அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஆகஸ்ட் 10, 2013

பெண்ணே ஒரு நிமிடம்!

பெண்ணே ஒரு நிமிடம்!

காதல் காதல் காதல் என்று நான் காதலனுடன் சென்றேன் , காதல் மட்டும் போதும் என்று நினைத்து வீட்டை விட்டு ஓடி வந்தேன்
, உறவுகளை விட்டு பிரிந்து வந்தேன் , அவர்கள் சேர்த்து வைத்த பணத்தையும் , நகைகளையும் எடுத்து வந்தேன் . அவர்கள் என்னை ஆசையாகவும் , பாசமாகவும் வளர்த்து வந்தார்கள் , காதலுக்காக அவர்களை நான் வெறுத்து ஓடி வந்தேன். கொண்டு வந்த பணமும் செலவு ஆகிவிட்டது , நகைகள்தான் மிஞ்சியது ! அவைகளையும் விற்று வேற வழி தெரியாமல் வாழ்ந்து வந்தோம் ! உதவ ஆள் இல்லை , உதவி கேட்க்க எந்த ஆளும் தெரியவில்லை ! வாழவும் முடிய வில்லை , வாழவும் தெரிய வில்லை ! வாழ்கையின் பொருளை தேட மறந்து விட்டேன் ! வாழ்வதற்கு பொருளை தேடி அலைகிறோம்! ஆசை அறுபது நாள் ,மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள் ! அதுபோல தான் என் வாழ்கையில் நடந்தது . நான் கொண்டு வந்த பொருள்களையும் இழந்தேன் , என் கற்பையும் இழந்தேன் , அன்று தான் உணர்ந்தேன் ! அவன் என்னையும் , என் பொருள்களையும் அனுபவித்து விட்டு , என்னையும் தனியே விட்டு விட்டு அவன் சென்று விட்டான் . இது தான் காதல் ! நான் தனி மரமாக நின்று கொண்டு இருக்கிறேன் ! வாழ்வதா ? அல்லது சாவதா ? என்று நினைத்து தத்தளித்து கொண்டு இருக்கிறேன் ! வேதனையின் வலி இன்று நான் உணர்கிறேன் ! நான் ஓடி வந்த பிறகு , என் பெற்றோர்கள் இதைவிட அதிகமாக வேதனை  அனுபவித்தார்கள் என்பதை நான் இன்று சிந்திக்கிறேன் ! நான் இழந்தது அதிகம் , நான் காதலில் விழுந்தது ரொம்ப வேகம் . ஒரு நிமிடம் சிந்திக்காமல் , ஒரு வாழ்கையை இழந்தேன் ! பெற்றோர்களை நினைக்காமல் , காதலனை நினைத்தேன் ! பெற்றோர்களை மதிக்காமல் ,காதலை பெரிதாக நினைத்தேன் ! காதல் என்ற போர்வையில் ஒரு காமூகன் அவன் என் உடலையும் , பொருளையும் நேசித்தான் என்பதை நான் இன்று தாமதமாக யோசிக்கிறேன் ! நான் பெற்றோரை நேசிக்க வில்லை ! ஒரு காமுகனை நேசித்தேன் என்று நினைக்கும் பொது , நான் ஒரு பெண்ணா என்று நான் என்னையே வெறுக்கிறேன்! காதலை நம்பி வந்த பெண்களின் நிலை : ஒன்று தற்கொலை அல்லது விபச்சாரம் இது தான் முடிவு . எங்கு பார்த்தாலும் ஆபாசங்கள் , எதிலும் ஆபாசங்கள் , இன்டர்நெட் மூலமாக வரும் நிறைய தளங்களில் காம கதைகள் , காதல் கதைகள் , காம லீலைகள் ! ஆசைகளை தூண்டும் வகையில் சில கூட்டம் தூண்டி போடிகிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்!
வெட்கம் இல்லாமல் போனது சில பெண்களுக்கு , வசதியாக போனது சில ஆண்களுக்கு ! வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் உண்டு  , அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களும் உண்டு . வெட்கம் இல்லை என்றால் எது வேடுமானாலும் செய்து கொள் என்று நபிமொழி உண்டு ! வெட்கம் ஒரு ஈமானின் கிளையாகும் !

இஸ்லாமிய பெண்களே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்!

இது கதையாக இருந்தாலும் , இதுபோன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது .

அல்லாஹ்  வாலிப ஆண்களையும் , பெண்களையும் இந்த காதலை விட்டு பாதுக்காபானாக !  ஆமீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!