வெள்ளி, ஜனவரி 24, 2014

நபி மொழிகள்


அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் ...

யா அல்லாஹ் ! கிழக்குக்கும் மேற்க்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைபோல் எனக்கும் என் தவறுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக ! யா அல்லாஹ் ! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவது போல் என் தவறுகளை விட்டும் என்னை நீ தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனி கட்டியாளும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை நீ கழுவுவாயாக !
ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)


(ஒரேயடியாக உலகை வெறுத்து ஒதுக்கி , குடும்பத்தை , தொழில் துறைகளை , வியாபாரங்களை , விவசாயத்தை விட்டு ஒதுங்கி , முழுநேரமோ , அல்லது அதிக நேரமோ வணக்கத்திலும் , மார்க்கச் சேவையிலும் ஆழ்ந்து விடுபவர் களுக்கு அறிவுரை கூறுமுகமாக அண்ணலார் (ஸல்) கூரியதாவுது .)

"நான் உறங்கவும் செய்கிறேன் ; தொழவும் செய்கிறேன்; நோன்பும் நோற்கிறேன் , விடவும் செய்கிறேன்; மனைவிகளோடு வாழவும் , உறவாடவும் செய்கிறேன்; (யாருக்காக இது கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டதோ அவரை நோக்கி) ஓ உதுமானே ! அல்லாஹ்வைக்கொண்டு பயந்து கொள்ளுங்கள் ; உம்மீது உமது மனைவி , மக்களின் பொறுப்பு இருக்கிறது ; உமது விருந்தாளிகளின் பொறுப்பும் உம்மீது இருக்கிறது ; உமது உடலின் ஆசைகள் மீதும் உமக்கு பொறுப்பு இருக்கிறது; எனவே, நோன்பு நோற்கவும் ; உணவும் உண்ணவும் ; தொழுது வாரும் ; தூங்கவும் செய்யவும் !""
ஆதாரம்: அபூதாவூத் )

எந்த ஒரு பொருளுக்கும் உணர்ச்சி மயமாகும் ஒரு பருவமிருக்கிரது ; எந்த ஓர் உணர்ச்சிக்கும் ஓர் எல்லை தேவைப்படுகிறது. எந்த ஒரு மனிதர் (இதில்) நடுநிலைமை  வகிக்கிராரோ , அவர் மீது (வெற்றி பெறுவார் என்ற) நம்பிக்கை வையுங்கள் . ஒரு வேலை (உணர்ச்சி வசப்பட்டும் நடுநிலைமை வகிக்கும்) அந்த மனிதர் மீது மக்களின் ஆள் காட்டி விரல்குத்திட்டு நின்றால் (மக்கள் எதையும் கூறினால்) அதைப் பற்றிய எந்தக் கவலையும் வேண்டாம்! (இது தற்காலிகமானதாகவே இருக்கும்)
ஆதாரம்: திர்மிதீ )

ஓ மக்களே ! உங்கள் சக்திக்கு உட்பட்டதையெ செய்து வாருங்கள்; ஏனெனில் நற்கூலி தருவதில் அல்லாஹ் தளர்வதில்லை ! ஆனால் நீங்கள் நல்ல செயல்கள் புரிந்து, தளர்வடைந்து விடுவீர்கள் ! (கொஞ்சமாக இருந்தாலும்) நிரந்தரமாக செய்து வருவதையே அல்லாஹ் விரும்புகிறான் - அது, எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரியே!
ஆதாரம் : புகாரி,முஸ்லிம், திர்மிதீ, நசயீ ,இப்னு மாஜா , அபூதாவூத்.)

எவரேனும் உங்களை அமானிதத்தைக் காப்பவர் என்று நம்பி உங்களிடம் பொருளை ஒப்படைத்தால் , அதனை அவருக்குத் திருப்பிக்கொடுப்பதில் அமானிதமாக ஒப்படைத்து விடுங்கள் ; ஒருவர் உங்களை மோசடி செய்தால் (கூட) நீங்களும் அவருக்கு மோசடி செய்யாதீர்கள் !
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதீ )

எவன் கைவசம் எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியம் (செய்து கூறுகிறேன் ) மக்களை நற் செயலின் பால் அழைத்துக் கொண்டே இருங்கள் ; தீயச் செயல்களை விட்டுத் தடுத்துக் கொண்டே இருங்கள் . இப்படிச் செய்யாவிடில் , விரைவில் வேதனை உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! பிறகு நீங்கள் (மன்னிப்பு வேண்டி அல்லாஹ்வை) அழைத்தாலும் . அவன் கேட்கமாட்டான்.
ஆதாரம்: திர்மிதீ)

"நான் நல்ல முறையில் நடந்து கொள்வதற்கு யார் அதிகம் உரிமை பெற்றவர்கள் ? என்று ஒருவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். "உமது தாயார்" என்றார்கள் அண்ணலார் . மறுபடியும் அவர் இதே கேள்வியைக் கேட்ட பொழுது , "உமது தாயார்" என்றார்கள் அண்ணலார். மறுபடியும் கேட்ட பொழுது , "உமது தந்தை " என்றார்கள் .மறுபடியும் கேட்ட பொழுது , "உமது நெருங்கிய உறவினர்கள் " என்றார்கள். மறுபடியும் கேட்ட பொழுது, " உமது தூரத்து (உறவினர்கள் ) என்று கூறினார்கள் அண்ணலார் .
ஆதாரம்: அபூதாவூத்)

தந்தை , சுவர்க்கத்துக் கதவுகளில் நடுக் கதவாக இருக்கிறார் ; (தந்தைக்கு மாறு செய்து ) அக்கதவை இடித்து விடுவதும் , (அல்லது அவருக்குச் சேவை செய்து) அதனைப் பாதுகாப்பதும் உமது விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது .
ஆதாரம்: திர்மிதீ)

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "என்னால் ஒரு பெரிய பாவச் செயல் நிகழ்ந்து விட்டது; அதற்கு பரிகாரம் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் ? "என்று கேட்டார் ."உமக்குத் தாயார் உண்டா ? என்று கேட்டார்கள் , அண்ணலார் . இல்லை " என்றார் அவர், "தாயாரின் சகோதரி உண்டா ? என்று கேட்டார்கள், அண்ணலார். "உண்டு" என்றார் , அவர். "அவரோடு நல்ல முறையில் பழகிவாரும்.(அதுவே பாவத்திற்கு பரிகாரம்) என்றார்கள், அண்ணலார்.
ஆதாரம்: திர்மிதீ)

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனது பெற்றோர்கள் இறந்த  பிறகும் அவர்களுக்கு ஏதேனும்  சேவை செய்ய எனக்கு வழி இருக்கிறதா ? என்று கேட்டார். அவர்களுக்காக 'துஆ' செய்து வாரும்; அவர்களுக்காக பாவ மன்னிப்புக் (இஸ்திக்க்பார்) கேட்டு வாரும்; அவர்களுக்கு தந்த வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்து வாரும் ; அவர்கள் பொறுப்பிலிருந்த உறவுகளைக் காப்பற்றி வாரும் , அவர்களது உறவினர்களுக்குச் சேவை செய்து வாரும் " என்றார்கள், அண்ணலார்.
ஆதாரம்:அபூதாவூத்)

இன்ஷாஅல்லாஹ் தொடரும் ...
நபி மொழிகள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!