அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, நவம்பர் 18, 2012

அல்லாஹ்வைப் புகழ்தல்,நன்றி செலுத்துதல் !நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல்!

அல்லாஹ்வைப் புகழ்தல்,நன்றி செலுத்துதல் !நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல்! 
www.islam-bdmhaja.blogspot.com
அல்லாஹு தஆலா கூறுகிறான்:

என்னை நினைவு கூறுங்கள் !நான் உங்களை நினைவு கூறுகிறேன்.எனக்கு மாறு செய்யாதீர்கள்.
                                                                                                      (   அல்குர்ஆன்  2:152)
நீங்கள் நன்றி செலுத்தினால் ,நான் உங்களுக்கு அதிகபடுத்துவேன். (அல்குர்ஆன் 14:7)

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என (நபியே)நீர் கூறுவீராக!    (அல்குர்ஆன் 17:11)

அவர்களின் கடைசிப் பிராத்தனையாகிறது, அகிலங்களின் அதிபதியாகிய அல்ல்ஹ்வுக்கே எல்லாப் புகழும் என்பதாகும்.                                                                            (அல்குர்ஆன் 10:10)

ஹதீஸ்கள்:

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:நபியவர்கள் மிஃராஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்று பால்,மது ஆகிய இரு கோப்பைகள் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது .நபி(ஸல்) அவர்கள் இரண்டு கோப்பைகளையும் பார்த்துவிட்டு பாலின் கோப்பையை எடுத்துக் கொண்டார்கள்.
அப்பொழுது ஜிப்ரயீல் (அலை)அவர்கள்,இயற்கைத் தன்மையின் பக்கம் உமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ;நீர் மதுவை எடுத்திருந்தால்,உம உம்மத்தினர் வழிகெட்டிருப்பார்கள் எனக் கூறினார்கள்.                                                              (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:அல்ஹம்து லில்லாஹ் கூறுவது கொண்டு தொடங்கபடாத ஒவ்வொரு முக்கிய விஷயங்களும்,பரகத்தை (அபிவிருத்தியை)விட்டு நீங்கியவையாகும்.                                                                 (அபூதாவூது)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:ஓர் உணவை உண்டு,அதற்காக அல்லாஹ்வைப் புகழகூடிய மற்றும் ஒரு பானத்தை பருகி அதற்காக அல்லாஹ்வைப் புகழக் கூடிய அடியாரை நிச்சயமாக அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான். (முஸ்லிம்)

அல்லாஹு தஆலா கூறுகிறான் :
நிச்சயமாக அல்ல்ஹ்வும் அவன் மலக்குகளும் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறார்கள்:முஃமின்களே!நபி(ஸல்) அவர்கள் மீது நீங்களும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்!
                                                                                     (அல்குர்ஆன் 33:36)

அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன்.யார் என் மீது ஒரு முறை (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் என) ஸலவாத் கூறுகிறாரோ,அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான் .(தன் அருகொடைகளைப் பொழிகிறான்)                                                             முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்:கியாமத் நாளில் என்னிடம் மிக மேலான அந்தஸ் துடையவர்,மக்களின் என் மீது அதிகமாக ஸலவாத் கூறுபவர் ஆவார்.
                                                                                         (திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:என்னைப் பற்றி கூறப்பட்டு அப்பொழுது என் மீது ஸலவாத் கூறாதவரின் மூக்கு மண்ணைத் தழுவுமாக ! (நாசமாகட்டுமாக )
                                                                                                (திர்மிதி)
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள்:என் மண்ணறையை பெருநாளாகக் கொண்டாடப்படும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்!(எனினும்)என் மீது ஸலவாத் கூறுங்கள்!நிச்சயமாக உங்களின் ஸலவாத் (உலகில்) எங்கிருந்தாலும்,என்னை வந்து சேருகிறது.            (அபூதாவூது)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்: யாரிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூற வில்லையோ அவர் கஞ்சனாவார்.                        (திர்மிதி)

அபூ முஹம்மது கஃபு பின் உஜரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் நபி (ஸல்) எங்களிடம் .அப்பொழுது நாங்கள் யாரசூலல்லாஹ்!தங்களுக்கு ஸலாம் கூறுவது எவ்வாறு என்பதை  நாங்கள் அறிந்துள்ளோம்.(ஆனால்)தங்கள் மீது ஸலவாத் கூறுவது எவ்வாறு ? என்று கேட்டோம் அதற்க்கு நபி(ஸல்) அவர்கள்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீமா இன்னக்க ஹமீதுன் மஜீது அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம ஹமீதுன் மஜீது.

அல்லாஹ்வை நாம் எப்படி நினைவு கூறுவது ,நினைவு கூறுவதினால் என பலன் என்பதை நாம் அறிந்தோம் .அவனுக்கு நன்றி செலுத்துவது ,அவனை அதிகமாக புகழ்வது ,அவனை பற்றி நினைவு கூறுவது அதனால் நமக்கு கிடைக்கும் இரு உலக பலன் ,நன்மைகள் எல்லாம் அறிவோம்! இருப்பினும் நம்மில் எத்தை பேரு அறிந்து இருக்கிறோம் ? நன்மை ,தீமை பற்றி தெரியாத சில பாமரமக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .அவர்களின் மன போகில மார்க்கம் என்று செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் ,நபி (ஸல்) அவர்கள் மீது எப்படி ஸலவாத் சொல்வது என்பது கூட இன்னும் தெரியாமல் சிலர் இருக்கிறார்கள் ,நபி (ஸல்) அவர்களை பற்றிக் சொல்லும் பொது அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்பது கூட தெரியாத மக்கள் உண்டு ,அப்படி சொல்லாதா மக்கள் மீது நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்பது ஹதீஸின் மூலமாக அறியலாம் !அல்லாஹ்வை நாம் அதிகம் அதிகம் நினைவு கூருந்து ,அவனுக்கு நன்றி செலுத்தும் கூட்டமாக நம்மை அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !!! அவனின் தூதர் அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் மீது ,நபி (ஸல்) அவர்கள் எப்படி கற்று தந்தார்களோ அப்படி நாமும் அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத் சொல்ல ,அந்தஸ் பெற கூட்டத்தில் நம் அனைவரையும் ஆக்கி அருள் செய்வானாக ..ஆமீன் ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!