செவ்வாய், ஜூலை 26, 2016

திருக்குர் ஆன் ஓதுங்கள்

திருக்குர் ஆன் ஓதுங்கள் ...........
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
திருக்குர் ஆனை  ஒழுங்கு முறையோடு [பிழையின்றி கண்ணியமாக] ஓதுங்கள். [அல்குர் ஆன் ]

நபிகள் நாயகம் கூறுகிறார்கள்..
குர்ஆன் ஷரீபைத் தாமும் ஓதுவதோடு  பிறருக்கும் அதனை கற்றுக் கொடுப்பவரே உங்களில் மிகவும் மேலானவராவார்.
அல்ஹதீஸ்]


இறைவனின் திருமறையில் எவர் ஓர் எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது பத்து நன்மைகளுக்குச் சம்மமாகும். ஆனால் அலிஃப் , லாம், மீம், ஒரு எழுத்து' என்று நான் கூறவில்லை  . 'அலிஃப்  ஒரு எழுத்து,, லாம் ஒரு எழுத்து 'மீம் ஒரு எழுத்து,, என்றுதான் கூறுகிறேன் என்று அண்ணல் நபி [ஸல்] கூறினார்கள்.
அல்ஹதீஸ்]

துக்கங்களின்  அகழிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் [ஸல்] தம் சஹாபாக்களிடம் கூற, அதற்கு ஸஹாபாக்கள் , யாரஸூலுல்லாஹ்! துக்கங்களின்  அகழ் என்றால் என்ன?'' எனக் கேட்டார்கள் . அது  நரகத்திலுள்ள ஒரு பள்ளத்தாக்கு அதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்று இதர நரகங்களும் இறைவனிடம் தினந்தோறும் நூறு தடவை பாதுகாவல் தேடுகின்றன என்று நபிகள் நாயகம் [ஸல்] கூற, 'அதில் எவர் போவார்கள்?' என்று கேட்டார்கள். வெளிப்பக்கட்டிற்காகவும் , ஊரார் மெச்சுவதற்காகவும் குர் ஆனை  மனப்பாடம் செய்து [பொதுமக்கள் முன்] ஒப்புவிப்போர்கள் எனக்கூறினார்கள்.
அல்ஹதீஸ் ]

குர்ஆனிலிருந்து  ஒரு சிறிதும் எவருடைய வயிற்றில் [உள்ளத்தில்] மனப்பாடமாக இல்லையோ அப்படிப்பட்ட அவருடைய உடலானது காலியாகக் கிடக்கும்  பாழடைந்த வீட்டைப் போலாகவும்.
அல்ஹதீஸ்]

எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுகிறது அங்கு பரக்கத்து  உண்டாகும். குடும்பம் அபிவிருத்தியடையும், மலக்குமார்கள் விஜயம் செய்வார்கள். ஷைத்தான் ஓடி விடுகிறான். இவ்வீடுகளில் குர்ஆன் ஓதப்படவில்லையோ அங்கு பரக்கத்து  எடுப்பட்டு  போகும். அவ்வீட்டை விட்டு மலக்குமார்கள் [வானவர்கள்] போய்விடுவார்கள். ஷைத்தான் அவ்வீடுகளில் குடிகொண்டு விடுவான் என்று நபி [ஸல்] நவின்றார்கள்.

அன்பு நேயர்களே! குர்ஆன் ஓதுவதால் ஏற்படும் பலன்களை பற்றி ஓரளவு தெரிந்துக் கொண்டோம். ஆனால் இன்று குர்ஆன் ஓதியுள்ளோமா...? நம் பிள்ளைகள் ஓதியுள்ளனவா..? அவர்களை  ஓத வைக்கிறோமா..? என்பதை நாம் சற்று சிந்திக்கவேண்டும். நாம் பிள்ளைகளை மத்ரஸாவிற்கு அனுப்புவதும் பூஜியமாக  இருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு போகவில்லை என்றால் எந்த அளவு கண்டிக்கிறோமோ, அந்த அளவிற்கு மத்ரஸாவிற்கு போக வில்லையென்றால் நாம் கண்டிப்பதில்லை. குர்ஆன் ஓதுவதால் உள்ளம் தெளிவாகிறது. ஈமான் வலுவடைகிறது. இதனால் பிள்ளைகளின் வாழ்க்கையும் நடைமுறை பழக்கவழக்கங்களும் ஒழுங்காகிறது. இதனால் பிள்ளைகளை பெற்ற  பெற்றோர்களுக்கும் ஒரு மலர்ச்சி ஏற்படுகிறது.

அந்தோ பரிதாபம்! குர்ஆன் ஓதி சிறப்பிக்க வேண்டிய இல்லங்களில், அனாச்சாரங்கள் நிறைந்த பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வகை  செய்கிறோம். இந்த அறியாமை நிலை நீங்கக்  கூடாதா? நம் பிள்ளையைப் பார்த்து குர்ஆன் ஓது  என்றால், குர்ஆன் ஓதத்தெரியாது. சினிமாப்  பாடல் பாடவா என்று கேட்கிறது. இப்பிள்ளைகள்  வளர்ந்து வரும்போது நிலைமை என்னவாகும்? இப்பிள்ளைகளால்  பெற்றோர்களுக்கு ஏது  நிம்மதி? இதற்கு யார் காரணம்? சிந்திக்க வேண்டும்!

சிலர் வருடத்தில் ஒருமுறை ரமலான் மாதம் மட்டும் ஓதுவார்கள்! இன்னும் சிலர் அவர்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் அப்பொழுது குர்ஆனை  ஓதுவார்கள்! புது வீடு குடிபுகுந்தால் அப்பொழுது சிலர் குர்ஆன் ஓதுவார்கள். இன்னும் சிலர் மௌளது ஓதுவார்கள்! இப்படித்தான் கால காலமாக நடந்துக்  கொண்டுயிருக்கிறது!
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அல்லாஹ் நம்மிடம் பேசுவதை நாம் விரும்பமாட்டோமா..?   குர்ஆன் ஒத்துவதினால் கிடைக்கும் சிறப்பைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்..... கியாமத் நாள் வந்துவிடும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!