அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், மே 25, 2015

அண்ணலாரின் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
''அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் உறுதியாக நம்புகின்ற உங்களுக்குரிய அழகிய முன் மாதரி நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது...

வணிகத்தின் முன் மாதரி 

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் ஒரு சிறந்த வணிகராகவும் இருந்து, வணிகர்களாகிய வியாபாரிகளுக்குச் சிறந்த வழிகாட்டுதலைச் செய்து காட்டிச் சென்றுள்ளனர்.

அவர்கள் வியாபாரத்தில் நேர்மை, நாணயம் முதலியவற்றைக் கைகொண்டு ஒழுகி வந்ததன் காரணமாகத் தான் அன்னை கதீஜா [ரலி] அவர்கள் அண்ணலாரை இல்லறத் தலைவராக ஏற்றுக் கொள்ளுகின்ற ஏற்றத்தைப் பெற முடிந்தது.


வியாபாரிகள் என்போர் எவர்? உபகாரிகள் அன்றோ! ஆம்! பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களையெல்லாம் ஓரிடத்தில் குவித்து வைத்து, அவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்ற உபகாரிகள் வியாபாரிகள் என்போர்.

அவ்வுபகாரிகளாகிய வியாபாரிகளிடத்தில் என்ன இருக்கவேண்டும்? நாணயம் இருக்க வேண்டும்,, ஆம்! நா-நயம் இருக்க எவ்ண்டும். சொல்லில் தூஇமையிருக்க வேண்டும்,, வாய்மையிருக்க வேண்டும். இருந்தது அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடத்தில் ,, இருக்கிறதா நம்மிடத்தில் ?

வாருங்கள் வள்ளல் நபி [ஸல்] அவர்களின் வாய்மை காண்போம் ,,
ஒரு நாள் நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர் வந்தார். வந்தவர்  ''அல்லாஹ்வின் தூதரே! தங்களிடத்தில் விற்பனைக்கு ஒட்டகங்கள் இருப்பதாகக் கேள்வியுற்றேன்.. அவற்றை வாங்கிச் செல்லவே வந்துள்ளேன்'' என்றார்.

நபி [ஸல்] அவர்கள் ,  '' என் ஓட்டகைக் கொட்டடியில் கட்டப்பட்டுள்ள அனைத்துமா வேண்டும்?'' எனக் கேட்டார்கள். ''ஆம்'' என்றார் வாங்கிட வந்தவர். நபி [ஸல்] அவர்கள் .  '' சகோதரரே! என்னிடமுள்ள ஓட்டகைகளில்  நொண்டிகலும் , சப்பாணிகளும் உள்ளன. அவைகள் உமக்கு பயன்படா! உமக்குப் பயனளிக்கக் கூடிய கொழுத்த , ஒட்டகைகளை வாங்கிச் செல்லும்'' என்று கூறிய பின் அம்மனிதருக்குப் பயன் தரக் கூடிய நல்ல ஓட்டகைகளைக் கொடுத்து அனுப்பினார்கள்,, மகிழ்வுடன் வாங்கிச் சென்றார் வந்தவர்.

நபி [ஸல்] அவர்கள், 'உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர் களுடன் சுவர்க்கத்தில் இருப்பார்.'' எனக்கூரியுள்ளார்கள் .
ஆதாரம்..திர்மிதி]

இன்றைக்கு வியாபாரிகள் பலரின்  நிலை என்ன? சந்தைக்கு விற்பனைக்காக ஆடு மாடுகள்  ஓட்டிவருவார்கள். அவைகளில் பல தங்களுக்கு பயன் படாது என்று அறிந்தும் எவன்  தலையிலாவது கட்டுவதற்கு நோயுற்று மெலிந்த நலிந்துபோன ஆடு, மாடு, கோழிகள் கொண்டு வருவார்கள்.

வழியில் புல்லை, வைக்கோலை , தீனிகளை அவைகளுக்குக் கொடுத்து, குளம் குட்டைகளில் நீர் புகட்டிக் கொண்டு வந்து பொய்க்  கூறி விலையாக்கி விட்டுச்சென்று விடுவர். இதுதான் இன்றைய வணிகர்களின் நாணயமிக்க வியாபார முறை!

இன்னும் இவைப்போன்று பல தொழிகளில் வியாபாரங்களில் நம்மவர்களின் வியாபார நுணுக்கம் இவ்வாறே இருந்து வருகின்றன.  பொய்யையே பலர் வியாபாரமாக்கிக் கொண்டு விட்டனர்.  ''பொய் சொன்னவாய்க்கு போஜனம் கிடைக்காது'' என்பார்கள் ஆனால் , இவர்களோ பொய் சொன்னால்தான் போஜனமே கிடைக்கிறது  ''என்கிறார்கள்.

பிறருக்கு உதவிசெய்வதில் முன் மாதரி 

மக்காவில் ஒருநாள் , இரவு நேரம் நபி [ஸல்] அவர்கள் வீதியில் ஒரு புறமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் . வீதியின் மறுபுறத்தில் ஓர் ஒலிகேட்கிறது.

