செவ்வாய், டிசம்பர் 10, 2019

சமூக வலைத்தளங்களும் , நம் சமுதாயமும் !

அல்லாஹ்வின் திருப்பெயரால் .....
இன்றைய முஸ்லிம் சமுதாயம் எப்படி இருக்கிறது? சமூக வலைத்தளங்களில் எப்படி பாவிக்கிறார்கள்?

நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால் தம்மை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் அழகாக செய்கிறார்கள். இப்படித்தான் பெரும்பாலும் முஸ்லிம்களின் வாழ்க்கை போய்க்கொண்டுயிருக்கிறது .
சிலர் நன்மைகளை செய்வதாக நினைத்துக்கொண்டு தீமைகளை சம்பாதிக்கிறார்கள்.  எந்த செய்தியை பதியவேண்டும் , எதை பகிரவேண்டும் என்று அறியாமல் இந்த சமூக வலைத்தளங்களில் பாவித்துகொண்டுயிருக்கிறார்கள் ! மற்றவர்கள் குறைகளை வெளிப்படையாக பதிவு செய்கிறார்கள்.  மற்றவர்களின் அந்தரங்க விடயங்களை புண்ணியமாக நினைத்து பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். நம்முடைய சமுதாயத்தை நாமே நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறோம் ! நம்முடைய சமுதாயத்தின் நிலைமை ரொம்ப நாளுக்குநாள் மோசமாக போய்க்கொண்டுயிருக்கிறது என்பதை நினைத்தால் ரொம்ப மன வேதனையாக இருக்கிறது. சிலர் முகநூலில் பதிவுகளை போடுவதை பார்த்தால் , மனசுக்கு ஒரு வலி தருகிறது.  விட்டத்தை  நோக்கி துப்பினால் அந்த  எச்சில் நம்மீது தான் விழும் என்ற அறிவு கூட சிலரிடம் இல்லை . நம் சமுதாயத்தை நாமே இழிவு செய்வதா ? விமர்சனம் என்ற பெயரில் கழுவி கழுவி ஊற்றுவதா ?  சிந்திக்கமாட்டோமா ? அல்லாஹ் மறுமையில் விசாரணை செய்வான் , கேள்வி கேட்பான் என்ற அச்ச உணர்வு இன்னும் வரவில்லையா ?

இன்று முஸ்லிம் சமுதாயம் பல பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு புது புது பிரச்சனைகள் வந்துகொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று  தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறது.  நம்மை அழிக்க எதிரிகள் தேவை இல்லை , நாமே நம்மை ஒருவரையொருவர் அழித்துக்கொள்கிறோம் . எதிரிகள்  சூச்சகமாக கையாளுகிறார்கள் நம்மை பிரித்து ஒழித்து கட்டவேண்டும் என்று. நாம் இன்னும் இயக்க போதையில், அமைப்பு போதையில், கட்சி போதையில் இருக்கிறோம். நாம் இன்னும் மயக்க நிலையில் தான் இருக்கிறோம்  !

ஒருவர் தவறு செய்கிறார் , அந்த தவறை அவரிடம் நேரடியாக சென்று கூறி அவரை அந்த தவறிலிருந்து  விடுபட செய்வது ஒரு அழகான வழிமுறை ! அதைவிட்டுவிட்டு  முகநூலில் அல்லது whats app மூலமாக அந்த தவறை சுட்டிக்காட்டி  இழிவு படுத்துவது ஒரு கேடுகெட்ட வழிமுறை ! இதைத்தான் நிறைய பேர்கள் நல்லது என்று செய்து வருகிறார்கள் !

ஒரு தரகர் (திருமண தரகர் ) உரையாடுகிறார் தொலைபேசி மூலமாக ஒரு மாப்பிளை  வீட்டாரிடம் . மாப்பிள்ளையின் தாய் தான் பேசுகிறாள் அந்த தரகரிடம் . பேசிக்கொண்டு இருக்கும்போது ,  தர்க்கம் ஏற்படுகிறது .பிறகு  என்ன நடக்கிறது  ? அந்த தரகர் உறையாடலை பதிவு செய்து , வாட்ஸ் அப்பில் அந்த உரையாடல் பதிவை போடுகிறார்  , அந்த பதிவு எங்கு பார்த்தாலும் பரவுகிறது.  இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் !  இப்படி செய்வது . அந்த செயலை செய்தது  இருவரில் யார் என்பது உறுதியாக சொல்லமுடியாது ! இதை எதற்காக கூறுகின்றேன் என்றால் , இப்படியெல்லாம் செய்கிறார்களே என்ற ஒரு ஆதங்கம் தான் ! அந்த பதிவை சிலர் மற்றவர்களுக்கு பகிரவும் செய்கிறார்கள்  இதுவும் ஒரு தவறான செயலாகும். இதுபோன்ற செயல்கள் நிறைய இருக்கிறது, நடக்கிறது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!