திங்கள், ஏப்ரல் 01, 2013

அறிந்துகொள்ளுங்கள்! நன்மையை அள்ளிகொள்ளுங்கள் ..

ஈமானின் சுவையை பெரும் மூவர் !!! அறிந்துகொள்ளுங்கள்! நன்மையை அள்ளிகொள்ளுங்கள் ..

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :மூன்று விஷயங்கள் யாரிடம் இடம் பெறுகின்றனவோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்வார் .
1) மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் ,அவனுடைய தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.
2)அவர் எம்மனிதரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பார் .
3)இறை நிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை நீக்கி ஈடேற்றம் அடையச் செய்து பின் ,மீண்டும் அந்த நிராகரிப்பின் பக்கம் திரும்புவதை,தம்மை நெருப்பில் வீசபடுவதை வெறுப்பதைப் போன்று வெறுப்பார் . (புகாரி,முஸ்லிம்)

அற்ஷின் அருமை நிழல் பெரும் எழுவர்: 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பகர்தந்தாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :அல்லாஹ்வின் (அர்ஷின் )நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது (அர்ஷின் )நிழலை எழு பேர்களுக்கு கொடுப்பான் .
1) நீதமிகு தலைவர்
2)அல்லாஹுதஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த வாலிபர்
3)இறை இல்லங்களான மஸ்ஜிதுகளுடன் இதயம் இணைக்கப்பட்டுள்ள மனிதர்
4)அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள் ;அன்நேசதின் மீதே ஒன்று சேருகிறார்கள் ;அதன் மீதே பிரிகிறார்கள் .
5)அழகும், வமிசச் சிறப்பும் நிரம்பிய பெண் (விபச்சாரத்திற்கு) அழைத்தால் ,நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்று கூறும் (கற்புடைய) மனிதர் .
6)தம் வலது கரம் செலவளிப்பதை இடது கரம் அறியாதவாறு மறைவாக தர்மம் செய்யும் மனிதர்.
7)தன்மையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால் அழுது ) இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கும் மனிதர் . (புகாரி,முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: என் உயிர் எவன் கைவசமிருக்கிறதோ அவன் (அல்லாஹ்வின்) மீது ஆணையாக !நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனத்தில் நுழைய முடியாது .நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது .நீங்கள் எவ்விஷயத்தை கடைபித்தால் ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்துபவர்களாக ஆவீர்களோ அவ்விஷயத்தை உங்களுக்கு நான் அறிவித்துதரட்டுமா?(அது)உங்களுக்கு மத்தியில் ஸலாமை பரத்துங்கள் (நீங்கள் ஒருவர்க்கொருவர் அதிகம் ஸலாம் கூறிக் கொள்ளுங்கள் .அப்பொழுது உங்களுக்கு மத்தியில் அன்பு உருவாகும் ) ஆதராம் முஸ்லிம் .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!