அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

தர்மத்தால் சொர்க்கத்தை வாங்குங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]

மனிதனின்  குற்றங்கள் பெரும்பாலானவை  அவனது  நாவிலிருந்து தான் பிறக்கின்றான்.
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லாத பொழுது உன் கஷ்ட்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் ?

கோபத்திற்கு சிறந்த மருந்து நிதானம் [பொறுமை]

அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ஒரு சமயம் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டு இருந்தார்கள் . ''... தர்மம் செய்து கொண்டே இருங்கள் . உங்களில் பெண்கள் தான் அதிகமாக நரகின் எரி  கொள்ளிகளாக  இருக்கின்றீர்கள் ...'' என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சொன்னபோது பெண்கள் கூட்டத்திலிருந்து ஒரு நடுத்தரமான அந்தஸ்த்து கொண்ட ஒரு பெண்மணி  திடீரென எழுந்து நின்றார் . அப்பெண்ணின் கன்னங்கள் கருத்துப் போயிருந்தன .

''அல்லாஹ்வின் தூதரே! பெண்கள்தான் அதிகமாக நரகின் எரிகொள்ளிகளாக  இருக்கின்றார்கள் என்றீர்களே  ... நபியே! பெண்கள் ஏன் கொள்ளிகளாக இருக்கின்றார்கள் ?'' என்று துணிவுடன் கேட்டார் .

அதற்கு நபி [ஸல்] அவர்கள் ''பெண்களாகிய நீங்கள் எதையும் அதிகம் குறை கூறுபவர்களாக இருக்கின்றீர்கள் . உங்கள் கணவர்களோடு செய்நன்றி மறந்தவர்களாகவும் இருக்கின்றீர்கள் '' என்றார்கள் .

ஆதாரம் ..புஹாரி /முஸ்லிம் /நசயீ

தர்மம் தலைகாக்கும்

''தர்மம் செய்து கொண்டே இருங்கள் ' என்று நபிகள் நாயகம் [ஸல்] தனது உரையில் குறிப்பிட்டிருப்பது  நன்மைகளை அதிகமாக ஈட்டித்தருவது தர்மம் , நரகிலிருந்து காப்பது தர்மம்  என்பதை உனர்த்துவதர்க்காக தான் . தர்மம் தலைகாக்கும் என்பது உண்மை . தர்மம் இறைவிதி என்னும் 'களா ' கதிர் களையும் மாற்றி அமைத்துவிடும்  . தர்மம் நமக்கு ஏற்படும் துன்பங்களையும் , துயரங்களையும் நீக்கி விடும். தர்மம் நம்முடைய மிடுமைகள் தரிதிரங்களையும் போக்கி விடும். தர்மம் நமக்கு ஏற்படும் ஆபத்துகளை நீக்கி வாழவைக்கும் .

அன்னை கதிஜா நாயகி தர்மம் !

அன்னை கதிஜா [ரலி] அவர்கள் பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த செல்வச் சீமாட்டி ஆவார்கள் . ஏராளமான வணிகர்களுக்கு முதலீட்டுக்கும் பணத்தை கடன் கொடுத்து உதவும் உபகாரியாகவும் இருந்தார்கள். பங்குத் தொகைக்கு வியாபாரிகளிடம் பொருள் கொடுத்து  தொழில் நடத்தும் அதிபராகவும் இருந்தார்கள்.

தான் ஈட்டிச் சம்பாதித்த கோடான கோடிச் செல்வங்களை தனது கணவராகிய நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் காலடியில் கொட்டி அவர்களின் இஷ்ட்டப்படி செலவழித்து  தான தர்மங்கள் செய்யவும் அனுமதி கொடுத்தார்கள் .அன்னை கதிஜா [ரலி] பொருட்செல்வத்தைக் கொண்டு நபி [ஸல்] அவர்கள் சமுதாயத்தில் நலிந்தவர்களை உயர்வுக்குக் கொண்டு வந்தார்கள்.

தாய் தந்தையை இழந்த அனாதைகளை ஆதரித்தார்கள். விதவைகளுக்கு மாப்பிளை பேசி மறுமணம் செய்து வைத்தார்கள். ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கி வறுமை நீக்கினார்கள் .
அன்னை கதிஜா [ரலி] அவர்களைப் பற்றி ,அவர்கள் செய்த தர்மங்களைப் பற்றி இன்னும் நிறைய சொல்லாம் .............

