புதன், ஏப்ரல் 30, 2014

ஓய்வு பெற்றவராவார் அல்லது ஓய்வு அளித்தவராவார்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் அனைவரும் அல்லாஹ்வின் கிருபையால் ,கருணையால் கலிமாவுடன் மரணிக்க வேண்டும். நம் மண்ணறை  சுவனத்தின் பூங்காவாக இருக்க வேண்டும். நல்லடியார்களின் கூட்டத்தில் ஆக்கி சேர்க்க வேண்டும். நல்லடியார்களின் கூட்டத்தில் மறுமையில் எழுப்ப வேண்டும். அண்ணல் நபி [ஸல்] அவர்களுடன் சுவனத்தில் இருக்க நற்கிருபைச் செய்ய வேண்டும். ஆமீன்.........


அபூகத்தாதா பின் ரிப்ஈ அல்  அன்சாரி [ரலி] அவர்கள் கூறியதாவது..

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் [ஜனாஸா ] கொண்டுசெல்லப்பட்டது . அப்போது அவர்கள் ''[இவர்] ஓய்வு பெற்றவராவார் ,, அல்லது [பிறருக்கு] ஓய்வு அளித்தவராவார் '' என்று சொன்னார்கள் . மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! ஓய்வு பெற்றவர் ,, ஓய்வு அளித்தவர்  என்றால் என்ன? என்று கேட்டார்கள்.

நபி [ஸல்] அவர்கள்  ''இறைநம்பிக்கை கொண்ட அடியார் [இறக்கும்போது] இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் [இறக்கும்போது] அவனி[ன்  தொல்லைகளி ] டமிருந்து மற்ற அடியார்கள் [நாடு]நகரங்கள்,, மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு [பெற்று நிம்மதி] பெறுகின்றன'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் [மறுமையில்] அவர் [தங்கப்போகும்] இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். [அது] ஒன்று நரகமாயிருக்கும்,, அல்லது சொர்க்கமாயிருக்கும் . அப்போது ''இதுதான் உன் இருப்பிடம் . இறுதியில் இங்குதான் நீ அனுப்பப்படுவாய்'' என்று கூறப்படும் .
இதை இப்னு உமர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் ..புகாரீ]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில் , அவர்கள் தாம் செய்த [நன்மை, தீமை ஆகிய] வற்றின்பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.
இதை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்..புகாரீ]

அபூசயீத் அல்குத்ரீ [ரலி] அவர்கள் கூறியதாவது..

நபி [ஸல்] அவர்கள் , ''மறுமை நாளில் இந்தப் பூமி  [அடுப்பில் இருக்கும் ] ஒரு ரொட்டியைப் போன்று  [சமதளமாக] மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர்  தமது ரொட்டியை [அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து]ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த [இறை ]வன்  பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான்.  [அதையே ] சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான் என்று  கூறினார்கள்.

அப்போது யூதர்களில் ஒருவர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து, ''அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு வளம் வழங்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? என்று கேட்டார் . நபி [ஸல்] அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி [ஸல்] அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்தப் பூமி  ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும் '' என்று கூறினார்.

அப்போது நபி [ஸல்] அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு  ''உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத்  தெரிவிக்கட்டுமா? '' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு, அவர்களின் குழம்பு  'பாலாம்' மற்றும்  'நூன்' என்றார் , மக்கள்  'இது என்ன ? என்று கேட்டார்கள். அந்த யூதர் , ''[அவை] காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டை [மட்டுமே சொர்க்கவாசிகளில்] எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள் என்று கூறினார்.
ஆதாரம்..புகாரீ]

உலக அழிவின்போது இந்தப் பூமி எவ்வாறு மாறும் என்பதை நபி [ஸல்] அவர்கள் இங்கு  உவமைப்படுத்திக் கூறியுள்ளார்கள்.  மக்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரணைக்காக நிறுத்தப்படும் இடம்  [மஹ்ஷர்]  ரொட்டியைப் போன்று சமதளமாகவும் வெண்தரையாகவும் இருக்கும். நல்லவர்களுக்கு விசாரணை முடியும்வரை விருந்தளிக்கப்படுவதர்காக உணவு  தயார் நிலையில் இருக்கும். பயணிகளின் ஆயத்த உணவுகளைப் போன்று அது தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
[ஃபத்ஹுல் பாரீ ]

இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் கூறியதாவது..

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் சொற்பொழிவு மேடையின் [மிம்பர்] மீது இருந்தபடி, ''நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக , நிர்வாணமானவர்களாக  , விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் '' என்று உரையில் குறிப்பிட்டதை நான் கேட்டேன் .
ஆதாரம்..புகாரீ ]

அல்லாஹ்  மிக அறிந்தவன்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!