திங்கள், ஏப்ரல் 21, 2014

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்..

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற  [மனதோடு] அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள் ,, உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான் ,, அவற்றின் கீழே ஆறுகள்  [சதா] ஓடிக் கொண்டே இருக்கும்,, [தன் ] நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ்  இழிவுபடுத்தமாட்டான் ,, [அன்று ஈடேற்றம் பெற்ற] அவர்களுடைய பிரகாசம் [ஒளி ] அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்,  அவர்கள்  ''எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்'' என்று கூறி[ப் பிரார்த்தனை செய்து] கொண்டு இருப்பார்கள்.


அல்குர் ஆன் ]

அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை பார்த்து கூறிகிறான்..
இது ஒரு எச்சரிக்கையான ஒரு வசனம் . மரணத்துக்கு முன் நாம் செய்யக் கூடிய ரொம்ப முக்கியமான இரண்டு விடயங்கள்.. ஒன்று தவ்பா , மற்றொன்று தர்மம் .

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும் , உங்களுடைய மக்களும் , அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம்- எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்.

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே , நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள் ,, [அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்]  'என் இறைவா! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான  [நல்ல] வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே '' என்று கூறுவான் .

ஆனால் , அல்லாஹ் , எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் [அதனைப்] பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கிறான்.

அல்குர்ஆன் ]

உயர்ந்தோன் அல்லாஹ்  கூறிகிறான்..

[நூஹ் கூறினார்] நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்,, நிச்சயமாக அவன் மிகவும்  மன்னிப்பவன் . [அப்படிச் செய்வீர்களாயின் ] அவன் உங்கள் மீது  தொடர்ந்து மழையை அனுப்புவான் . அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்  ,, இன்னும் உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்,, உங்களுக்காக ஆறுகளையும் [பெருக்கெடுத்து] ஓடுமாறு செய்வான்.
அல்குர்ஆன் ..71..10.12]

அல்லாஹ் கூறுகிறான் ..

[இறையச்சம் உடையோரான] அவர்கள் [பிறர் விஷயத்தில் ] ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ  , தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ [அந்த  நிமிடமே மனம் வருந்தி] அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்துகொண்டே, தாம் செய்த  வற்றில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
அல்குர்ஆன் ..3.135]

இந்த துஆ சிறந்த துஆவாக இருக்கிறது . இதை மனனம் செய்து இரவிலும் ,பகலிலும்  தினதோரும்  ஓதி வருவோம்.

''அல்லாஹூம்ம! அன்த்த  ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த . கலக்த்தனீ . வ அன  அப்துக்க . வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க  மஸ்தத அத்து. அஊது பிக்க மின் ஷர்ரி  மா ஸன அத்து . அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய , வ அபூஉ  லக்க பி தன்பீ ஃ ப ஃ க்பிர்லீ  ஃபஇன்னஹூ லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த ''

என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்..  அல்லாஹ் ! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த  உறுதிமொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை  நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம்  நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம்  [மறைக்காமல்] ஒப்புக்கொள்கிறேன். ஆகவே , என்னை  மன்னிப்பாயாக! ஏனெனில் , பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.]

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில்  கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்துவிடுகிராரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.  யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிராரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
இதை ஷத்தாத் பின் அவ்ஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்..புகாரீ]

இறுதியான ஒரு ஹதீஸை பார்ப்போம்..

அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறியதாவது..

''அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நான் ஒருநாளில் எழுபது தடவைக்குமேல்  'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர்  [ஸல்] அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
ஆதாரம் ..புகாரீ]

அல்லாஹ் பாவங்களை மன்னிக்க தயாராக இருக்கிறான் . ஆனால் நாம் தாம் இன்னும்  அதற்க்கு தயாராக இல்லாமல் , உலக காரியத்தில் முழ்கி இருக்கிறோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!