வியாழன், ஏப்ரல் 23, 2015

உள்ளத்தில் நல்ல உள்ளம்

நபி வழியை விட்டு விட்டு ,வேற வழியைத் தேடாதீர்கள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....

''[நீர் கொடுப்பதை விட] அதிகமாக பெறக் கருதி [எவருக்கும்] நன்றி செய்யாதீர் . உமதிறைவனுக்காக கஷ்ட்டங்களை நீர் பொறுத்திரும் .''
அல்குர்ஆன்  74.6-7]


கடன் , கொடுக்கல் -வாங்கல் , திருமணம், புதுமனை புகுவிழா , மற்ற விசேஷங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் மொய் வைத்தல் .
இப்பூவுலகம் கொடுக்கல்- வாங்களில்தான் சுழன்று கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்கு கொடுக்கல், வாங்கல் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஒருவர் நமக்கு கொடுத்து உதவினால் , நாம் நன்றி சொல்கிறோம் . அந்த நன்றி என்ற சொல்லை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதை மேற்குறிப்பிட்ட திருவசனம்  கற்பிக்கிறது.

உலக நடப்புகளில் நாம் பார்க்கிறோம் . திருமணங்களில், புதுமனை புகுவிழாக்களில் , வேறு விசேஷங்களில் மொய் வைத்தல் என்ற சம்பிரதாயம், பெரும்பாலான இல்லங்களில் காணப்படுகிறது. மொய் கொடுப்பவரின் நோக்கம், அதை பெற்றவர், தான் கொடுத்ததை விட அதிகமாக அல்லது அதே அளவு செய்முறை வாங்கியவர் செய்ய வேண்டுமென்றே எதிர்பார்ப்பார். இதைத்தான் இஸ்லாம் கண்டிக்கிறது. ஏனெனில் திரும்பத் தருபவருக்கு வசதி இல்லாமலிருக்கலாம். சந்தர்ப்பம் சூழ்நிலைகள் சாதகமில்லாமலும் போகலாம். மொய் விஷயத்தில் மனஸ்தாபங்களும் , விரோதங்களும், உறவுகளில் துண்டிப்புகளும் ஏற்படுவது உண்டு.

இந்த மோசமான நிலைகள் எப்பொழுது முஸ்லிம்களிடம் மாறப்போகிறது?  மொய் என்பது  இந்துக்களின் கலாச்சாரம் . அன்பளிப்பை மறந்து விருந்துக்கு மொய்யாக மாறிவிட்டது.  ஒருவருக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பது நபிவழி ! உயர்ந்த பொருளைத்தான் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும்  என்பதில்லை. அல்லாஹ்வுக்காக நபி வழியின்ப்படி ஒரு சிறிய அன்பளிப்பாக இருந்தால் போதும். நபி வழியை விட்டுவிட்டு வேற வழியைத் தேடிவிட்டார்கள். இதனால் பல குழப்பங்களும், விரோதங்களும், உறவுகளின் துண்டிப்புகளும் தான் ஏற்படும்  என்பதில் சந்தேகம் இல்லை .

வட்டிக்கு கொடுத்தலும் , திரும்பப் பெரும் போது கொடுத்ததைவிட பன்மடங்கு அதிகமாகப் பெறுதல், ஏற்புடையதன்று என்பதால் இஸ்லாம் வட்டியை ஹராமாக்கியது.

சிலர் பாங்கில் போட்ட பணத்தை , அதில் வரும் வட்டியை ஹலால் போல பாவித்துக் கொண்டியிருக்கிறார்கள்  . அவர்கள் கொடுக்கும் விளக்கம் . அல்லாஹ்  வட்டியை உண்ணக் கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறான். நாங்கள் உண்ணவில்லை  , மற்ற காரியத்திற்காக செலவு செய்கிறோம். இன்னும் சிலர்  அதற்கு வேறு விதமாக வியாக்கியானம் சொல்கிறார்கள் .  உண்ணவும் செய்கிறார்கள்.

கடன் பெற்றவர் திருப்பிக் கொடுக்க இயலாது போகும்போது, கொடுத்தவர் மனது  கஷ்டப்படும், வேதனையடையும். ஏன் கொடுத்தோம் என்ற எண்ணம் துன்புறுத்தும். அந்த நிலையில் அல்லாஹ்வுக்காக மனகஷ்ட்டத்தை பொறுத்துக் கொண்டால், அல்லாஹ்வின் நற்கூலி நிச்சயம் கிட்டும். அல்லாஹ்வுக்காக அழகிய கடனாக விட்டுக் கொடுப்பதிலும் நன்மையையும் உண்டு, நிம்மதியும் உண்டு. இத்திருவசனத்தின் உட்கருத்தை உணர்ந்து அல்லாஹ்வின் கட்டளையை ஏற்போம். அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்ள துஆச் செய்வோம் .

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!