அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஜூலை 12, 2016

ரமளானுக்கு பிறகு .......?

ரமளானுக்கு பிறகு .......?
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான [பேச்சு, செயல் ஆகிய] வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைத் காத்துக் கொள்வார்கள் .
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர -[இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்] நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள் .
ஆனால், இதற்கு அப்பால் [வேறு வழிகளை] எவர் நாடுகிறாரோ அ [த்தகைய]வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள்[இடம் ஒப்படைக்கப்பட்ட] அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றவர்கள்.
மேலும், அவர்கள் தம் தொழுகைகளை [குறித்த காலத்தில் முறையோடு ]பேணுவார்கள்.
இத்தகையோர் தாம் [சுவர்க்கத்தின்] வாரிசுதாரர்கள்..

இவர்கள் பிர்தவ்ஸ் [என்னும் சுவனபதியை] அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அல்குர் ஆன் .. அத் 23..பக்கம் 1லிருந்து 11 வரை.

ஒவ்வொரு வருடமும் நமக்கு ரமலான் மாதத்தை அல்லாஹ் தந்துக் கொண்டியிருக்கிறான். அந்த மாத்தில் அடியார்கள் இறைச்சமுள்ளவர்களாக  ஆகவேண்டும் என்பதற்காக . அந்த மாதம் ஒரு பயிற்சி பெற கூடிய மாதம். அந்த மாதத்தில் நாம் பயிற்சி பெற்று மற்ற 11 மாதங்களில் நாம் அல்லாஹ்வுக்கு நல்லடியார்களாக வாழ வேண்டும் ! அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து , அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழியில் சென்று  அல்லாஹ்வின் நல்லடியார்களின் கூட்டத்தில் சேரவேண்டும் .

அந்த ரமலான் மாத்தில் மற்ற மாதங்களில் செய்யாத நபிலான நல்ல அமல்கள் செய்வார்கள். கியாமு லைல் தொழுவார்கள், அதிகமாக திக்ர் செய்வார்கள், திலாவதில் குரான் ஓதுவார்கள், இன்னும் பல நல்ல அமல்கள் செய்வார்கள். எல்லாப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வக்து  தொழுகையிலும் மக்கள்கள் நிரம்பி இருப்பார்கள். போட்டிப் போட்டுக் கொண்டு தர்மம் செய்வார்கள். இந்த ஆர்வம், விருப்பம், சுறுசுறுப்பு , ஆவல், ஆசை எல்லாம் மற்ற மாதங்களில் ஏன்  இல்லாமல் போனது..? மற்ற மாதங்களில் பள்ளிகள் ஒன்று அல்லது இரண்டு வரிசைகள் தான் நின்று தொழுவார்கள். பஜர்  தொழுகை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

ரமளானுக்கு பிறகு நம் நிலைகள் ஏன்  அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது..? ரமலான் மாதத்தில் மட்டும்தான் அல்லாஹ்வை வணங்க வேண்டுமா? அதிக நல்ல அமல்கள் செய்ய  வேண்டுமா?  ஐந்து நேரம் பள்ளிகளில் ஜமாஅத்துடன் தொழ  வேண்டுமா? குரான் ஓத  வேண்டுமா? அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டுமா? தர்மம் செய்ய வேண்டுமா? தீமைகளை விட்டு விலகி இருக்க வேண்டுமா? வீண் பேச்சுக்களை பேசாமல் இருக்க வேண்டுமா? . அந்த மாதத்தில் இருந்த ஆர்வம், ஆசை எல்லாம் எங்கே போச்சு?? தொழுகை அந்த ரமலான் மாதத்தில் மட்டும் தான் கடமையா?? மற்ற மாதங்களில் ஏன்  நாம் பள்ளிகளுக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவதில்லை..? சிந்திக்க வேண்டாமா!!

ரமலான் மாதத்தில் நமக்கு இறையச்சம் வரவில்லை என்றால் மற்ற மாதங்களில் நமக்கு எப்படி அல்லாஹ்வின் பயம் வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?? ரமலான் மாதத்தில் நிறைய சுன்னத்தான, நபிலான நல்ல அமல்கள் செய்தோம் .. ஆனால் மற்ற மாதங்களில் ஒரு சுன்னத்தான, நபிலான நல்ல அமல்கள் கூட  இல்லையே ? ஏன் ?  இதுதான் ரமளானுக்கு பிறகு மாற்றமா? இதுதான் உண்மையான இறையச்சமா? சிந்திக்க மாட்டீர்களா??

ஒவ்வொரு வருடமும் ரமலான் வரும் இன்ஷாஅல்லாஹ் ... ஆனால் நாம் இருப்போமா? யாராவது உறுதியாக சொல்லமுடியுமா? போன ரமலானில் இருந்தவர்கள் இந்த ரமலானில் இல்லை! இந்த ரமலானில் இருப்பவர்கள் அடுத்த ரமலானில் இருப்பார்களா என்பது அல்லாஹ் அறிந்த விடயம்!

இன்ஷாஅல்லாஹ் நாம் ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் ரமலான் மாதத்தில் அதிகம் அதிகம் நல்ல அமல்கள் செய்தோம். தீமைகளை விட்டு விலகி இருந்தோம். ரமளானுக்கு பிறகு நாம் இன்னும் அதிகம் நல்ல அமல்கள் செய்கிறோமா ? தீமைகளை விட்டு இன்னும் விலகி இருக்கிறோமா? நம்மிடத்தில் என்ன என்ன நல்ல குணங்கள் வந்தது! கெட்ட  [தீய] குணங்கள் போனது! என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்! அல்லாஹ்வின் நல்லடியார்கள்! 

அல்லாஹ்வின் நல்லடியார்கள்! நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்! நாளை மறுமை நாளில் அல்லாஹ்வை ஸலீம் என்ற உள்ளத்துடன் சந்திக்கவேண்டும்!
ரமளானுக்கு பிறகு நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகிவிட்டீர்களா ! அப்படி இருந்தால்  அல்ஹம்துலில்லாஹ் ! அல்லாஹ்வுக்கு இன்னும் அதிகம் அதிகம் நன்றி செலுத்த வேண்டும்  . இல்லை ஆகவில்லை அப்படியே என் நிலை இருக்கிறது! கவலை வேண்டாம் இன்ஷாஅல்லாஹ் நீங்கள் மனம் வைத்தால்  இப்போதே ஆகமுடியும்!! அல்லாஹ் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான் ! நீங்கள் தயாரா???
அல்லாஹ் மிக்க அறிந்தவன்............................********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!