அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஆகஸ்ட் 10, 2013

சிந்திக்க மாடீர்களா ?

சிந்திக்க மாடீர்களா ?

எவனுடைய கையில் ஆட்சி இருகின்றதோ அவன் பாக்கியவான் ; மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் .


உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் , வாழ்வையும் படைத்தான் ; மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன் ; மிக மன்னிப்பவன் . அல்குர்ஆன் : பகுதி :29 ,அத்தியாயம் 67: வசனம் 1,2)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும் ,உங்களுடைய மக்களும் , அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களை பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள் தாம் நஷ்ட்டமடைந்தவர்கள் .

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே , நாம் உங்களுக்கு அளித்த பொருளிருந்து , தான தர்மம் செய்து கொள்ளுங்கள் ; (அவ்வாறு செய்யாத மரணிக்கும் சமயம்) என் இறைவனே  ! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா ? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து சாலிஹான (நல்ல) வர்களில் ஒருவனாக ஆகிவிடுவனே ,, என்று கூறுவான் .

ஆனால் , அல்லாஹ் , எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைச்) பிற்படுத்த மாட்டான் -நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கிறான்.
அல்குர் ஆன் : பகுதி :28/ அத்தியாயம் 64: வசனம் 9,10,11)

ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் ; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளைக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக்கொள்ளட்டும் ; இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள் ; நீங்கள் செய்பவற்றை , நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!