அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, டிசம்பர் 27, 2013

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை !இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி . ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் .


குலப் பெருமையையும் , சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி  எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குலத்தில் பிறந்தார்கள்.

தாயின் வயிற்றிலிருக்கும்  போதே தந்தை அப்துல்லாஹ்வையும் தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து அனாதையாக நின்றார்கள்.

பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும் அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள் .

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான கூலிக்காக ஆடு மேய்த்தார்கள் .ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள் . இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குச் கிடைக்கவில்லை. எழுதவோ படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது .

தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள் . மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும் , பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா (ரலி) அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம் , பண்பாடு , நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை  மணந்து கொள்ள விரும்பினார் . நபிகள் நாயகத்தை விட அதிக வயதுவுடைவராகவும் விதவையாகவும் இருந்த கதீஜா (ரலி) அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர்  என்ற நிலைக்கு உயர்ந்தார்கள் .

தமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும் ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற்றுவிக்கவில்லை . எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.

நாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுர்க்கம் இது தான் .

நாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன . ஒன்று மக்கா வாழ்க்கை. மற்றொன்று மதீனா வாழ்க்கை. நாம் சுர்க்கமான முறையில் அண்ணலாரின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஓரளவு அறிந்து கொள்வோம்.

நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் இறைவனின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

"அகில உலகையும் படைத்தவன் ஒரே இறைவன் தான் , அந்த ஒரு இறைவனைத் தவிர யாரையும் , எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இறைவனிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி" என்றார்கள். அதற்க்கு பிறகு என்ன நடந்ததது என்று நாம் அறிவோம்.

மதீனா வாழ்க்கை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து போது அவர்களது கொள்கைப் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு மதீனாவிலிருந்து சிலர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தனர் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொள்கை விளக்கத்தையும் ஏற்றிருந்தனர் .

"மக்காவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி மதீனா வரலாம்; எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உங்களைக் காப்போம் " என்று அவர்கள் உறுதிமொழியும் கொடுத்திருந்தனர் . மதீனா சென்று நபிகள் நாயகம் (ஸல்) போதனை செய்த ஒரு இறைவன் கொள்கையைப் பிரச்சாரம் செய்து ஓரளவு மக்களையும் அவர்கள் வென்றெடுத்திருந்தனர்.

இதன்காரணமாக தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வூரில் மகத்தான வரவேற்பு அவர்களுக்குச் காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும்  ஏற்றார்கள் . நபிகள் நாயகம் (ஸல்) தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது . அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கு அவர்களே தலைவராக இருந்தார்கள் . ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம் .

இவ்வளவு மகத்தான அதிகாரம் , செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும் , செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா ?

தமது வாழ்க்கையை வளப்படுத்தி கொண்டார்களா ? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா ?
அறுசுவை உண்டிகளுடனும் , அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா ?

இதை முதலில் நாம் ஆராய்வோம் .

ஏனெனில்  அரசியலோ , ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்துக் கொள்கின்றனர் .

ஒரு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார்  என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியை பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாரோ , அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா ? நிச்சயம் இருக்காது . அவர் பதவி வகித்த சில மாதங்களிலே பல மடங்கு சொத்துக்களைக் குவித்திருப்பார் .

இது ஒரு சின்ன உதாரணம் ! இன்னும் நிறைய சொல்லாம் ... நமக்கு அது முக்கியம் அல்ல .

மனிதனின் முதல் தேவை உணவு தான் .  பிறகு இருப்பிடம் .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும் , ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து  நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம் .

"மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை ; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை "  என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன .

" எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது " என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார் . '' என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள் ?'' என்று நான் கேட்டேன் . அதற்க்கு ஆயிஷா (ரலி) " பேரீச்சம் பழமும் , தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன .சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் . அதை அருந்துவோம்" என விடையளித்தார்கள் .
அறிவிப்பவர்: உர்வா
நூல்: புகாரி .

"நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை " என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுர்ரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் :புகாரி.

இன்னும் நிறைய ஹதீஸ்கள் உள்ளன . அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று நாம் ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறைகளை நாம் அறிந்து கொண்டால் நமக்கு நிறைய படிப்பினைகள் , சுன்னத்துகளைப் பேணி நடப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் , அதே நேரத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன் .
அல்லாஹ் மிக அறிந்தவன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!