ஒட்டகைத்திடலுக்குப்  போவதற்குக் கூலிகள் எவரும் உள்ளரா ??" என்று அவ்வொலி கேட்டு அண்ணல் நபி [ஸல்] அவர்களின் புனித கால்கள் அங்கு நடக்கின்றன. சென்று பார்த்தபோது, கண்கள் ஒளி இழந்த நிலையில், கையில் தடியூன்றியவராக, வயது முதிர்ந்த ஓர் அம்மையார் மூட்டை முடிச்சுகளுடன் நின்று கொண்டிருக்கிறார்.

அருகில் சென்று அண்ணலார் [ஸல்] அவர்கள்  , ''தாயே! தங்களுக்கு என்ன உதவி வேண்டும்? எனப் பரிவுடன் கேட்டனர்.

''என்னிடமுள்ள மூட்டைகளை எடுத்துக் கொண்டு ஒட்டகக்குழு இருக்கும் திடலுக்கு செல்ல வேண்டும்,'' என்றார் அம் முதியதாய். அங்கு தூக்கிச் செல்வதற்குரிய கூலியும் பேசப்பட்டது.

நபி [ஸல்] அவர்கள் மூட்டைகளைத் தங்கள் தலையில் சுமந்தவாறு, அந்த அம்மையாரின் கைத்தடியைப் பிடித்து மெல்ல அவரை அழைத்துக்கொண்டு ஓட்டகைதிடலை அடைந்தனர்.  மூட்டைகளைக் கீழே இறக்கி வைத்தவுடன் பேசியவாறு அந்த அம்மையார் கூலியைக் கொடுத்தார். அண்ணலார் நபி [ஸல்] அதனை வாங்க மறுத்தனர். அந்தத்தாய், '' கூலிக்காகத்தானே இவைகளிச் சுமந்து வந்தாய் பிறகேன் வேண்டாம் என்கிறாய்?'' என வியவுடன் வினவினர்.

அதற்கு அண்ணலார் அவர்கள்   ''தாயே! நான் அவைகளைக் கூலிக்காகத் தூக்கிவரவில்லை! தங்களின் வயது முதிர்ச்சியும், கண்ணொளி இழந்த நிலையம் என்னைத் தங்களுக்கு உதவிடச் செய்தன .'' என்றார்கள். பின்னர், அண்ணலார் அவர்கள்,   ''தாயே! தங்களுக்கோ பார்வை இல்லை! வயது முதிர்ந்தும் உள்ளீர்கள், இந்நிலையில் இரவு நேரத்தில் மக்காவை விட்டு வேற்றூர் புறப்பட வேண்டிய தேவை என்ன நேர்ந்து விட்டது?'' என வினவியபோது,

''மகனே! யாரோ முஹம்மது என்பவர் மக்களிடம் இறைவன் ஒருவன்,, நீங்கள் அவனையே வணங்க வேண்டும். நீங்கள் வணங்கிவரும் இந்தத் தெய்வங்கள் சக்தியற்றவைகள் என்றெல்லாம் கூரிவருகின்றாராம். எனவே, எங்கள் மூதாதையர்கள் வணங்கி வருபவற்றை நான் புறகணிக்கவில்லை,, மேலும், அந்த முஹம்மது  வின் பிரச்சாரத்தைக் கேட்கவும் விரும்பவில்லை,, அவரின் பேச்சு என் செவிகளில் விழக்கூடா தென்று எண்ணியே இரவோடு இரவாகப் புறப்பட்டு விட்டேன்'' என்று கூறினார்.

பிறகு அந்த மூதாட்டி, ''மகனே! நீ மிக நல்லவனாக இருக்கின்றாய் நீ யார்?'' எனக்கேட்டார்கள்.

''தாங்கள் எந்த முஹம்மதுவின் ஓர் இறைக்கொள் கையின் பிரச்சாரம் தங்கள் செவிகளில் விழுவதை விரும்பாது வேற்றிடம்  செல்லக் காரணமாக இருக்கின்றதோ அக்கொள்கையை மக்களுக்குப் பிரச்சாரம் செய்திடும் முஹம்மது நான்தான்.'' என்றார்கள் அண்ணலார்.

அண்ணலாரின் மொழிகேட்டு வியந்துபோன அம்மூதாட்டி,  ''மகனே! நீ மிகவும் நல்லவனாக இருக்கின்றாயே என்னிடம் உன்னைப்பற்றி தவறாக அன்றே கூறப்பட்டது அவ்வாறாயின் , நீ கூறிவரும் ஓர் இறைக்கொள்கையையும் நல்லதாகவும், உணமையானதாகவும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.'' எனக்கூறிவிட்டு, திருக்கலிமா மொழிந்து இனிய இஸ்லாத்தில் இணைந்துவிட்டார்.

ஆம் ,, அண்ணலாரிடம் இருந்தப் பிறருக்கு உதவிடும் நற்பண்புதான் பலரையும் இஸ்லாத்தில் இணைத்து வைத்தது என்பதை அறிந்திடும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை . முஸ்லிம்கள் எனக்கூறிகொள்ளும் நம்மிடம் பிறருக்கு உதவிடும் நற்பண்பு ஏதேனும் ஒன்றுள்ளதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் அண்ணலாரின் அற்புத நிகழ்வுகள் மலரும்..........
அல்லாஹ் மிக்க அறிந்தவன்..
சத்திய பாதை இஸ்லாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!