அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், நவம்பர் 28, 2013

கனவின் பலன் (2)


கனவின் பலன் (2)

கனவுகள் :  பலன்கள் :

அரசரைக் காணுதல் : உங்களிடமுள்ள செல்வம் மேன்மேலும் பொழிக்கும் கௌரவம் உண்டாவதுடன் அதிகாரப் பதவி ஏதேனும் கிட்டும்.


அரசர் முகம் காணுதல்: உங்களுடைய அந்தஸ்தும் கௌரவமும் உயரும் அதிகாரம் கிடைக்கும்.

அரசரைச் சந்தித்தல்:  அரசாங்கத்தால் உதவியும் பயனும் பெறுவீர்கள் !

அரசர் சிரிக்கக் கண்டால் : கௌரவமும் மரியாதையும் ஏற்படும் சந்தோசம் பெருகும்.

அரசர் தகாத இடத்தில் இறங்குதல் : பிரஸ்தாப இடத்தில் திடிரென அபாயங்கள் நேரிடும் அங்குள்ள விவசாயம் நாசமாகும்.

அரசருடன் உணவுருந்துதல் : வயது அதிகமாகும் . ஆயுள் வளரும் , தேக ஆரோக்கியம் பெருகும் வியாபாரத்திலும் தொழிலும் முன்னேற்றம் கிடைக்கும்.

அரசர் கோபமாயிருக்கக் காணுதல் : எதிர்பாராத நஷ்ட்டங்கள் பல ஏற்படும் .அச்சத்தால் மனக் கலக்கம் உண்டாகும்.

அடிமையை விற்கக் காணுதல்: இது துக்கத்தின் அறிகுறியாகும் .இரவும்,பகலும் மனக் குழப்பம் இருக்கும்.

அரசருடன் சண்டை : அதிகமான சுகம் குறையும்.

அழகிய கிழவி : வசிக்கும் வீடு அழகாகவும் , உணவு அதிகம் கிடைக்கும்.

அடுப்பு : ஒரு பெண்ணால் உங்களுக்கு நல்ல பிரயோசன உண்டாகும்.

அம்பு எய்தல் : உங்கள் நோக்கம் நிறைவேறும் , சந்தோஷமும் கிடைக்கும்.

அம்பினால் போர் செய்தல்: உங்கள் ஆயுள் பெருகும், எதிரிகள் மீது வெற்றி  பெறுவீர்கள் .

அல்லாஹ்வின் ஒளியை காணுதல்:முஃமினாக இருப்பின் உங்களுக்குச் சந்தோசம் உண்டாகும். நீங்கள் முஸ்லிமாக இருந்தால் கௌரவம் பெறுவீர் .அறிஞ் ராக இருந்தால் தூய்மை அடைவீர் .

அல்லாஹ் கணக்கு கேட்பதைக் காணுதல்: நீங்கள் இல்லத்தில் வசிப்பவராயின் , சந்தோஷமும் , ஆனந்தமும் உண்டாகும். உங்கள் பிரயாணம் கஷட்டமின்றி முடிவடைந்து சுகமே இல்லம் திரும்புவீர் .

அரிசி: நீங்கள் பல சங்கடங்களையும் பட்டபின் செல்வத்தையும் அடைவீர் .

அம்மியைக் காணுதல்: சமுதாய மக்களிடையே உங்களுக்குத் தனிச் சிறப்புடைய இடம் கிடைக்கும்.

அம்மியில் தண்ணீர் ஓடுதல்: உங்களுடைய ஆயுளின் முடிவு கால அறிகுறி இது. வெகு சிகிரத்தில் நீங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்து விடுவீர்கள்.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும்..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!