அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஏப்ரல் 16, 2016

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான்!

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான்!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான் அன்றி வேறில்லை என அல்லாஹூ தஆலா  கூறுகின்றான். உணமையிலேயே இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பார்க்கின்றபோது சிறு பிள்ளைகளின் விளையாட்டு போன்றுதான் தோன்றுகிறது. சில கிராமங்களில் சிறு பிள்ளைகள் ஒன்றுக்கூடி விளையாடுவதை நாம் பார்க்க முடியும். அப்பிள்ளைகள் சிறு சிறு பானைகளையும் சட்டிகளையும் அடுப்புகளையும் வைத்திருப்பார்கள். அப்பிள்ளைகள் இரு கூட்டமாகப் பிரிந்து மாப்பிளை வீட்டாரென்றும் , பெண் வீட்டாரென்றும்  தனித்தனியாக இருந்து சமைத்து சாப்பிடும் விளையாட்டை விளையாடுவார்கள்.அவர்கள் வைத்திருக்கும் அச் சிறு பானைகளில் மண்ணைப் போட்டு சோறு என்றும் சட்டியில் சிறு சிறு கற்களைப் போட்டு கறி  என்றும் இலைகளை கீரையென்றும்  சொல்லிக் கொள்வார்கள். மேலும் ஈர மண்ணை எடுத்து சிறு சிறு சிறு வீடுகளைப் போன்றும் கட்டிக் கொள்வார்கள். பெண் வீடடாரிடத்தில் பெண்ணைப் போன்று துணியினால் செய்யப்பட்ட ஒரு பொம்மையும், மாப்பிளை வீட்டாரிடம் மாப்பிளையைப் போன்று ஒரு பொம்மையும் இருக்கும்.

பெண் பேசி திருமணம் நடைபெறும். குழந்தையும் பிறந்து விடும் . இம்மாதரியான விளையாட்டுகளை பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் உறவினர்கள் அப்பிள்ளைகளைச்  சாப்பிடுவதற்காக அழைத்தால் அப்பிள்ளைகள் போக மறுத்து விளையாட்டிலேயே ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் உண்மையான வீடோ பெரியது, பளபளப்பான பீங்கானில் சோறு வைக்கப்பட்டிருக்கும், கறி  சமைத்து பளபளப்பான தட்டையிலும் பாலும் பழமும்  இன்னும் பல வகையான சுவையான உணவுகளையும் வைத்துக் கொண்டு அழைத்தாலும் அப்பிள்ளைகள் போக மறுத்து விளையாட்டிலேயே இருந்து விடுவார்கள்.

இதைப் போலவே உணமையான உணவும் , உடைகளும், இருப்பிடமும் மறுமையில் இருக்கிறது. அதுதான் சொர்க்கம். அதை அடைவதற்காக முயற்சி செய்யுங்கள்! மேலும் இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டு வேடிக்கைதான் என்று கூறினாலும் அச்சிறு பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் போன்று எங்களுக்கும் சொர்க்க வாழ்வு வேண்டாம், இந்த உலக வாழ்க்கையே போதும் என்று கூறுவர்  தீனுடைய அறிவை பெறாதவர்கள்.
 அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? மாஷாஅல்லாஹ் இன்னும் அந்த பழைய  ஞாபகம் வருகிறது.. சிறு பிள்ளைகள் விளையாடும்  விளையாட்டு ... அவர்களில் நானும் ஒருவன்.....
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!