அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், மார்ச் 09, 2016

தொழுகை தானே அப்பறம் பார்ப்போம்...

தொழுகை தானே அப்பறம் பார்ப்போம்...
அல்லாஹ்வின் திருபெயரால் ...
தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் தடுக்கும் இது அல்லாஹ்வின் திருவசனம் !
அல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் நபிமொழி .. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் எழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ்  தன்  நிழலில் இடம் கொடுப்பான். அதில் ஒன்றுதான்  எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன், அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பவன்.


அல்லாஹ்வின் நிழல் கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! அந்த பாக்கியம் நமக்கு இப்பொழுது விளங்காது.  அந்த நாளில் கடுமையான வெப்பம் காணும்போது நமக்கு விளங்கும்.  இந்த உலகத்தில் இருக்கும் வெப்பத்தை நம்மால் தாங்கமுடியவில்லை என்றால் எப்படி அந்த நாளில் கடுமையான வெப்பத்தைத் தாங்கமுடியும் என்பதை இப்பொழுதே சிந்திக்கவும்!

2004 ஆம் ஆண்டு , அப்பொழுது ஒரு சுனாமி ஏற்பட்டது.  இந்தோனிசியாவில் உள்ள ஒரு ஊரில் , ஒரு முஸ்லிம் மனிதர் தன்  குடும்பத்தைத் தேடி வருகிறார் . அப்பொழுது தன்னுடைய வீடு சுனாமியால் இடிந்து போனதை பார்க்கிறார். அந்த இடிந்த வீட்டில் அவர் அல்லாஹ்வை நினைத்து தொழுகிறார். தன்னுடைய குடும்பத்தை இழந்து தத்தளித்துக் கொண்டுயிருக்கும் நேரத்தில் கூட அல்லாஹ்வை நினைத்துப் பார்க்கிறார். சிந்தித்து பார்க்க வேண்டும் ! அது எப்பட்டிபட்ட தருணம் என்பது எல்லோருக்கும் தெரியும்! இருப்பினும் . அல்லாஹ்வை நினைத்து இரண்டு ரக்காயத் தொழுகிறார் என்றால் அவரின் ஈமானின் உறுதியும், இறையச்சமும் என்னவென்று சொல்வது! இது ஒரு நமக்கு படிப்பினை! இது கதை அல்ல .. அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் கண்ட காட்சி!

தொழுகை என்றாலே நமக்கு ஒரு போடுபோக்கித் தனம் இருக்கும். தொழுகை தானே ! பின்னாடி பார்த்துக் கொளல்லாம்... என்ற ஒரு அலட்சியக் போக்கு ஏற்படும்! அதே உலக காரியம் என்றால் போட்டி போட்டுக் கொண்டு முன்னுரிமை கொடுப்போம்!  கைமேல் பலம் நமக்கு தெரியும்! தொழுகை தானே .. அதன் முக்கியத்துவமும் , சுவர்க்கத்தின் திறவுகோல் என்பதை பற்றி எல்லாம்  தெரியாது! மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி .. இந்த தொழுகைப் பற்றிதான் என்பது கூட நாம் அறிந்திருக்க மாட்டோம்!

நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்.. ''எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு- அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது.. ஆதாரமாகவும் ஆகாது. ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது.''
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் அமர் பின் ஆஸ்  [ரலி]
நூல். அஹமத், இப்னுஹிப்பான் ]

நம்முடைய சமுதாயத்தில் இந்த தொழுகையைப் பற்றி சொன்னால். '' செவிடன்  காதில் சங்கு ஊதுவது போல் . அல்லது இந்த காதில் வாங்கி அந்த காது  வழியாக  சென்றுவிடும். ஜும்மா  நாளில் கூட பள்ளிக்கு சிக்கீரம் வரும் என்று தோணாது  . அந்தளவுக்கு இந்த தொழுகை பாரதுரமாக இருக்கிறது.

அல்லா கூறுகின்றான்..
மேலும், பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் [அல்லாஹ்விடம்]  உதவிதேடுங்கள் ,, எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
[உள்ளச்சமுடைய] அவர்கள், தாம்  , ''திடமாக [தாம்] தங்கள் இறைவனைச் சந்திப்போம்  .. நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம் என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோரவார் .
அல்குர் ஆன் .. அத் 2..45,46]
நீங்கள் தொழுகிறீர்களோ இல்லையோ ஒருநாள் நிச்சயமாக உங்களை தொழுகை வைப்பார்கள்  என்பதில் சந்தேகம் இல்லை. இது உறுதி!!

ஒருவர் கலிமா ஷகாதத்து சொன்னபிறகு . அவருக்கு முதல் கடமை தொழுகை தான்! பிறகுதான் மற்ற கடமைகள் . ஜகாத் வசதி உள்ளவர்கள். நோன்பு வருடத்தில் ஒருமுறை  அதிலும் அல்லாஹ்  சிலருக்கு சலுகை அளிக்கிறான். ஹஜ் வசதி, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு . தொழுகை எல்லோருக்கும் எல்லா காலங்களும்  பயனாளிகள், நோயாளிகள் யாராக இருந்தாலும் இறுதி மூச்சு வரை கட்டாயமாக தொழுதே ஆகவேண்டும்!  யாரும் இந்த தொழுகை விடயத்தில் சாக்குபோக்குச் சொல்லமுடியாது!

இறுதியாக ஒரு இறைவசனம் .. உங்களை ஸகர்  [நரகத்தில்] நுழைய வைத்தது எது? [என்று கேட்பார்கள்] அவர்கள் [பதில்] கூறுவார்கள் ''தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை''. 74..42,42]
வெற்றி இந்த தொழுகையில் தான் இருக்கிறது!
வெற்றியின் பக்கம் வாருங்கள் ! தொழுகையின் பக்கம் வாருங்கள்!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!