அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, மார்ச் 07, 2014

ஹஜ் செய்யாத ஹாஜி !

அல்லாஹ்வின் திருபெயரால் ...........
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இறுதிக் கடமையான இந்த ஹஜ் . ஹஜ் செய்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் தான் என்று சொல்ல வேண்டும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் இருக்கிறது. ஒப்புக்கொள்ளப்படாத ஹஜ்ஜும் இருக்கிறது .

இறுதிக் கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு புனிதம் சுமந்தவர்களாக அன்றுபிறந்த பாலகனைப் போல் ஹாஜிகள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஹஜ்ஜுக்கு செல்வதற்கு முன் அதற்காக எவ்வளவு முன் ஏற்பாடுகளை செய்வார்கள். அதில் ஒன்று என்னவென்றால் தங்கள் உற்றார், உறவினர், சுற்றத்தார் ஆகியோரிடம் பயணம் சொல்லச் செல்லும்போது ''நாங்கள் ஏதாவது உங்களுக்கு துன்பம் இழைத்திருந்தால் அதை பொருத்தருளவேண்டும் '' என்று கூறுவர் . காரணம் ''ஹூகூகுல்லாஹ் '' என்று சொல்லப்படக்கூடிய இறைக்கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்கிறோம். ''ஹூகூகுல் '' இபாத் ' என்ற அடியார்களின் உரிமைகளில் நாம் எந்த வகையிலும் தவறு இழைத்தவர்களாக  இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் .

அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள்.''ஒரு முஸ்லிம் சகமுஸ்லிமின்  மானம் மரியாதை[உரிமை]யை  அநியாயமாக பறித்திருந்தால் தங்கம் வெள்ளி  நாணயங்கள் பலன் தராத நாள் [மறுமைநாள்] வரும் முன் இன்றே அவருடைய  உரிமையைப் பறித்ததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்  . ஏனெனில், அன்றைய தினம் அனைத்து கணக்கு வழக்குகளும் நன்மை தீமையின் அடிப்படையில்தான் நடைபெறும் . எனவே அநியாயம் செய்தவரிடம் நற்செயல்  ஏதேனும் இருந்தால் அவருடைய அநியாயத்துடைய  அளவு  அவரிடம் இருந்து வாங்கி அநியாயம் செய்யப்பட்டவருக்கு கொடுக்கப்படும் . அநியாயம்  செய்தவரிடம் நன்மைகள் ஏதும் இல்லை என்றால் அநியாயம் செய்யப்பட்டவருடைய  பாவத்திலிருந்து எடுத்து அநியாயத்துடைய அளவு அநியாயம்  செய்தவரின் மீது போடப்படும் .''
அறிவிப்பாளர் .. ஹஜ்ரத் அபூஹூர்ரைரா [ரலி]
நூல் புகாரி ]

ஹஜ்ஜை நல்ல முறையில் நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பி விட்ட பிறகு நமது வாழ்வில்  எக்காரணம் கொண்டும் பிறருக்கு எந்த வகையிலும் நம்மால் இடையூறோ மனம் புண்படுதலோ  நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . அல்லாஹ்வுக்காக இறுதிக் கடமை ஹஜ்ஜை  முடித்துவிட்டோம் என்ற இறுமாப்புடன் அல்லாஹ்வின் அடியார்களின் உரிமைகளில் தவறு இழைத்து  விடக்கூடாது.

ஹஜ் செய்யாத ஹாஜி 

வலிமார்களின் வரலாற்றில் ஒரு சம்பவத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஹஜ்ரத்  துன்னூன் மிஸ்ரி [ரஹ் ] அவர்கள் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்தார்கள். மஸ்ஜிதுல் ஹரமில் கஃபாவை கண்குளிர பார்த்தவாறே அமர்ந்திருக்கின்றனர்  . அப்போது அங்கு தவாப் செய்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான ஹாஜிகளை பற்றி சிந்தனை செய்கின்றனர் . எத்தனை மனிதர்கள்! எத்தனை நாட்டவர்கள்! எத்தனை மொழி பேசுபவர்கள்! எத்தனை நிறத்தவர்கள்! அனைவரும் அல்லாஹ்வை நினைத்தவாறு ''லப்பைக்! அல்லாஹூம்ம லப்பைக்'' என்று ஒரே குரலில் துதித்தவர்களாக ! ஆஹா! என்ன ஒரு அற்புதமான காட்சி! பொதுவாக கூட்டனக்ளில் ஒருவர் பேச பாளர்கள் கேட்பது வழக்கம். ஆனால் இந்த மாபெரும் கூட்டத்தில் கூட்டத்தினர்  துதிக்க அல்லாஹ் ஒருவன் கேட்கிறான் . எத்துனை அதிசயம்  ! பன்னாட்டை  சார்ந்த இவர்கள் பல்வேறு சிரமங்களை பொறுத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கு  வந்திருக்கின்றனர். இவர்களின் அனைவரின் ஹஜ்ஜும் மக்பூளாக வேண்டும் என்று துன்னூன் [ரஹ் ] அவர்கள் மனதில் எண்ணியவாறே கஃபாவை  பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். அப்போது ஒரு அசரீரி அவர்களுக்கு கேட்கிறது  . ''துன்னூனே ! செருப்புதைத்து பிழைக்கும் அஹ்மது அஷ்காக்  என்ற டமாஸ்கசை சார்ந்த தொழிலாளியின் ஹஜ்ஜை தான் இவ்வருடம் முதன்முதலாக மக்பூலான ஹஜ்ஜாக ஏற்றுக்கொண்டேன் என்று அசரீரி  கேட்கிறது.

