வியாழன், பிப்ரவரி 25, 2016

''வறியவன் பஞ்சைப்பராரியாக ஆகிவிடாதீர்கள் ! [ஜாக்கிரதை]

''வறியவன் பஞ்சைப்பராரியாக ஆகிவிடாதீர்கள் ! [ஜாக்கிரதை]
அல்லாஹ்வின் திருபெயரால் ..................
ஓட்டியாண்டிக் கேள்விப்பட்டீர்ப்பீர்கள் ''வறியவன் '' அதாவது பஞ்சைப்பராரி .
மறுமையில் அல்லாஹ்  நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்!

அண்ணல் நபி[ஸல்] அவர்கள் ''வறியவன் [பஞ்சைப்பாராரி] என்பவன் யார்? என்று வினவினார்கள். மக்கள், ''எவரிடம் திர்ஹமோ [வெள்ளி நாணயமோ] வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார்'' என்று கூறினர் . அண்ணலார் பதிலளித்தார்கள்..  ''ஒருவன் மறுமைநாளில் தன்  தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும்  திட்டியிருப்பான்,, எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான்,, எவரேனும் ஒருவரின் செல்வத்தை பறித்துத் தின்றிருப்பான்,, எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான்,, எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின்  உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தாலும் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் பஞ்சைப்பராரி ஆவர் .

அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]/ ஆதாரம்.. முஸ்லிம்]

விளக்கம் ..
இந்த நபிமொழியின் வாயிலாக மக்களின் உரிமைகளுக்கான முக்கியத்துவத்தை அண்ணலார் தெளிவுபடுத்துகின்றார்கள். எனவே, இறைவனின் உரிமைகளை நிறைவேற்றுபவர்கள், மக்களின் உரிமைகளைப் பறிக்காமலிருப்பது  அவசியமாகும்,, இல்லையெனில் இந்தத் தொழுகை, நோன்பு மற்றும் இதர நற்செயல்கள் அனைத்தும் ஆபத்திற்குள்ளாகிவிடும் .

இன்று நாம் பார்க்கிறோம். ஒருவர் இன்னொருவரை ஏசுவதையும், அவதூறு சொல்வதையும் . ஒரு ஜமாஅத் இன்னொரு ஜமாத்தை குறைக் கூறுவதையும், வசைபாடுவதையும். அன்றாடம் முகநூல் வாயிலாக காணப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அதேபோல் சுயமரியாதை, கண்ணியம் , கௌரவம் இருக்கிறது. நாம் ஒருவொருகொருவர்   தீமைகளை அறியாமல் இதுப்போன்ற செயல்கள் செய்துக்கொண்டு வருகிறோம். இன்ஷாஅல்லாஹ்  இனி இவைகளை விட்டு நீங்க வேண்டும் நாம் அனைவரும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பதை மேலே கூறியுள்ள ஹதீஸ் சான்று ..

அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம்./

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!