அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், டிசம்பர் 04, 2014

ஆஹா! இப்படி ஒருவரை இனி மேலும் காண முடியுமா!?

அல்லாஹ்வின் திருபெயரால் .......

திரு நபியவர்கள் பெரும்பாலும் யாரையும் திட்டமாட்டார்கள். அப்படி ஏதேனும் சில சமயங்களில் சந்தர்ப்ப வசத்தால் திட்டிவிட்டால்  அதற்குரிய அபராதத்தைச் செலுத்தி விடுவார்கள். திட்டபட்டவன் மீது அன்பு செலுத்திப் பரிகாரம் காண்பார்கள். எந்தப் பெண்ணையும் அவர்கள் சபித்தது கிடையாது.

ஒரு சமயம் அவர்கள் போர்முனையில் இருந்தார்கள் . எதிரிகளின் அக்கிரமச் செயல்கள் பெருகிக் கொண்டிருந்தன . 'திருத்தூதர் அவர்களே! இப்படி இவர்கள் அட்டூழியம் செய்கிறாரார்களே , அவர்களைத் தாங்கள் சபிக்கக் கூடாதா ?' என்று யாரோ கேட்டார்கள் .


அந்த அன்பு மனிதர் புன்னகை புரிந்தார்கள்.   'நான் மக்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன். அவர்களுக்குப் பாதகமாகப் பிரார்த்திப்பதர்கல்ல ' என்ற விடை அமைதியோடு வெளிப்பட்டது.

ஒரு மனிதனுக்கு பாதகமாகப் பிரார்த்திக்குமாறு அண்ணளவர்கள் வேண்டப்பட்டால், அந்த வேண்டுகோளை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். மாற்றமாக , அந்த மனிதனின் நல்வாழ்வுக்குப் பிரார்த்திப்பார்கள். அந்த மனிதன் முஸ்லிமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அண்ணளவர்கள் இப்படித்தான் நடப்பார்கள். யாரையும் அவர்கள் கைநீட்டி அடித்ததில்லை . இறைவழிக்கு முரண் ஏற்பட்ட நேரத்தைத் தவிர்த்து, சுய நலத்துக்காக அவர்கள் யாரையும் அடிக்கத் துணியவில்லை. இறை கட்டளை புறக்கணிக்கப்பட்டாலொழிய  அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக யாரையும் பழி  வாங்கியதில்லை.

இரண்டு காரியங்கள் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் , அவற்றில் எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள். ஒரு நிபந்தனை . அந்த எளிதான காரியத்தில் தீமை கலக்காதிருக்க வேண்டும் . தீய செயலை விட்டு அவர்கள் வெகுதூரம் விலகியிருந்தார்கள்.பந்துக்களை வெருத்தொதுக்குவது அவர்களுக்குத் பிடிக்காத ஒன்று . தம்மை நாடி வந்தவர்களுக்கு அவர்கள் ஒத்தாசை புரிவார்கள்.

அனஸ் [ரலி] அவர்கள் கூறுகிறார் ,  'இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன் . திருத்தூதரின் வெறுப்பிற்குரிய எந்தச் செயலையும் நான் செய்வதில்லை. ஒரு செயல் குறித்து அவர்கள் தம் வெறுப்பைத் தெரிவித்து விட்டால் , அந்தச் செயலை அப்போதிருந்தே விட்டுவிடுவேன். எனது செயல்களில் ஒன்றைக் குறிப்பிட்டுப் பெருமானாரின் மனைவியர் என்னைப் பழிப்பது  உண்டு . அந்தச் செயலை விட்டு விடுமாறு பெருமானார் என்னிடம் கூறுவார்கள். திருக்குர் ஆனை வைத்தே அவர்கள் செயலாற்றினார்கள்.

படுக்கையில் விஷயத்தில் அவர்கள் அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை. உயர்ந்த விரிப்பில்தான் உறங்க வேண்டும் என்ற எண்ணம்  அவர்களுக்குக் கிடையாது. பாயில்லாத சமயத்தில் வெறும் தரையில் கூடப் படுத்து விடுவார்கள்.

அண்ணளவர்கள் உலகில் தோன்றுவதற்கு முன்னர்  'தவ்ராத்' என்ற இறை நூல் இப்படி வர்ணித்தது.  'முஹம்மது என்ற பெயருடைய திருத்தூதர் என் அடியார். அவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். தீய குணம் அவரிடம் கிடையாது. முரட்டுத் தனத்தை அவரிடம் காண முடியாது . கடைத் தெருவில் அவர் சச்சரவு செய்ய மாட்டார். தீங்கிழைக்கப்பட்டால் , அவர் சகித்துக் கொள்வார். மன்னித்து விடுவார் , மறந்து விடுவார் . அவர் மக்காவில் தோன்றுவார். மக்காவை வெறுத்து வெளியூர் செல்வார். சிரியாவில் அவர் ஆட்சி விரியும்  . அவரும், அவரைச் சேர்ந்தவர்களும் மக்களை குர்ஆனின்  பக்கம் அழைப்பார்கள். அவரைச் சுற்றிலும் அறிவொளி படர்ந்து நிற்கும்.

