அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

சுத்தமானதை சாப்பிடுவீர் !
அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஹலாலான சம்பாத்தியம் /ஹலாலான உணவுகள்
இந்த விஷயத்தில் சிலர் போடுபோகியாக இருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை!
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹலாலான முறையில் சம்பாத்தியம் செய்வதற்கு தௌபீக் செய்வானாக .ஆமீன்..............

அல்லாஹுதஆலா கூறுகிறான்:

"முஃமின்களே! உங்களுக்கு மத்தியில் உங்களுடைய பொருட்களை (ஒருவருக்கொருவர்  ) தவறான முறையில் நீங்கள் புசிக்காதீர்கள்: உங்களிருந்து ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் வர்த்தகமாக அது இருந்தாலே தவிர : இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ; நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.
அல்குர் ஆன் :

பொய் சத்தியம் செய்தோ , ஏமாற்றியோ , அபகரித்தோ, மோசடி செய்தோ, திருடியோ , அநீதமாகவோ  அல்லது விளையாட்டில் பெட்டு கட்டியோ, சூதாட்டத்தின் மூலம் மற்றவர்களது பொருளை சாப்பிடாதீர்கள் . அதன் விளைவு படுபயங்கரமானது  என அல்லாஹ் கூறுகிறான் .

சஹீஹ் புகாரீயில் ஒரு ஹதீஸ்-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஒருவர் நீண்ட பிரயாணத்தில் இருக்கிறார் . தலை விரிகோலமாக புழுதி படிந்து ஆடைகள் அழுக்கடைந்த நிலையில் கைகளை  வானத்தின்பால் ஏந்தி துஆ செய்கிறார் என்றால் அவரது துஆ அவசியம் ஏற்கப்படும் . ஆனால் அவரது உணவு, பானம் ஹராமாக இருப்பின் பிரயாண நிலையிலும் அவரது துஆ ஏற்க்கபடாது "

ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நான் நபியவர்களிடம் 'யாரசூலல்லாஹ் ! எனக்கு துஆ செய்யுங்கள். நான் எனது துஆ அங்கீகரிக்கப்படுபவனாக ஆக வேண்டும்' . நபியவர்கள் கூறினார்கள்  'உனது சம்பாத்தியத்தை பரிசுத்தமாக வைத்துகொள் . அவசியம் உனது துஆ கபூல் ஆகும்' என்றார்கள்"

ஹஜ்ரத் யூசுப் இப்னு அஸ்பாத் (ரஹ்) கூறுகிறார்கள்: "ஒரு வாலிபன் வணக்க வழிபாட்டில்  ஈடுபட்டிருந்தால் ஷைத்தான் தன் பட்டாளத்திடம் சொல்வானாம். பாருங்கள் அவன் உண்ணும் உணவு ஹராமாக உள்ளதா ? அப்படி ஹராமாக இருப்பின் அவனைப் பற்றி கவலை வேண்டாம் . உணவு ஹராமாக இருக்க என்ன வணக்கம் செய்தாலும் அது வீண்தான் " என்பானாம் .

ஹஜ்ரத் இப்னுல் முபாரக் (ரஹ் ) கூறுகிறார்கள்: "சந்தேகத்திற்குரிய ஒரு திர்ஹத்தை ஒருவர் திருப்பிக் கொடுப்பது ஒரு லட்சம் திர்ஹங்களை தர்மம் செய்வதை விட எனக்கு விருப்பமானதாக உள்ளது ".

நபியவர்கள் கூறினார்கள் : "யார் ஹராமான பொருள் கொண்டு ஹஜ்செய்வாரோ அவர் இறைவா நான் ஆஜராகி விட்டேன் எனக் கூறினால் மலக்குகள் சொல்வார்களாம்  : நீ ஆஜராகவில்லை உனது ஹஜ் ஏற்புடையதுமில்லை ".

ஹஜ்ரத் வஹ்இப்னுல்வர்த் (ரஹ்) கூறுகிறார்கள்: "உனது வயிற்றுக்கு போகும் உணவு ஹலாலா ? ஹராமா ? என்பதின் பால் நீ கவனம் செலுத்தாத வரை இரவு முழுக்க விழித்து வணங்கினாலும் பிரயோஜனம் கிடையாது".

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ஹலாலைப் பேணி, ஹராமை விட்டும் தவிர்ந்து  வாழும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக!

அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!