ஞாயிறு, டிசம்பர் 08, 2013

மாபெரும் சம்பவம்




அல்லாஹ்வின் திருபெயரால் ......

எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது.

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு ) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

வானமும் பிளந்து , அந்நாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

இன்னும் மலக்குகள் , அதன் கோடியிளிருப்பார்கள்; அன்றியும் ,அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை , (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள் .

(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன் ) கொண்டுபோகப்படுவீர்கள் , மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

ஆகவே, எவருடைய பட்டோலை  அவருடைய வலக்கையில்  கொடுக்கப்படுமோ , அவர் (மகிழ்வுடன்) , "இதோ ! என் பட்டோலையைப் படியுங்கள் " எனக் கூறுவார் .

நிச்சயமாக , நான் என்னுடைய கேள்வி கணக்கை , திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன் ."
ஆகவே , அவர் திருப்தியான சுக வாழ்க்கையில்  - உயர்ந்த  சுவர்க்கத்தில் இருப்பார்.

அதன் கனி (வகை) கள் (கைக்கு எட்டியதாக ) சமீபத்திருக்கும் .

"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்திய (அனுப்பிய )ய (நல்ல அமல்கள்  ) காரணத்தால் , நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள் ; இன்னும் பருகுங்கள் " (என அவர்களுக்கு கூறப்படும்)

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில்  கொடுக்கப்படுமோ அவன் கூறுவான் : என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப் படாமல் இருந்திருக்க வேண்டுமே !
அன்றியும் என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லை - " (நான் இறந்துபோதே ) இது முற்றிலும் முடிந்திருக்ககூடாதா ? " என் செல்வம் எனக்கு பயன்படவில்லையே !
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே !( என்று அரற்றுவான்)
"(அப்பொழுது) அவனைப் பிடித்து , பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."
"பின் அவனை நரகத்தில் தள்ளுங்கள் .

"பின்னர் எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் காட்டுங்கள் " (என்று உத்தரவு இடப்படும் )

"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான் ."
"அன்றியும் அவன் ஏழைகளுக்கு (தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை .

"எனவே ,அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்பட ) எந்த நண்பனும் இல்லை ."

"சீல் நீரைத் தவிர , அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் அதைப்  புசியார் ."

அல்குர் ஆன் 69:13டு 37)

நம்மில் சிலர் பெயர் அளவில் முஸ்லிம் இருக்கிறார்கள் , அவர்கள் சிந்திக்க வேண்டும்! ஈமான் என்பது " ஒரு முஸ்லிம் அனைத்தையும் எந்த சந்தேகம் இல்லாமல் பரிபூர்வமாக அல்லாஹ்வை நம்ப வேண்டும்"! நல்ல அமல்கள் செய்ய வேண்டும் ,அவரும் செய்ய வேண்டும் பிறரையும் தூண்ட வேண்டும்! அல்லாஹ்வை மட்டும் நம்பி ,மறுமை ஒன்று கிடையாது என்று ஒரு முஸ்லிம் நினைப்பானால் .அவன் முழுமையாக ஈமான் கொள்ளவில்லை என்று பொருள் . ஈமான் என்றால் என்ன ? என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்!

அமல்கள் முடிவை கொண்டு கணிக்கப்படுகின்றன என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பாளர் : சஹ்ல்(ரலி)
ஆதாரம்: புகாரீ ,முஸ்லிம்.)

ஒவ்வொரு மனிதனும் அவன் மரணித்த நிலையிலே எழுப்பபடுவான் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பாளர் :ஜாபிர் (ரலி) ஆதாரம்:முஸ்லிம்.)

எப்பொழுது மரணம் வரும் எங்கே ? எந்த நிலையில் வரும் என்பது யாருக்கும் தெரியாது . நாம் இன்று உலக மோகத்தில் முழ்கி இருக்கிறோம் , பொருள்களை சேமிக்க வேண்டும் என்று பொருள்களை தேடி அழைக்கிறோம் . அந்த நேரத்தில் மரணம் வந்தால் , நாம் என்ன செய்ய முடியும் ? நம் பாவதிருக்கு அப்பொழுது துஆச் செய்ய முடியுமா ? நாம் சேமித்து வைத்திருந்த செல்வம் அனைத்தையும் அப்பொழுது தர்மம் கொடுக்க முடியுமா ? எல்லாம் தாமதம்! வரும் முன் காப்போம் !

அல்லாஹ் நம்  அனைவரையும் கெட்ட  மரணத்தை  விட்டு காப்பாற்றுவானாக ...
கலிமா சொல்லி மரணிக்க கூடிய கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக ..ஆமீன் .........

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!