அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஜூன் 30, 2013

நேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல்அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நன்மையின் மீதும்  பயபக்தியின் மீதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வீர்களாக!
(முஃமின்களே ) உங்களின் நன்மையின் பக்கம் அழைக்கும் ஒரு கூட்டத்தினர் இருந்து வரட்டும்....

ஹதீஸ்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ மஸ்வூது உக்பா பின் அம்ரில் அன்சாரி அல்  பத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவரொருவர் யாதொரு நன்மையை (பிறருக்கு ) அறிவித்துக் கொடுக்கிறாரோ அவருக்கு அதைச் செய்பவரின் நன்மை போன்றது உண்டு . (முஸ்லிம்)


அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் நேர்வழியின் பால் அழைக்கிறாரோ , அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு . அவர்களின் நற்கூலிகளில்  எதுவும் குறையாது . யார் தீயவழியின் பால் அழைக்கிறாரோ , அவருக்கு அத்தீய வழியைப் பிபற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு . அதனால் அவர்களின் பாவங்கள் எதுவும் குறைவதில்லை . (முஸ்லிம்)

அல்லாஹு தஆலா கூறுகிறான் :
.....நன்மைக்கும் இறையச்சத்துக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் !...
காலத்தின் மீது ஆணையாக ! நிச்சயமாக மனிதன் நஷ்ட்டத்தில் இருக்கிறான் ; ஈமான் கொண்டு ,நல் அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் , பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் கொள்கின்றனரே அவர்களைத் தவிர .

இமாம் ஷாபிஈ (ரஹ் ) கூறுகிறார்கள் : மனிதர்களில் பெரும்பாலோர் இந்த (அழாமான அழகிய கருத்துக்கள் நிரம்பிய) அத்தியாயத்தை சிந்திப்பதை விட்டும் கவனக் குறைவாக உள்ளனர் .

அண்ணல் நபியவர்கள் நவின்றதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : உங்களில் ஒருவர் தமக்கு எதனை நேசிக்கிறாரோ, அதனையே தம் சகோதரருக்கும் நேசிப்பவராக ஆகும் வரை (பரிபூரண )முஃமினாக ஆகமாட்டார். (புகாரி,முஸ்லிம்)

விளக்கவுரை :
இங்கு அவர் நேசிப்பது என்பதின் கருத்து : நன்மைகள் ,நல்வழிப்பாடுகள் ஆகும்  அவர் நன்மைகளை தமக்கும் விரும்ப வேண்டும் ; பிறருக்கும் விரும்ப வேண்டும். தீமையை அவர் தமக்கும் விரும்ப கூடாது .பிறருக்கும் விரும்பலாகாது .

அண்ணல் நபியவர்கள் நவின்றதாக ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்: என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் (அல்லாஹ் ) மீது ஆணையாக ; நீங்கள் நன்மையை ஏவி வர வேண்டும்! தீமையைத் தடுத்து வரவேண்டும் ! இல்லையெனில் அல்லாஹ்  உங்கள் மீது தனது வேதனையை இறக்கி வைக்கக் கூடும். பின்னர் நீங்கள் அவனை (தூஆவின் மூலம்) அழைப்பீர்கள்; (ஆனால்) உங்களது துஆ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  (திர்மிதி)

இன்று அல்லாஹ்வின் கிருபையால் நிறைய இஸ்லாமிய தளங்கள் வந்துள்ளன , அவைகளின் மூலமாக நல்ல விஷயங்கள் மக்களுக்கு போய் சேருகின்றன ! (சில தளங்கள்  உள்ளன அவைகள் இயக்கத்தின் கீழ் உள்ளன அது நமக்கு தேவை இல்லை)  பயன் தரும் இஸ்லாமிய தளங்கள் மூலமாக நாம் நிறைய (தெரியாத) விஷயங்களை  பெறலாம் ! சிலது எந்த ஆதாரமும் இல்லாமல் கேள்விப்பட்டதை எல்லாம் பகீர் செய்கிறார்கள்  ,இதனால் சில மக்கள்கள் குழம்பி விடுகிறார்கள் . இன்று facebook  மூலமாக நல்ல விடயங்கள் நாம் தெரிந்து கொள்ள முடியும் , சில தகவல்கள்  எந்த ஆதாரமும் இல்லாமல் இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள், இன்னும் பலகீனமான ஹதீஸ்கள்  தருகிறார்கள் ! அவர்கள் கொஞ்சம் சிந்திக்கவும் ! மார்க்க விடயத்தில் எதுவும் விளையாட்டாக செய்ய கூடாது , கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் ) மக்களுக்கு அறிவிக்க கூடாது !

அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருகிறான்...        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!