சனி, மார்ச் 15, 2014

அல்லாஹ்வின்திருப்பொருத்தமே குறி

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

நன்மையின்  வாசல் திறந்து இருக்கு . ஆனால் நமக்குதான் உள்ளே நுழைய இன்னும் நேரம் கிட்டவில்லை. சந்தர்ப்பம் கிட்டும்போது நல்ல விஷயங்களை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் அவைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.


''அல்லாஹ்வின் அடியார்களில் சிலர், நபியாகவும் இருக்க மாட்டார்கள்,, [அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்ட] 'ஷஹீ ' தாகவும் இருக்கமாட்டார்கள்,, ஆனால், மறுமை நாளில் அத்தகையவர்களைக் கண்டு நபியும் சந்தோஷபடுவார்கள்,, ஷஹீதுகளும் சந்தோஷப்படுவார்கள்'' என்று அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் தெரிவித்ததும், நாயகத் தோழர்கள் , ''அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யாரென்று நமக்கும் தெரிவியுங்களேன்?'' என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார் , அவர்கள் யாரென்றால் , தங்களோடு எந்தவிதத் தொடர்ப்பும் இருக்காது,, தங்களுக்கு ஏதேனும் கிடைக்கும்மென்று  எதிர்பார்ப்பும் இருக்காது,,  அப்படியிருந்தும், அல்லாஹ்வின் திருப் பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி அவர்கள், இத்தகையவர்களோடு நேசம் கொள்வார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக , அத்தகையவர்களின் முகங்கள் ஒளியினால் மிளிரும்,, அவர்கள் ஒளிமயமாகி நேர்வழி பெற்றிருப்பார்கள். மக்களெல்லாம் பயப்படுவார்கள்,, அவர்கள் மட்டும் பயப்படமாட்டார்கள். எல்லா மக்களும் கவலை தோய்ந்து காணப்படுவார்கள்,, அவர்கள் மட்டும் கவலையற்றிருப்பார்கள்,'' என்று கூறிவிட்டு  , ''நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தவிதப் பயமுமில்லை,, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று திருகுர் ஆனிலுள்ள வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
ஆதாரம்.. அபூதாவூத்]

என்ன காரியமும் செய்தாலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தம் மட்டும் இருக்க வேண்டும். யார்மீது நேசம், பாசம் கொண்டாலும் , அது அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மட்டும்  நாடி நேசம் கொள்ள வேண்டும். எது செய்தாலும் , என்ன தர்மம் கொடுத்தாலும்  அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும் செய்கிறேன் என்று மனதில்  தூய எண்ணம் கொள்ள வேண்டும். ஒரு துளிக் கூட முகஸ்தூதி வராமல் இருக்க  , மனதில் எண்ணாமல் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தினதோரும்  துஆச் செய்ய வேண்டும். இக்லாஸ் எல்லா செயல்களில் இருக்க வேண்டும்  .

மறுமையில் நாம் கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் , இங்கு நாம் சில தியாகங்கள் செய்து ஆக வேண்டும். மக்களுடன் நாம் நல்ல முறையில் பழக வேண்டும். காரியத்துக்காக காக்க பிடிக்க கூடாது. நம்மை பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நாம்  எதையும் செய்ய கூடாது. அல்லாஹ் நம் அனைவரையும் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக .. ஆமீன்.............

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!