அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, நவம்பர் 17, 2013

இதுவா சகோதரத்துவம் ?
அல்லாஹ்வின் திருபெயரால் ...
இஸ்லாத்தில் நீங்கள் அனைவரும் சகோதரர்கள்  அல்லாஹ்வின் வேதத்தையும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்டவர்கள்! இஸ்லாம் ஒன்றுதான் , ஓரிறை கொள்கைதான் , இறுதி வேதம் ஒன்றுதான் , இறுதி நபி ஒருவர்தான் ! பிறகு பிளவு ஏன் ?

பிரிவு ஏன் ? ஒருவர்கொருவர் குறை கூறிகொள்வது ஏன் ? சண்டையிட்டு கொள்வது சாபம் செய்வது கோபம் கொள்வது குரோதம் கொள்வது ஒற்றுமையை குலைப்பது வீண் விவாதம் செய்வது போட்டி பொறாமை கொள்வது இன்னும்....... இதுவா சகோதரத்துவம் ?

உங்கள் பேச்சை கேட்டு மக்கள்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் , இன்னும் அவர்கள் தெளிவு பெறவில்லை. மார்க்கத்தின் பெயரால் அனாச்சாரங்கள் , மார்க்கத்தின்  பெயரால் குழப்பங்கள் .யார் நேரான வழியில் இருக்கிறார் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் தெரியும் ,ஒருவனின் முடிவு ,நிலை அனைத்தையும் அல்லாஹ் ஒருவன் மட்டும் அறிவான் !

எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பவனும் , சபிப்பவனும் ,ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் இப்னு மஸ்ஊத்  (ரலி)
ஆதாரம்: திர்மிதி. மிஷ்காத் 413

ஒரு முஃமின் மற்றொரு முஃமின்க்கு கண்ணாடி யாவான் .ஒரு முஃமின் மற்றொரு முஃமின் சகோதரன் ஆவான் . அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுவான் . அவனுக்கு பின்னாலிருந்து அவனைப் பாதுக்காப்பான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்: அபூதாவுது மிஷ்காத் 424

முஃமின்கள் அனைவரும் ஒரு மனிதனைப் போல அவனுடைய கண் வியாதியால் துன்புற்றால் அவனுடைய உறுப்புகளும் துன்புறுகிறது .அவனுடைய தலை (நோயால் ) துன்புற்றால் எல்லா உறுப்புகளும் அதனால் துன்புறுகிறது .ஒரு முஃமின்க்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அனைத்து முஃமின்களுக்கு அது கவலை அளிக்கும் வேண்டும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர்
ஆதாரம்: முஸ்லிம்.

இது போன்ற நிறைய ஹதீஸ்கள் உள்ளன . முஃமின் எப்படி மற்ற முஃமினிடம் நடந்து கொள்வது பற்றி.

இன்று மேடையில் ஒருவர் மற்ற வரை பற்றி வரம்பு மீறி பேசுகிறார் ,குறை சொல்கிறார் ,கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார் ! இப்படிஎல்லாம் செயல்படுவது ,நடப்பது தவறு முறை இல்லை என்று கூடவா தெரியவில்லை ! பயான் சொல்கிறார்கள் புறம் பேசுவது பெரிய குற்றம் என்று , ஆனால் இவர்கள் மேடையில் அல்லது வெளியில் இவர்கள் அவர்களை பற்றி புறம் பேசுகிறார்கள் . கண்ணியமாக நடந்க்கணும் என்று சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் கண்ணிய குறைவாக மற்றவரை பற்றி பேசுகிறார்கள்.

ஒரு இயக்கம் மற்ற இயக்கத்தை தரம்குரைவாக இழிவாக பேசுகிறார்கள் , பதிலுக்கு அவர்கள் அதே கூற்றை செய்கிறார்கள் ! இதுதான் நடந்துகொண்டு வருகிறது !
மார்க்கத்தில் கருத்து வேற்பாடு என்று ஆரம்பித்து , கடைசியில் விவாதம்  சண்டை சச்சரவு , குழப்பங்கள் இவைகள்தான் முடிவு ஆனது.

சகோதரத்துவம் இவர்கள் மத்தியில் இல்லாமல் மோதலும் , வாதமும் தான் இருக்கிறது .
ஒருவோர்கொருவர் சலாம் சொல்வது கூட அவர்களுக்கு மத்தியில் இல்லாமல் போனது என்பது வேதனைகுரி விஷயம் !

தௌஹீத் ஜமாஅத் , சுன்னத் ஜமாஅத் , , தமுமுக ஜமாஅத் , ஜாக் ஜமாஅத் ,இன்னும் எத்தனை ஜமாத்து இருக்கிறதோ , அவர்கல்க்குள் எந்த சகோதரத்துவமும் இல்லாமல் ஆகிவிட்டது , இவர்கள் ,அவர்களை எதிரிகளாக பார்கிறார்கள் ,அவர்கள் இவர்களை எதிரிகளாக பார்கிறார்கள் ! மக்கள்கள் அவர்களுக்கு அவர்களுடைய இயக்கத்துக்கோ அல்லது ஜமாதுக்கோ தொண்டர்களாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ! சிலரை தவிர அவர்கள் நடுநிலையாக இருக்கிறார்கள் , தப்லிக் ஜாமத் மட்டும் இவர்களுடன் சேர்க்க கூடாது என்பது குறிப்பிடுகிறேன் !

அல்லாஹ் நமக்குள் இருக்கும் பிரிவினையை ,பிளவுகளை இல்லாமல் ,ஒரே ஜமாத்தாக ஆக்குவானாக !ஆமீன்

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!