செவ்வாய், நவம்பர் 19, 2013

நேர்ச்சையும் வணக்கமே !




அல்லாஹ்வின் திருபெயரால் ........
தங்களின் நோய் நீங்கி விட்டால் , அல்லது கோரிக்கை நிறைவேற்றினால் , அவ்லியாவே ! உங்களுக்காக நான் அதைச் செய்வேன் ; இதைச் செய்வேன் என்று கூறுபவர்களும்  அவ்வாறே செய்யல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர் . நேர்ச்சை ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இவ்வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்ய மாட்டார்கள் .

நீங்கள் எதையேனும் (நல்வழியில் ) செலவிட்டாலோ , நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான் . அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை .
அல்குர் ஆன் 2:270

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும் ! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும் ! பழமையான அந்த ஆலயத்தை தஃபா செய்யட்டும் .
அல்குர் ஆன் :22:29)

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் .தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள் .
அல்குர் ஆன் :76:7)

நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்ய படவேண்டும்  என்றும் , இறைவனுக்காக செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் இந்த வசனங்கள் மூலம் கற்று தருகிறான் .
இறைவா ! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காக தொழுகிறேன் ; நோன்பு வைக்கிறேன் ; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன் ; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் தவிர இறைவன்னல்லாத எவருக்கும் நேர்ச்சை செய்யலாகாது . அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்ற கூடாது .

"" யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ ,அதை அவர் நிறைவு செய்யட்டும் ! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அதை நிறைவேற்றலாகாது " என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
நூல் புகாரீ .

அல்லாஹ்குக்கு மட்டும் நேர்ச்சை செய்ய வேண்டும் என்று நாம் இதன் மூலம் அறிந்துகொண்டோம் !
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!