திங்கள், ஜனவரி 27, 2014

கடன் கொடுப்பதின் சிறப்பு




ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள் . அவர் வரம்பு மீறி செலவு செய்பவராக இருந்தார். எந்த ஒரு நன்மையான காரியமும் செய்யாமல் இருந்த அவர் மரணம் அடைந்து விட்டார் . அவரிடம் கேள்வி கணக்கு கேட்கப்பட்டது ."ஓ மனிதனே! ஒரு நல்ல காரியமுமா செய்ய வில்லை ?" அதற்கு அவர் "ஆம் , இருந்த போதிலும் நான் எல்லா மக்களுக்கும் கடன் கொடுப்பேன் . அது மட்டுமல்லாமல் , என்னுடைய மக்களுக்கும் சொல்வேன் .கடன் கொடுத்தவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களை , எதிர் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள், அல்லது அந்த கடனை வேண்டாம் என்று விட்டு விடுங்கள் " என்று கூறுவேன் .
இப்பதிலைக் கேட்ட அல்லாஹ் "அவ்வாறு செய்வதற்கு உன்னை விட நானே அதிகம் தகுதி பெற்றவன்" என்று கூறிவிட்டு அம்மனிதரை மன்னித்து விடுவான் . மேலும் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
"ஒரு மனிதர் கால நிர்ணயம் செய்து தீனார் ஒன்றை கடனாக கொடுத்து விட்டால் அந்த காலம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் தர்மம் செய்த நன்மை உண்டு. காலம் கடந்தும் கடனாளி அதை செலுத்தவில்லை. அவரும் அவரை அவசரப்படுத்தாமல் எதிர்பார்த்து இருக்கும் ஒவ்வொரு நாளும் அக்கடன் அனைத்தையும் தர்மம் செய்த நன்மையைப் பெற்றுவிடுகிறார் ".

நூல்: முஸ்லிம்)

இது மிகப் பெரிய பாக்கியம் . தர்மம் செய்த நன்மையைப் பெற்று விடுகிறார் என்பது "அல்ஹம்துலில்லாஹ் " . அதுபோல நாம் அந்த நன்மையை அடைய வேண்டும் , பிறருக்கு கடன் கொடுத்து நிறைய அவகாசம் கொடுத்து . தர்மம் செய்த பட்டியில் ஆகி விடுவோம் .

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!