சனி, செப்டம்பர் 05, 2015

பேஸ்புக்கு போராளியே ! கொஞ்சம் நில்லு! உனது ஒவ்வொரு லைக் உம் ஷேர் உம் tag உம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறாய் ?

பேஸ்புக்கு  போராளியே ! கொஞ்சம் நில்லு! உனது ஒவ்வொரு லைக் உம் ஷேர் உம் tag உம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறாய் ?
பேஸ் புக் போராளியே! கொஞ்சம் நில்லு!

உனது ஒவ்வொரு likeஉம் shareஉம் tagஉம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறாய். அவை எல்லாம் அல்லாஹ் உனக்கு தந்திருக்கும் அமானிதமே! அவை ஒவ்வொன்றுக்கும் நீ பொறுப்புச்சொல்ல வேண்டும்.


புதியவைகளை முண்டியடித்துக்கொண்டு பகிர்ந்து விடுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறாய். குறிப்பாக உனது இன்றைய நிலையில் சமூகத்திற்கு எதிரான அநீதங்கள் தொடர்பான பதிவுகள், உன் எதிரிகளாக நீ கறுதுபவர்கள் மற்றும் உனது நிலைப்பாட்டிற்கு மாற்றமானவர்களை இழிவாக விமர்சிக்கும் பதிவுகள் தென்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு பகிர்ந்து விடுகிறாய்!

ஆனால், கொஞ்சம் நிதானித்துப் பார்; 'ஒருவன் தான் கேள்விப்படுகின்ற அனைத்தையுமே சொல்லி விடுகின்றான் என்றால் அதுவே அவன் ஒரு பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும்' என நபி மொழி சொல்கிறது. எனவே ஒரு பகிர்வுக்கு முன்னால் ஒரு முறைக்கு பல முறை அதன் உண்மைத்தன்மையை, பொறுத்தப்பாட்டை, பிரயோசனத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அத்தியாவசியமானதாகும். இல்லாத போது ஒரு பெரும் பாவத்தை செய்து விட்டு கைசேதப்பட வேண்டி ஏற்படும்.

அல்லாஹ்வுக்காக இதில் கூடிய கவனம் செலுத்து!

உனது 'வீடியோ எடிட்டிங்' மற்றும் 'கிரபிக் டிஸைனிங்' மெச்சத்தக்கது. அதே நேரம், இஸ்லாத்தை அல்லது முஸ்லிம்களை தூற்றபவர்களை, சமூகத்திற்கு அநீதி இழைத்தவர்களை, உனது நிலைப்பாட்டிற்கு மாறுபட்டவர்களை கேவளமாக சித்தரித்து, விகாரப்படுத்தி வெளியிடுவதில் உனக்கு ஏன் இத்தனை ஆர்வம்?

உன்னைப்படைத்த அல்லாஹ் சொல்கிறான், “மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்”.(82:8)! அப்படியானால் படைத்தவனின் Unique Design ஐ உருக்குளைக்கும் உரிமையை நீ எடுத்துக் கொள்வது எல்லை மீறும் செயலாகும்! உனக்கு வழங்கப்பட்ட அறிவு எனும் அமானித்தை துஷ்பிரயோகம் செய்வது மாபெரும் குற்றமாகும்.

அல்லாஹ்வுக்காக அதனைத் தவிர்த்துக்கொள்!

நமக்கு பிடிக்காத கொள்கையை மறுத்துறைப்பது அறிவு சார்ந்தது. ஆனால் அதனை சுமந்து திரிபவர்களை வெறுப்போடு பார்ப்பது இஸ்லாத்திற்கு அந்நியமானது.

அத்தகைய மனிதர்களின் அந்தரங்க வாழ்வை அம்பளப்படுத்துவது உனக்கு இஸ்லாம் ஹராமாக்கிய விடயமாகும். 'அடுத்தவனின் குறைகளை மறைத்தால் அல்லாஹ் உனது குறைகளை மறைத்து விடுவான். மாறாக வெளிப்படுத்தினால் அல்லாஹ் உனது அசிங்கங்களை வெளிப்படுத்தி விடுவான்' மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள். அல்லாஹ் வெளிப்படுத்தினால் அதற்கு திறைபோடுவது யார்?

கருத்துப்பறிமாற்றங்களின் போது, ஒருவரின் கருத்து உன்னை ஆக்ரோஷப்படுத்தி விடுகிறது. அடுத்த கணம் எல்லா வித ஒழுக்கங்களையும் கண்ணியத்தையும் உனது பதிவுகள் இழந்து விடுகின்றன.

ஈமான் குடிகொண்டிருக்கும் உள்ளம் மிகவும் கண்ணியமானது. எனவே அதன் வெளிப்பாடு நிச்சயமாக கண்ணியம் மிக்கதாகவே இருக்க வேண்டும்.

யாரும் எதையும், எப்படியும் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை விசுவாசி தனது எந்த ஒரு செயலின் போதும், நின்று நிதானித்து, அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கின்ற செயலா என்பதை நன்கு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அடுத்த அடியை எடுத்து வைத்தல் வேண்டும்.

இவற்றை எப்போதும் பசுமையாக வைத்துக்கொள்! உன் செயலுக்கு உரைகல்லாக மார்க்கத்தை எடுத்துகொள்,

உனது Facebook போராட்டம் பிர்தௌஸில் கொண்டு சேர்க்கட்டும்!
நன்றி கருபிடியின் குரல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!