அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஜூலை 02, 2013

எது நிலையானது ?


அல்லாஹு தஆலா கூறுகிறான் :
....(முஃமின்களே !) நன்மைகளுக்கு நீங்கள் விரைந்து செல்வீர்களாக!....
                                    (அல்குர்ஆன் 2:148)
(முஃமின்களே !) நீங்கள் உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைவீர்களாக ! அதன் (சுவனத்தின்) விசாலமாகிறது, வானங்களும் பூமியுமாகும் ; பயபக்தியாளர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது .
                                     (அல்குர்ஆன் 3:133)


நபியவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: இருள் நிறைந்த இரவின் பகுதிகள்  போல் (அடுக்கடுக்கா வரும்) குழப்பங்களுக்கு முன்பாக நல்  அமல்களைக் கொண்டு முந்திக் கொள்வீர்களாக! (அந்நேரத்தில்) ஒரு மனிதன் காலையில் முஃமினாக இருப்பான். மாலையில் இறை நிராகரிப்பாளனாக மாறி விடுவான் .அல்லது மாலையில் முஃமினாக இருப்பான் , காலையில் இறை நிராகரிப்பாவனாக மாறிவிடுவான் . உலகின் அற்பமான பொருளுக்காகத்  தனது தீனை விற்று விடுவான். (முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே! எவ்வகை தர்மம், நற்கூலியால் பெரிது என வினவினார் .அதற்க்கு நபியவர்கள் , நீர் உடல் நலமுள்ளவராகவும் ,வறுமையை அஞ்சுபவராகவும் ,செல்வச் செழிப்பை ஆசிப்பவராகவும் இருக்கிற நிலையில் நீர் தர்மம் செய்வதாகும். உம் உயிர் தொண்டைக் குழியை அடைந்து (உம் மரணத் தருவாயில் ) இன்னார் இன்னாருக்கு இவ்வளவு இவ்வளவு என்று நீர் (வஸிய்யத் ) கூறும் வரை அதனைப் பிற்படுத்த வேண்டாம் எனப் பகர்ந்தார்கள். (புகாரி ;முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) பகர்ந்தார்கள் ஏழு  விஷயங்களுக்கு முன் நல் அமலகளிக் கொண்டு முந்திக் கொள்ளுங்கள்.
(1)மறதியில் ஆழ்த்தும் வறுமை.(2)அநீதி இழைக்கத் தூண்டும் செல்வம்.(3) உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்.(4) சொல்லைப் பலவீனப்படுத்துவிடும் முதுமை. (5) விரைந்து வரும் மரணம். (6)தஜ்ஜால் (அவனது வருகை)அவன் எதிர்பார்க்கப்படும் மறைவான விஷயங்களில் கெட்டவன் . (7)இறுதித்தீர்ப்பு நாள் .(அது)  மிகக்கடினமானதும் மிககசப்பானதுமாகும் .(திர்மிதி)

விளக்கவுரை:
குழப்பங்கள் நிறைந்துள்ள காலகட்டங்கள் தோன்றுமாதளால் , நல் அமல்களை விரைந்து செய்து நன்மைகளின் பொக்கிஷங்களை நாம்  நிறைத்துக் கொள்ள வேண்டும்.
தர்மம் செய்யலாம் அழகிய அறப்பணிகள் ஆற்றலாம் என்ற நல்ல எண்ணங்கள் ஏற்படும் நேரங்களிலே அவைகளை விரைந்து செய்வது சாலச் சிறந்ததாகும் . நன்றே செய்கே! அதுவும் இன்றே செய்க! என்ற பொன்மொழிக் கொப்ப நன்மைகளை விரைந்து செயல்படுத்த விழைதல் வேண்டும்.
இது சுர்க்கமான விளக்கம்!

அல்லாஹ் நம் அனைவரையும் நல் அமல்கள் விரைந்து செய்யும் கூட்டத்தில் ஆக்குவானாக ! ஆமீன்

அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான்.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!