அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக !


அதாவது வெட்கம் அற்றுப்போனால் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ள வேண்டியதுதான். இறைவனுக்கோ மனிதர்களுக்கோ அஞ்சி வெட்கப்பட்டுத் தீமைகளைக் கைவிடுகிறான் மனிதன் . அந்த அச்சமும் வெட்கமும் இல்லையென்று ஆனபிறகு அவன் எதைச் செய்வதற்கும் தயங்கபோவதில்லை.  [ஃ பத்ஹுல் பாரீ ]


அபூசயீத் அல்குத்ரீ [ரலி] அவர்கள் கூறியதாவது..

நபி [ஸல்] அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள் .

இதை அப்துல்லாஹ் பின் அபீஉத்பா [ரஹ் ] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் ..புகாரீ]


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் [முது] மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'' என்பதும் .

இதை அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .
ஆதாரம் ..புகாரீ]

உம்மு சலமா [ரலி] அவர்கள் கூறியதாவது..

உம்மு சுலைம் [ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை . ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார்கள் . அதற்கு  நபி [ஸல்] அவர்கள் , 'ஆம். அவள் [மதன] நீரைப் பார்த்தால் [குளியல் அவள்மீது கடமைதான்]'' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம் ..புகாரீ]

அல்லாஹ் மிக  அறிந்தவன்   . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!