அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

சிந்தனையூட்டும் நபிமொழிகள்..

சிந்தனையூட்டும் நபிமொழிகள்..

நபி [ஸல்] அவர்கள் அருளியதை  ஹஜ்ரத் முஸ்தவரிதுப்னு  ஷத்தாத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. '' அல்லாஹுத்தஆலாவின் மீது ஆணையாக ! மறுமைக்கு முன் உலகின் உதாரணம் . உங்களில் ஒருவர் தன் விரலைக் கடலில் முக்கியெடுத்துப் பிறகு தன் விரலில் எவ்வளவு நீர் ஒட்டிக் கொண்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளவும் !'' அதாவது கடலில் இருக்கும் நீரை கவனிக்கும் பட்சத்தில் விரலில் ஒட்டியுள்ள நீர் எவ்வாறு மிகக் குறைவானதோ அவ்வாறே மறுமையை கவனிக்கும் பட்சத்தில் உலக வாழ்க்கை மிகக் குறைவானது .
நூல்-முஸ்லிம்]இன்ஷாஅல்லாஹ்  இப்போ பார்க்க போகின்ற ஹதீஸ் . நம்மில் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் செல்வத்தை அதிகமாகாவதிலேயே  அவர்களுடைய குறிக்கோள் இருக்கிறது. அவர்கள் மறுமையை கொஞ்சம் கூட நினைப்பதில்லை. மறுமைக்கான காரியங்களை செய்ய அவர்களுக்கு நேரம் இல்லை. சிந்திப்பதற்காக  ஒழிய யாரையும் அவர்கள் மனம் புண்படும் விதமாக இல்லை.

''ஹஜ்ரத் உம்மு தர்தா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''நான் ஹஜ்ரத் அபூதர்தா [ரலி] அவர்களிடம் ,  ''தங்களது விருந்தினரை உபசரிக்க  மற்றவர்களை போல் நீங்களும் ஏன் சம்பாதிப்பதில்லை?' என்று கேட்டேன். 'உங்களுக்கு முன்னாள் கடினமான பள்ளத்தாக்கு ஒன்று உண்டு, அதில் சுமை உள்ளவர்களால் அதை எளிதில் கடக்க இயலாது,' என நபி [ஸல்] அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் , எனவே அப்பள்ளத்தாக்கைக் கடப்பதற்காக என் சுமையைக் குறைத்துக்  கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறினார்கள்.
நூல்- பைஹகீ ]

நாம் சம்பாதிக்கும் செல்வத்தில் அல்லாஹுத்தஆலா பரக்கத்து செய்யணும். பரக்கத்து இல்லாத செல்வம் '', அது செல்வம் அல்ல ''   ...

''இரு காரியங்களை  மனிதன் வெறுக்கிறான் , [முதலாவது] மரணம்  குழப்பதைவிட மரணம் மேலானது, தீனுக்கு நஷ்டத்தை உண்டாக்கும் குழப்பங்களை விட்டும் மரணம் அவனை பாதுகாக்கிறது.  [இரண்டாவது] செல்வம் குறைவதை மனிதன் விரும்புவதில்லை , செல்வத்தில் குறைவு ஏற்படுவது மறுமையின் கேள்வி கணக்கை மிகவும் எளிதாக்குகிறது ,'' என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் மஹ்மூதுப்னு லபீத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
[முஸ்னத் அஹ்மத், மஜ்ம உ உஸ்ஸவாயித்]

உங்கள் சிந்தனைக்கு மூன்று ஹதீஸுக்கள் .
சத்திய பாதை இஸ்லாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!