பான், அதற்கான காரணம் இதுதான் என்று நாம் அனுமானிக்க முடியாது.

நம்மை விட பலப்பல மடங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட நபி மார்கள், அல்லாஹ்விடத்தில் விடை கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் கூட,தொடர்ந்து துஆ செய்தார்களே தவிர இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டதில்லை.

இங்கு,நல்லவர்கள்,கெட்டவர்கள்,முஸ்லிம்கள்,முஸ்லிமல்லாதவர்கள் அனைவருக்கும் துன்பம்,இன்பம்,மரணம்,சோதனை,நோய் ஏற்படுகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த காரணத்தால் ஏற்படுகிறது என காரணங்களை நாம் ஆராயும் அறிவை அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லை.

எனவே இத்தகைய துன்பங்களின் போது தொடர்ந்து பிரார்தித்து அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்.

📚📖ஆதாரங்கள்:

📒
قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾

9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📒
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَغْفِرُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ  ﴿5:40﴾

5:40. நிச்சயமாக அல்லாஹ் – அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.

📒
قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۚ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ  ﴿10:49﴾

10:49. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”

📒5645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 75. நோயாளிகள்

📒ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ 2319

📒உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

📒எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

📒அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

📒ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

📒6943. கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி “எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?“ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹள்ரமவ்த்“ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்“ என்றார்கள்.6
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க

=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!