அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஜனவரி 01, 2014

உண்மையும் பொய்யும் ! சுவனம்! அதில் உள்ள அருட்கொடைகள் !


உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் இழுத்துச்  செல்கிறது. நன்மை சொர்க்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கின்றது . நிச்சயமாக ஒருவர் உண்மையே பேசிக் கொண்டிருந்தாள் இறைவனிடத்தில் சித்தீக் உண்மையாளர் என்று எழுதப்பட்டு விடும்.
நூல்கள்: புகாரி; முஸ்லிம்.

பொய் சொல்வது (மனிதனை) பாவங்களின் பக்கம் இழுத்துச் செல்கின்றது. பாவங்கள் அவனை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்கின்றது. நிச்சயமாக ஒருவன் பொய்யே பேசி வருகிறான் . இறுதியில் இறைவனிடம் அவன் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுவான்.
நூல்: புகாரி; முஸ்லிம்.

ஒரு மனிதன் ஒரு பொய்யைச் சொன்னால் அந்த பொய்யின் வாசனை வானவர்களை ஒரு மைலுக்கு அப்பால் நிறுத்தி விடுகிறது.
நூல்: திர்மிதி.

ஜனங்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கேடு விளையட்டும் ,அவன் நாசமாகட்டும் .
நூல்கள்: அஹ்மத் , திர்மிதி.

நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான் .
நூல்கள்: புகாரி; முஸ்லிம்.

பெருமைக்காக எவர் தனது கீழாடையை தரையில் படும்படி அணிந்து செல்கிறாரோ , அவரை கியாம நாளில்  அல்லாஹ் (கருணையின் பார்வையில் ) பார்க்கமாட்டான் .
நூல்கள்: புகாரி; முஸ்லிம்.

மர்மஸ்தானத்தை  மறைக்கின்ற சிறிய தொரு ஆடை, பசியை தீர்க்கும் அளவான ரொட்டி  , குளிருக்கும் வெயிலுக்கும் பாதுகாப்புத் தரக்கூடிய வீடு இம்மூன்றுக்கும் கியாம நாளில் கேள்வி கணக்கு இல்லை.
நூல்: முஸ்லிம்.

நரை மயிரைப் பிடுங்காதீர்கள் . நிச்சயமாக எந்த முஸ்லிமுக்கும் சரி எந்த முடியாவது நரைத்து விடுமானால் அது அவருக்கு கியாம நாளில் ஒளிப் பிரகாசமாக காட்சியளிக்கும் .
அல்ஹதீஸ் )

ஒருவர் கியாமநாளில் துன்பம் துயரமின்றி மகிழ்ச்சியைப் பெற விரும்புவோர் , அவர் கடனாளியின் கடனை தள்ளுபடி செய்யட்டும் அல்லது அதில் பாதியாவது தள்ளுபடி செய்யட்டும்.
நூல் :முஸ்லிம்.

எவர் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு இருவரும் கலந்து பிறகு அந்த இரகசிய  விஷயங்களை இருவருமே வெளியே சொல்வாராகில் அவர்கள் மறுமை நாளில் மக்களிடையே இறைவனிடத்தில் மகா கெட்டவர்.
நூல் முஸ்லிம்.

சொர்க்கவாசிகளில் சிறியவராயினும் , பெரியவராயினும் , எவர்களாயினும் மரணித்தவர்கள் (முப்பது வயதுடைய ) வாலிபர்களாகவே இருப்பார்கள் . இவ்வாறே நரகவாசிகளும் இருப்பார்கள் .
நூல்:திர்மிதி.

சொர்க்கவாசிகளின் மேனியில் மயிர் இருக்காது . அதல்லாமல் அவர்களுக்கு தாடியும் இருக்காது . அவர்களின் கண்களோ சுர்மா இல்லாமல் அழகான தோற்றமளிக்கும் .அவர்கள் வாலிபம் அழியாது . ஆடைகளும் பழமையாகாது.
நூல்: திர்மிதி.

சொர்க்கவாசிகளின் ஒவ்வொருவருக்கும் கண் அழகிகளான கன்னிப் பெண்கள் (ஹூருல் ஈன்கள்) கிடைக்கப் பெறுவார்கள் . சொர்க்கவாசிகள் அனைவரும் ஆதம் நபி (அலை) அவர்களின் முகசாயலில் அறுபது முழம் உயரத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
நூல் புகாரி.

உண்மையும் பொய்யும் !
சுவனம்! அதில் உள்ள அருட்கொடைகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!