அன்னை கதிஜா நாயகியைப் போலவே அன்னை ஆயிஷா [ரலி] அவர்களும் மிகுந்த கொடைத் தன்மை உள்ளவர்கள் . தனக்கு அன்பளிப்பாக வரும் அனைத்துப் பொருட்களையும் தர்மம் செய்து  முடிக்காமல் உறங்கச் செல்லமாட்டார்கள் . அனைத்தையும் தர்மம் செய்து விட்டுத் தான் தூங்கச் செல்வார்கள் .

ஒரு முறை அன்னை ஆயிஷா [ரலி] அவர்களுக்கு ஐம்பதாயிரம்  பணங்கள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டன . அப்போது அன்னை அவர்கள் அணிந்திருந்த சட்டையில் பல ஒட்டுக்கள் போட்டு தைக்கப்பட்டு இருந்தன . அந்தக் காசுகளை வைத்து ஒரு சட்டை கூடதனக்கு  வாங்கிக் கொள்ளாமல் அனைத்தையும் வாரி வாரி தர்மம் கொடுத்து விட்டார்கள் .

அன்னை ஆயிஷா [ரலி] அவர்களைப் பற்றி , அவர்கள் செய்த தர்மங்களைப் பற்றி நிறைய  செய்திகள் உள்ளன . நம்முடைய பெண்களும் இதுபோல அதிகம் அதிகம் தர்மம் செய்ய அல்லாஹ்  தௌபீக் செய்வானாக ..!!!

முன்பு வாழ்ந்த பெரியவர்கள் தனக்கு இல்லாத நிலையிலும் யாசகம் கேட்டு வருபவர்களின் நிலைமைகளை உணர்ந்து தான தர்மங்கள் அதிகம் செய்து வந்தார்கள். அதனால் இறைவனின் அன்புக்கும் , பெருமைக்கும் மிகவும் அருகதை உள்ளவர்களாக விளங்கினார்கள் . இன்று பல குடும்பங்களில் காசு பணங்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே இல்லாதவர்கள் போல் பஞ்சப்பாட்டு பாடி தனைத்  தானே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இரும்பு மனம் கொண்டு வாழ்ந்தால் எப்படி சுவனம்  செல்ல முடியும் ?

கணவர்கள் சம்பாதித்துத் தரும் காசு பணங்களில் ஏராளமான அனாச்சாரச் செலவுகளை பெண்கள்  தாராளமாகச் செய்கிறார்கள். ஆடம்பரப் பொருட்களை அதிகம் வாங்கி அடுக்கி வைத்துக்  கொள்கிறார்கள் . தனக்குத் தேவை இல்லாத பொருளாக இருந்தாலும் அழகிய பொருட்களை வாங்கி அலங்கார அலமாரிகளில் அடுக்கி வைத்து அழகு பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் . ஏழை எளியவர்களை கண்டால் விரட்டி அடிக்கிறார்கள் . இவர்கள் எப்படி சுவர்க்கம் செல்ல முயும் ?

முன்பெல்லாம் ஆண்களை விடப் பெண்களே அதிகம் இளகிய மனம் உள்ளவர்களாகவும் , வள்ளல் தன்மை உள்ளவர்களாகவும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.. இப்போது காலம்மாறிப் போயிவிட்டது . தான தர்மம் செய்யும் கணவர்களைக் கூட கண்டித்து அடக்கிவைத்து விடுகிறார்கள் மனைவிமார்கள் .மனைவிக்கு தெரியாமல் தான் கணவர்கள் தர்மம் செய்யும் நிலை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது . இப்படித் தலை கீழான மாற்றம் பல குடும்பங்களில் ஏற்பட்டுவிட்டது. இது பெண்களின் அடுக்குமுறைகளால்  ஏற்பட்டது என்பதே உண்மை .

இறைக்கிற ஊற்றே சுரக்கும் என்பார்கள். இதைப் புரிந்த பெண்கள் பல குடும்பங்களில் கணவரோடு ஒன்றிணைந்து பல தர்ம காரியங்ககளைச்  செய்கிறார்கள் . ஊரில் பெரும் புகழும் பெற்ற குடும்பமாகத் திகழ்கிறார்கள் . சொர்க்கவாசிகளாக இருக்கிறார்கள்.
இதற்கு மாறாக இறைவனின் அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு கணவர் மீது  நன்றி கெட்ட  தனமாக நடந்து தங்களது கரங்களையும் சுருக்கிக் கொண்டு கணவரது கைகளையும் கட்டிப் போட்டு வைத்தால் பெண்கள் கூட்டமாகிய நாம் சுவர்க்கத்தில் எங்கே  அதிகம் இருக்க போகிறோம் ?
அல்லாஹ் மிக அறிந்தவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!