ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

நபி பெருமானார் (ஸல் ) அவர்களின் பொன்மொழிகளை தெரிந்துகொள்வோம் !!!

உலகத்தில் எத்தனையோ பேர் எவ்வளவோ விஷயங்களை சொல்லிருபார்கள் ,அதெல்லாம் நமக்கு பலன் தரக்கூடிய விஷயம் இல்லை ,அதைகொண்டு நாம் வாழ்கையில் பின்பற்ற முடியாது ,சில பேர் ரேடியோ மூலமாக சில கருத்துக்கள் சொல்வார்கள் ,டிவி மூலமாகவும். இப்படி பல வகையில், அவர்களுடைய கருத்துகளையும் ,வாழ்கையின் அடிப்படை விஷயங்களையும் நாம் தெரிந்திருக்கலாம் அல்லது கேள்விபட்டிர்கலாம் !மாறாக ,1432 ஹிஜ்ரி ஆண்டுக்கு முன்னால், அல்லாஹ்வின் இறுதி தூதர் நபி பெருமானார் (ஸல் ) அவர்களின் பொன்மொழிகள் , நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் அவைகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் .நம்மில் சிலர் உலக விஷயங்களில் மட்டும் ஆர்வமாக இருப்பார்கள் ,நபி பெருமானார் (ஸல் ) அவர்களின் பொன்மொழிகளை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காது .இன்ஷாஅல்லாஹ் நாம் அவசியம் தெரிந்துகொள்வோம் !
எனது உம்மத்தில் மறுத்தவர்களை தவிர மற்ற அனைவரும் சுவனம் செல்வர் ,,என்பதாக ரசூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் கூறியபொழுது ,யாரசூலுல்லாஹ் (சுவனம் செல்வதை விட்டும் )யார் மறுப்பார்கள் ?என சகாபாக்கள் கேட்டார்கள் .எனக்கு வழிபட்டவர் சொர்க்கத்தில் பிரவேசிப்பார் ,எனக்கு மாறு செய்தவர் ,நிச்சயமாக சொர்க்கம் செல்வதை விட்டு மறுத்துவிட்டார் ,,என நபி (ஸல் ) அவர்கள் பதில் அளித்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .ஆதாரம் :நூல் புகாரி .

நன்மை ,தீமை யாவும் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் படியே நடக்கின்றன என்பதை நம்ப்பிக்கை கொள்ளாதவரை எவரும் முஃமினாக ஆக முடியாது ,,என்று ரசூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி ) அவர்கள் வாயிலாக அவர்களின் பேரனார் ஹஜ்ரத் அம்ருப்னு ஷுஜப் (ரஹீ ) அறிவிகிறார்கள் .நூல் முஸ்னத் அஹ்மத் .
ஆதமுடைய மகன் காலத்தை சபித்து என்னைத் துன்புறுத்துகிறான் ,ஆனால் நான் தான் காலம் ,என் கட்டுப்பாட்டில் தான் செயல்கள் அனைத்தும் உள்ளன , என் விருப்பபடி இரவு ,பகலை மாறி ,மாறி வரச் செய்கிறான் ,,என்று அல்லாஹுதஆலா கூறியதாக நபி (ஸல் ) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள். நூல்:

புகாரி .

சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ ,அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும் ,ஒரு சமூகத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்க நாடிவிட்டால் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குகிறான் .அச்சோதனையைப் பொருந்திக் கொள்பவரை அல்லாஹுதாலாவும் பொருந்திக் கொள்கிறான் .யார் அச்சோதனையைக் வெறுக்கிறார்களோ அல்லாஹுதாலாவும் அவரைப் வெறுக்கிறான் ,,என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .நூல்: திர்மிதீ .

ஒவ்வொரு காரியமும் தக்தீரில் (விதியில் )எழுதப்பட்டுவிட்டது ,(மனிதன் )விளக்கமற்ற தன்மையும் ,இயலாத் தன்மையும் ,புத்திசாலித்தனமும் ,திறமை பெற்றிருப்பது உள்பட எல்லாம் விதிப்படியே நடைபெறுகின்றன ,,என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .நூல் :முஸ்லிம் .

எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி ,எவர் தன மன இச்சைப்படி வாழ்ந்து ,(அல்லாஹுதஆலா என்னைத் மன்னித்து விடுவான் என்று)அல்லாஹுதாலாவின் மீது மேலேண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர் ,, என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி)அவர்கள் அறிவிகிறார்கள்.நூல்:திர்மிதீ .

ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் கூறிகிறார்கள் ,ரசூலுல்லாஹி (ஸல்)அவர்கள் மயித்தை அடக்கம் செய்த பின் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு , ,,உங்களுடைய சகோதருக்காக அல்லாஹுதாலாவிடம் மன்னிப்பு தேடுங்கள் ,கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொது உறுதியான உள்ளத்துடன் இருக்கவும் அல்லாஹுதாலாவிடம் கேளுங்கள் ,ஏனெனின் தற்சமயம் இவரிடம் கேள்வி கேட்கபடுகிறது ,,என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உஸ்மான் (ரலி)அவர்கள் சொன்னார்கள் .நூல்:அபூதாவூத் .
சொர்க்கத்தில் உங்களுடைய ஒரு வில் அளவுள்ள இடம் அல்லது ஒரு பாதத்தின் அளவுள்ள இடம் உலகம் ,உலகிலுள்ள யாவற்றை விடவும் சிறந்தது ,சுவர்க்க கன்னிக்களில் ஒரு பெண் பூமியை எட்டிப் பார்த்தால் ,சொர்க்கத்தில் இருந்து பூமிவரை (உள்ள இடைவெளி)ஒளிமயமாகிவிடும் ,நறுமணத்தால் நிரம்பிவிடும் ,சுவர்க்கக் கன்னியின் மேலாடையு (முக்காடு)ம உலகம் ,உலகிலுள்ளவைகளிவிடவும் மேலானது ,,என்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள் .நூல்:புகாரி.
மக்களே ,அல்லாஹுதாலாவிடம் பாவ மன்னிப்பு தேடுங்கள் ,ஏனெனில் நான் தினமும் நூறு முறை அல்லாஹுதாலாவிடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன் ,, என்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அங்க்று (ரலி) அறிவிகிறார்கள்.நூல்:முஸ்லிம்.

ஏமாற்றுபவர்,கருமித் தனம் உள்ளவர் ,உபகாரம் செய்த பின் சொல்லிக்காட்டுபவர் ஆகியோர் சுவனம் செல்லமாட்டார்கள் ,,என ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள் .நூல்:திர்மிதீ .

நன்மையை ஆதரவு வைத்து , ஒருவர் தன் வீட்டாருக்குச் செலவழித்தால் அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது ,,என்று ரசூலுல்லாஹி (ஸல்)அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ மஸ்வூத் (ரலி)அவர்கள் அறிவிகிறார்கள் .நூல்:புகாரி.

அல்லாஹுதாலாவின் மீதும் ,மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும் ,,என்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி)அவர்கள் அறிவிகிறார்கள் .நூல்:புகாரி.

இயற்கையிலேயே ஒரு முஃமினிடம் (நல்ல ,தீய )எல்லாத் தன்மைகளும் இருக்க முடியும் ,ஆயினும் ,பொய் சொல்லும் தன்மையும் மோசடி செய்யும் தன்மையும் ஒரு முஃமினிடம் இருக்க முடியாது ,,என்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாம (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள் .நூல்:முஸ்னத் அஹ்மத் .

எளிதான முறையில் மக்களுடன் பழகுங்கள் ,அவர்களுடன் கடினமான முறையில் நடந்து கொள்ளாதீர்கள் ,நற்செய்திகளை சொல்லுங்கள் ,பயமூட்டும் செய்திகளை சொல்லாதீர்கள் ,,என்று ரசூலுல்லாஹி (ஸல்)அவர்கள் கூறியதாக ஹஜ்ரத அனஸ் (ரலி)அவர்கள் அறிவிகிறார்கள்.நூல்:புகாரி.
தெளிவுரை:மக்களுக்கு நல்ல அமல்கள் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கூலியை பற்றிய நற்செய்திகளைக் கூறுங்கள் .அவர்கள் அல்லாஹுதாலாவின் ரஹ்மத்திலிருந்து நிராசையடைந்து தீனைவிட்டு விளகிபோகும் அளவு அவர்களுடைய பாவம்களுக்குரிய தண்டனைகளைக் கூறி அவர்களைப் பயமுறுத்தக் கூடாது என்பதாம் ...இன்ஷாஅல்லாஹ் தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!