அசரீரியை கேட்டதும் ஆச்சரியமாக நிமிர்ந்து உட்காருகின்றனர். கஅபாவை தவாப் செய்யக்கூடிய பல்லாயிரகணக்கான இந்த அடியார்களில் திமிஷகை சேர்ந்த அஹ்மது அஷ்காக் யார்?  புனிதம் நிறைந்த அந்த ஹாஜி யார்? துன்னூன் [ரஹ் ] அவர்களின் விழிகள் ஆச்சிரியமாக தேடுகிறது. டமாஸ்கஸ் [திமிஷ்க் ] வாசிகள் தங்கியுள்ள பகுதிகளில்  உள்ள ஹாஜிகளை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ''உங்கள் ஊரிலிருந்து அஹ்மது அஷ்காக் ' என்ற யாராவது ஹஜ்ஜுக்கு வந்திருக்கிறார்களா?  என விசாரிக்கின்றனர். அங்குள்ளவர்கள்  ஒருவருக்கொருவர்  தங்களுக்குள் விசாரித்துவிட்டு ''அப்படி யாரும் எங்கள் பகுதியிலிருந்து  இவ்வருடம் ஹஜ்ஜுக்கு வரவில்லையே ? என்று கூறுகின்றனர் . 

துன்னூன் [ரஹ் ] அவர்களுக்கு பெரும் வியப்பாகின்றது .வேறு பகுதி ஹாஜிகளிடம் விசாரிக்கலாம் என்று எண்ணி  பல நாட்டுப்பயணிகளிடம் விசாரிக்கின்றனர். அப்படி யாரும் வரவில்லை என்றே பதிலே கிடைக்கின்றது . இதற்கிடையில் ஹஜ்ஜூடைய காலமும் முடிந்து எலா நாட்டுப்பயணிகளும்  தங்கள் நாடுகளை நோக்கி பயணத்தை துவக்குகின்றனர்.

டமாஸ்கசை  நோக்கி.......... ஹஜ்ரத் துன்னூன் [ரஹ் ] அவர்களுக்கு எப்படியாவது அஹ்மது அஷ்காக்  சந்தித்து விட வேண்டும் என்ற ஆர்வம் !  நேரடியாக டமாஸ்கசை  நோக்கிச் சென்று அங்கேயே விசாரிக்கலாமே! என்று எண்ணி மக்காவிலிருந்து ஐநூறு மைல்  தொலைவில் உள்ள டமாஸ்கஸ் நோக்கிச் செல்கின்றனர் . பலநாள் பயணத்துக்கு பிறகு டமாஸ்கஸ் அடைகின்றனர் . அங்கு ஒவ்வொரு தெருவிலும்  குடியிருப்பு பகுதிகளில் விசாரிக்கின்றனர். இறுதியாக ஊர் கோடியில்  உள்ள ஒரு குடிசைப்பகுதியை அடையாளம் காட்டுகின்றனர். அந்த குடிசையை அடைந்து ஏழ்மைக்கு வறுமைக்கும்  முகவரி சொல்லக் கூடிய அந்த குடிசையின் கதவை  தட்டுகின்றனர். கதவு திறக்கின்றது . ஒடிசலான வறுமையின் அடையாளமாய்  ஒரு நபர் உள்ளே நிற்கிறார். அன்பாக வரவேற்கின்றனர் . வீட்டினுள் அமரச் செய்து  உபசரிக்கின்றார் . துன்னூன் [ரஹ் ] அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு  கேட்கின்றார்கள் .''நீங்கள் ஹஜ்ஜை முடித்தவுடன் உடனே வந்துவிட்டீர்களா? உங்களை டமாஸ்கஸ் பகுதியில் இருந்து வந்த ஹாஜிகள் யாருக்கும்  அடையாளம் தெரியவில்லையே! '' என்று வினவுகின்றனர். அதற்கு அவர் ''நான் இவ்வருடம் ஹஜ்ஜூக்கு வரவேயில்லையே!'' எனக்கூற முன்பை விட அதிக வியப்படைகின்றனர்  துன்னூன்[ரஹ் ] அவர்கள் 

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ..................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!