'இன்ஜீல் ' என்ற தெய்வ நூலும் இப்படித்தான் வர்ணிக்கிறது. அண்ணளவர்கள் எவரையேனும் சந்தித்தால், அவர் முஸ்லிமாக இருந்தால் தான் முதலில் சலாம் சொல்வார்கள். பிறகுதான் மற்ற எந்தப் பேச்சையும் ஆரம்பிப்பார்கள். ஒரு காரியத்தில் தமது  நண்பர் ஒருவருக்கு ஒத்தாசை புரிய ஆரம்பித்து விட்டால், அவர்கள் சடைவு  கொள்ள மாட்டார்கள்      . பொறுமையோடு வேலை செய்வார்கள். அந்த நண்பர் களைத்துப் போனாலும், அண்ணளவர்கள் களைத்துப் போக மாட்டார்கள்.

உட்காரும்போதும் , எழுந்து நிற்கும்போதும் அவர்கள் இறைவனைத் துதிப்பார்கள். தொழுது கொண்டிருக்கும்போது யாரேனும் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டால், அண்ணளவர்கள் விரைவாகத் தொழுகையை முடித்துக் கொண்டு எதிரில் வந்து நிற்பார்கள்.உங்களுக்கு என் உதவி தேவையா என்று வினவுவார்கள்  . உதவி புரியும் படலம் முடிந்ததும், மீண்டும் இறை வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.

நண்பர்களுக்கு மத்தியில் அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அனேக சமயங்களில் கைகளால் கால்களை- முழுங்காலுக்கு கீழே கட்டிக் கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவர்கள் உட்கார மாட்டார்கள். நண்பர்களுக்கு மத்தியில் அவர்கள் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்ததை யாரும் பார்த்ததில்லை. எனினும் இட நெருக்கடியற்ற விஸ்தாரமான இடத்தில் அப்படி அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். கிப்லாவை மக்காவின் திசையை முன்னோக்கித்தான் பெரும்பாலும் உட்கார்வார்கள். தம்மை நாடி வந்தவர்களை அவர்கள் கண்ணியப்படுத்துவார்கள். தமது துணியைத் தரையில் விரித்து அமரச் சொல்வார்கள். வந்தவர்கள் உறவு முறை அற்றவர்கலாயினும் , அண்ணளவர்கள் அப்படித்தான் நடப்பார்கள். சில வேளைகளில் தாம் சாயிந்து கொண்டிருக்கும் தலையணைக் கொடுத்து உபசரிப்பார்கள்.

அவர்களை அனைவரும் சிறந்த நற்பண்புள்ளவர்  என்றும் எண்ணினார்கள் . தம்மோடு அமர்ந்திருக்கும் நண்பர்களுக்காக அண்ணளவர்கள் அனைத்தையும் தியாகம் செய்துவிடுவார்கள். மற்றவர்களை அனுசரித்தே அவர்கள் எதையும் பேசுவார்கள் . எதையும் செய்வார்கள். இத்துடன் அவர்களது சபையில் அடக்கம், ஒழுக்கம், நம்பகம் முதலான நற்பண்புகள் நிறைந்து வழிந்தன.

அண்ணளவர்களை இறைவன் இப்படிப் பாராட்டுகிறான்  . 'இறைவனின் பேரருளால் நீர் அவர்களிடம் மென்மையோடு நடந்து கொண்டீர். நீர் துர்க்குணம் கொண்டவராகவும் , முரட்டு சுபாவம் படைத்தவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டுப் பிரிந்து போய் விடுவார்கள்.''

நண்பர்களை அழைக்கும்போது, திருநபியவர்கள் இயற்பெயரை உபயோகிக்க மாட்டார்கள். தந்தையின் பெயரையோ , தனயனின் பெயரையோ இணைத்துதான் கூப்பிடுவார்கள் . இன்னாரின் தந்தையே, இன்னாரின் மைந்தனே- இப்படித்தான் பெரும்பாலும் கூப்பிடுவார்கள். நட்பு வளர்வதற்கு இதுவும் ஒரு வழியாகும் . இதில் கண்ணியமுண்டு , இத்தகைய இணைப்புப் பெயர் வழக்கத்தில் இல்லாதவர்களுக்குப் பெயரிட்டு அழைப்பார்கள். பெண்களையும் இப்படித்தான் கூப்பிடுவார்கள்.  ,சிறுவர் , சிறுமியர்களுக்கு அவர்கள் பெயரிடுவது உண்டு  . இதை அப்போதைய மக்கள் பெரிதும் விரும்பினார்கள். பெருமானார் அவர்கள் கோபத்தை ஒதுக்கித் தள்ளி வாழ்ந்தார்கள். மக்களிடம் அன்போடு பழகினார்கள். மக்களுக்கு நன்மை செய்தார்கள். பயனுள்ளவற்றை எடுத்துரைத்தார்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி ..மௌலவி எஸ் . அப்துல் வஹ்ஹாப் [பாகவி]
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
நன்றி நர்கிஸ் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!