வியாழன், ஜனவரி 30, 2014

அவசரம் வேண்டாமே ! ஆனால், இதில் அவசரம் வேண்டுமே!



அவசரம் வேண்டாமே ! ஆனால், இதில் அவசரம் வேண்டுமே!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு ஆண்/பெண் மீது கடமை!
மார்க்க கல்வி இல்லாதனால் , மூடப் பழகங்கள், சடங்கு ,சம்ப்ராதாயம் , பித் அத் மற்றும் இன்னும் நூதன வழிப் பாடுகள் ,செயல்கள் . நம்மிடத்தில் நிறைய இருக்கிறது .அவைகளை தவிர்க்க , மார்க்க கல்வி அறிய வேண்டும். நாம் முயர்ச்சிச் செய்ய வேண்டும் . ஒருகாலத்தில் மார்க்க கல்வியை அறிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. இன்று "அல்ஹம்துலில்லாஹ் " நிறைய தமிழ் இஸ்லாம் வலைத்தளங்கள் இருக்கிறது. ஒருநாளைக்கு கொஞ்சம் நேரம் அல்லாஹுக்காக ஒதுக்கினால் , அல்லாஹ் உங்களுக்கு கிருபைச் செய்வான்!


மனிதன் இயல்பாகவே அவசரபுத்தி உள்ளவன்! நாம் அவசரப்படுபவர்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை . இருப்பினும் -அவசரம் என்பது ஆபத்தானது என்பதையும் , அவசரம் அழிவை தேடித் தரும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரமாக ஆரம்பிக்கப்படும் அதிகமான செயல்கள் இடையிலே நின்று விடுவதையும் நாம் கண்டு கொண்டு தானே இருக்கிறோம். ஆனால் அவசரமில்லாமல்  நிதானமாக ஆரம்பிக்கப்படும் அதிகமான செயல்கள் நல்ல முறையில் முடிவதையும் நாம் காணலாம். அவசரமின்றி  நிதானத்தோடு செய்யப்படும் செய்யல வெற்றிக் கனியைப் பறித்துத் தரும்.

ஆனால் சில செயல்கள் செய்ய இஸ்லாம் அவசரப்படுத்துகிறது .
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

"மூன்று விஷயங்களை பிற்படுத்தக் கூடாது. முதலாவது, தொழுகை ! நேரம் வந்துவிட்டால் உடனே நிறைவேற்றிட வேண்டும். இரண்டாவது , ஜனாஸா ! அது தயாராகிவிட்டால் அதை அடக்கம் செய்ய வேண்டும். மூன்றாவது, கன்னிப்பெண்! அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை பெற்றுக் கொல்லப்பட்டால் உடனே மணமுடித்துவிட வேண்டும் . இம்மூன்று விஷயங்களையும் பிற்படுத்தக் கூடாது."
ஆதாரம்: திர்மிதி)

எனவே மேற்கூறப்பட்ட மூன்று விஷயங்களில் மட்டுமே அவசரப்படுவதற்க்கு இஸ்லாம்  அனுமதிக்கிறது. இது தவிர மற்ற எக்காரியத்திலும் அவசரப்படக்கூடாது என்பதையும்  நாம் இந்த நபிமொழியிருந்து விளங்க முடிகிறது .

ஆனால் , இன்று நம் பழக்கத்தில் எப்படி இருக்கிறது என்பத்தைப் பார்ப்போம்.
மூன்று விஷயங்களை நாம் பிற்படுத்தக் கூடாது என்று நபிமொழி கூறுகிறது . முதலாவது , தொழுகை அதில் நாம் நுழை வேண்டாம் . (நேரம் முறைப்படி நடக்கிறது) மற்ற இரண்டு விடயத்தை நாம் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்:
ஜனாஸா விஷயத்தில் நாம் ரொம்ப ரொம்ப தாமதபபடுத்துகிறோம் என்பதில் ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை. ஒருவர் வீட்டில் யாரவது இறந்துவிட்டால் , அந்த ஜனாஸாவை ரொம்ப சீக்கிரத்தில் அடக்கம் செய்ய மாட்டார்கள் . அதற்காக யாரும் ஹதீஸைச் சொல்லி வழியுறுத்த மாட்டார்கள். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கூட சில ஜனாஸா சில ஊரில் அடக்கம் செய்து இருக்கிறார்கள் . ஜனாஸாவை தாமதப்படுத்துவது ஒரே ஒரு காரணம் , உறவினர் வருவார் , அல்லது மகன் அல்லது மகள் வருவாள் , இன்னாரு வருவார்கள் என்று காலத்தைக் கடத்தி கொண்டே செல்வார்கள். இது நம்மிடத்தில் இருக்கும் ஒரு பெரிய தவறு. அண்ணலார் சொன்ன ஹதீஸைப் பார்க்கவும் , அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

இரண்டாவது , ஒரு கன்னிப் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டால்  , உடனே மணம்முடித்து விடவும் . இதுவும் நம்மிடத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசி விடுகிறார்கள் (நிச்சயம் செய்து முடித்து விடுகிறார்கள்) பிறகு திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள் . எத்தனை வருடம் , சில ஊர்களில் இரண்டு வருடம் , மூன்று வருடம் என்று தாமதம் செய்கிறார்கள் . இதுதான் நம்மிடத்தில் வழக்கமாக நடக்கிறது. இதுவும் நபிவழிக்கு மாற்றம் என்பத்தை நாம் என்றுமே உணர்வதில்லை .

சிந்திக்க வேண்டும் ! நன்மைகளை அள்ளிக் கட்ட வேண்டும் ! நபிவழியைப் பின்பற்ற வேண்டும்! அல்லாஹ்வின் அன்பை பெற வேண்டும்! அல்லாஹ் எங்களுக்கும், உங்களுக்கும் தௌபீக் செய்வானாக ! ஆமீன் .........
அல்லாஹ் மிக அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!