ஞாயிறு, டிசம்பர் 07, 2014

ஜமாஅத் கூட்டமைப்பு

அல்லாஹ்வின் திருபெயரால் .........

இந்த கட்டுரை இந்தக் காலத்திற்கு அவசியம் தேவை . இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நம் முஸ்லிம் சமுதாயம் . ஒரு ஊருக்கு இரண்டு ஜமாஅத் , பலவிதமான இயக்கங்கள் , கட்சிகள் , அமைப்புகள் இப்படி நிறைய பிரிவுகள் பிளவுகள் வந்துவிட்டன. நாங்கள் சொல்வதுதான் சரி என்று ஒரு கூட்டம் . நாங்கள் தான் சரியான நேரான பாதையில் இருக்கிறோம் என்று சொல்லும் ஒரு அமைப்பு . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ........... அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் . யார் நேரான பாதையில் இருக்கிறார்கள் , யார் வழி  தவறிப் போகிறார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.



''ஷைத்தான்தான் மனிதனின் ஓநாயாகும் . ஆட்டுக் கூட்டத்தோடு இணையாத ஆட்டையும், மேய்ச்சலுக்காக தனியே சென்று விடும் ஆட்டையும் , கூட்டத்தைவிட்டும் பாராமுகமாக பிரிந்து வரும் ஆட்டையும் ஓநாய் கவ்விக் கொள்ளும். மக்களே! நீங்கள் மலைப் பகுதிகளில் பிரிந்து வாழாதீர்கள். ஜமாஅத்தை தழுவியும், பொது மக்களுடன் இணைந்தும் வாழ்வீர்களாக...!
-அல்ஹதீஸ் ]

எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா [ஸல்] அவர்களின் அருமைப் பேரரும் , ஹஜ்ரத் அலீ [ரலி] அவர்களின் இளைய புதல்வருமான இமாம் ஹூஸைன் [ரலி] அவர்கள், புனித முஹர்ரம் மாதத்தில்தான் இஸ்லாத்துக்காக இன்னுயிரை விட்டார்கள்.


யஜீதின் தலைமையின் கீழ் நடந்த அராஜக ஆட்சியைத் தட்டிக் கேட்பது, தகுதியில்லாத வாரிசு தலைமையில் இருப்பதால் இஸ்லாமிய ஜனநாயகத்தில் விழுந்த கறையைத் துடைப்பது, சர்வாதிகாரத்தை களைந்து நீதியான ஆட்சி மலர பாடுபடுவது , இஸ்லாம் வலியுறுத்தும் ஷரீ அத் தழுவிய கூட்டமைப்பை அரேபிய மண்ணில் அழியவிடாது பதிப்பது, இதனடிப்படையில் இஸ்லாம் பாரெங்கும் பரவ இடுக்கண் பாராமல் உழைப்பது.

இத்தகைய நோக்கங்களுடன், இராக் கூபாவாசிகள் அழைப்பின் பேரில் ஹஜ்ரத் ஹூஸைன் [ரலி] அவர்கள் அங்கு புறப்பட்டார்கள்.

பாக்தாத் தென்மேற்கே 60 மைல் தொலைவிலுள்ள கர்பலா களத்தை இமாம் ஹூஸைன் [ரலி] அவர்கள் அடைந்தபொழுது அங்கிருந்து முன்னேற விடாமல், யஜீதின் ஏவலால் உபைதுல்லாஹ் தடுத்து நிறுத்தினான்.

அத்துடன்  இமாம் ஹூஸைன் [ரலி[ அவர்களையும் , அவர்கள் குடும்பத்தினர் 100 போரையும் வன்மையாக தாக்க ஆரம்பித்தான். யஜீதின் கொடுமையை அஞ்சி கூபாவாசிகள் ஹூசைனுக்கு  தோள் தொடுக்காமல் கைவிட்டனர்.

ஆண்களும், பெண்களும், சிறார்களுமாக தமது குடும்பத்தினருடன் அங்கு வந்திருந்த ஹஜ்ரத் ஹூஸைன் [ரலி] அவர்கள், எவரின் துணையுமின்றி யஜீதின் எதேசதிகாரத்தை எதிர்த்து தம் குடும்பத்தார்களுடன் புனிதப் போரில்  ஈடுப்பட்டனர்.

வன்கொடுமையாளர்களின் கை ஓங்கி இருக்கவே, எம்பெருமானார் பேரர், தமது குடும்பத்தினர் 72 பேருடன் இரத்தம் சிந்தி ஷஹீதானார்கள். இமாம் அவர்களின் பொன்மேனியை தலைவேறு, உடல் வேறாகப் பங்கப்படுத்திக் கொன்றுவிட்டனர் எதிரிகள்.
ஹிஜ்ரி 61 முஹர்ரம் 10-ம் நாள் [கி.பி .680 அக்டோபர் 10] அன்று இந்த சோகம் நடந்து முடிந்தது.

இமாம் ஹூஸைன்  அவர்களின் மரணம் இஸ்லாமியருக்கு சிறந்த பாடத்தை விட்டுச்  சென்றுள்ளது. ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்னும் இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது என்ற சொல்லுகிணங்க, எக்காலமும் இமாம் ஹூஸைன் [ரலி] அவர்களின் வரலாறு வீரத்துடன், கோபத்துடன், சோகத்துடன் பாடப்பட்டு, பேசப்பட்டு தூங்கிக் கிடக்கும் இஸ்லாமியனை தட்டி எழுப்புகின்றது . இமாம் ஹூஸைன்  அவர்களின் நோக்கம் அகிலமெங்கும் இஸ்லாம் வலியுறுத்தும் ஷரீ அத்  தழுவிய நீதி வழுவாத ஜமாஅத் கூட்டமைப்பை ஏற்படுத்துவதுதான். ஜமாஅத்  கூட்டமைப்பை நிறுவி இஸ்லாமியப் புகழ் திக்கெட்டும் பரவ வழிகோள்வதுதான் . அந்தக் கனவை நனவாக்கி காட்டுவது இன்றைய இளைய தலைமுறையினரின் பொறுப்பாக இருக்கின்றது.

இஸ்லாமிய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமானால், உலக அளவில் அதன் முயற்சியை மேற்கொள்ளும் முன் , ஊரளவில் அதை அமுல்படுத்திக் காட்டுவது இன்றைய நமது சமுதாயத்தின்  பொறுப்பாக இருக்கின்றது.

ஒரு ஜமாஅத் அமைப்பில் தழுவி வாழவேண்டுமென்ற கட்டளை இஸ்லாத்தில் மட்டுமே செயலில்  உள்ளது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை .
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும்........
இன்ஷாஅல்லாஹ்  தாங்கள் இதை அவசியம் தொடர்ந்து படித்து வருவதுடன் மற்றவர்களுக்கு  ஷேர் பண்ணவும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொளிகிறேன்.
அல்லாஹ் உங்களுக்கு நற்கிருபைச் செய்வானாக!
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!