செவ்வாய், பிப்ரவரி 04, 2014

மறுமையில் மனிதனிடம் இறைவன் வினவுவது என்ன ?

மறுமையில் மனிதனிடம் இறைவன் வினவுவது என்ன ?


கியமாத் நாளன்று கீழ்க்கண்டவாறு மனிதனிடம் இறைவன் கேட்பான் என்று பெருமானார்  (ஸல் ) அவர்கள் நவின்றுள்ளார்கள் :"ஆதமுடைய மகனே !  நான் நோயுற்றிருந்தேன்
. ஆனால் நோய் பற்றி வினவ நீ வரவில்லை!" என்பான் இறைவன் . அடியான் வியப்புடன் , "இறைவனே ! இப்படி எவ்வாறு நடைபெறக் கூடும் ? நீயோ சர்வ லோகங்களுக்கும் இரட்சகன்  எனக் கூறுவான். உடனே இறைவன் "உன்னுடைய அண்டைவீட்டிலுல்ல என்னுடைய அடியான் நோயுற்றிருந்தபோது  , நீ நோய் பற்றி விசாரிக்க வரவில்லை . நோயைக் குறித்து வினவுவதற்கு அவனிடம் நீ சென்றிருந்தால்  அவனிடம் நீ என்னைக் கண்டிருப்பாய் " என்று இறைவன் கூறுவான். இதைப் போன்று மேலும் , " ஆதமுடைய மகனே ! உன்னிடம்  நான் உணவு கேட்டேன் . ஆனால் எனக்கு நீ உணவு அளிக்கவில்லை " என்று கூறுவான்  அச்சமயம் இது எப்படி நிகழ முடியும் என்று வியப்புடன் அடியான் வினவுவான்  . அதற்கு  " என்னுடைய இன்ன அடியான் பசியால் உன்னிடம் வந்து உணவு கேட்டது  பற்றி உனக்கு   நினைவு இல்லையா ?" என்று இறைவன் கூறுவான்  . " பின்னர் " ஆதமுடைய மகனே ! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேனே ? ஆனால் எனக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை " என்று இறைவன் கூறுவான் . அப்பொழுது அவன், " இறைவனே!  உனக்கு தாகம் ஏது  ? நீயோ சர்வ லோகத்திற்கும் இரட்சகனாயிற்றே  " என்று கூறுவான் . அந்த அடியானிடம் இறைவன் , " என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டபோது நீ கொடுத்திருந்தால் அவனுடன்  என்னையும் கண்டிருப்பாய் !" என்று கூறுவான்.

அல்லாஹ்வை நேசிக்க விருப்பமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களை நேசித்தல் வேண்டும். )

பசி என்று ஒருவர் வந்து கேட்டால்" இப்பதான் அடுப்பில் இருக்கு , நெருப்பிலே இருக்கு என்று சொல்லும் பழக்கத்தை விடவும்.

யாரவது ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் , அவரை கண்டு விசாரிக்க போகும் பழக்கம் நம்மிடத்தில் வர வேண்டும். இதில் நிறைய நன்மைகள் உண்டு.

தண்ணீர் கொடுப்பது மிகப் பெரிய நன்மைகள் உண்டு. தாகம், பசி, இவைகளை நாம் தினதொரும்  உணர்கிறோம் , அதன் கொடுமை என்ன வென்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!