ஞாயிறு, அக்டோபர் 19, 2014

பாவ மீட்புப் பெற எளிதான வழி

அல்லாஹ்வின் திருபெயரால் ............

பாவங்கள் செய்யாத மனிதர்கள் இல்லை , பாவம் செய்து பிறகு மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் ஒரு சிறந்த மனிதர் ஆவார். பாவங்கள் செய்துக் கொண்டே கடைசியாக பாவமன்னிப்பு கோரலாம் என்று எண்ணிக் கொண்டு அலச்சியமாக இருக்கக் கூடாது. மரணம் எப்பொழுதும் வரலாம் . எப்பொழுதும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் ஒரு சிறந்த செயல் ஆகும். முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்ட அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களே ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு அதிகமாக பாவமன்னிப்பு கோரினார்கள் என்பது ஒரு ஹதீஸின் கருத்து.


நிச்சயமாக அல்லாஹ்  இரவில் தன் கைகளை விரிக்கிறான். பகலில் பாவம் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கேட்டு மீளுவதற்காக, இன்னும் பகலில் கைகளை விரிக்கிறான் , இரவில் பாவம் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கேட்டு மீளுவதற்காக. இதே நிலை சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் [உலக அழிவு ] நாள் வரை நீடிக்கிறது.

பாவம் என்பது என்ன ? எண்ணங்களாலும், செயல்களாலும் மார்க்கத்தால் தடை செய்யப்பட்ட , விரும்பத்தகாத செயல்களைச் செய்வதாகும். கொலை ம் கொள்ளை , சூது, வாது , சதி, சூழ்ச்சி, வாக்கு மாறுதல் , வட்டி வாங்குதல், குழப்பம் விளைவித்தல், வன்முறையில் ஈடுபடுதல் , பிறர் மனம் புண்பட ஏசுதல் , பேசுதல் , சபித்தல் , பரிகசித்தல், மது அருந்துதல் , ஏமாற்றுதல் , இலஞ்சம் வாங்குதல், பாலியல் குற்றங்கள் போன்றவை என் நீளமாகப் பட்டியலிடலாம் . இவை ஷைத்தானின் சதிராட்டங்கள் . பாவங்களின் பெருக்கம் மனிதப் பண்பாட்டுச் சிதைவுக்கும் அழிவுக்கும் அமைந்து ஆப்புகள் எனில் மிகையன்று.

பாவங்கள் வேரறுக்கப்பட வேண்டும் . பிடுங்கி எறியப்பட வேண்டும். இப்புற்று நோய் பரவாமல் தடுக்கப்பட வேண்டும். சத்தியங்கள் சாத்தியமாக வேண்டுமானால், இத்தீமைகள் தீய நரகில் பொசுக்கப்பட வேண்டும். இதற்க்கு என்ன வழி ?

தனிமையிலேதான் செய்த தவறுகளை உணர்ந்து உருகி இறைவனிடம் மனம் விட்டு மன்றாடி மன்னிப்புக் கோரினால் பாவங்கள் குறையும். மனிதன் திருந்தி தூய்மை பெறுவான். மிக்க மேலானவனிடம் சரணடைந்து விட்டதால் மீண்டும் அப்பாவத்தை செய்யத் துணியான் .

பாவமன்னிப்பு வேண்டுபவரை அணைத்து ஆதரிக்கவே அல்லாஹ் இரவிலும் , பகலிலும் தன் கருணைக் கரங்களை விரித்துக் காத்திருக்கிறான் என்ற அண்ணலாரின் இனிய செய்தியே பாவிகளின் இதயங்களுக்குத் தெம்பளிக்கும். திருந்தி வாழ வழி வகுக்கும். இவ்விறையருள் உலகின் அழிவுக்காலம் வரை நீடித்து மனித சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பதும் கருணை நபி [ஸல்] அவர்களின் கூற்றாகும். பாவமன்னிப்புத் தேடுவோம்  , பரிசுத்தமாகுவோம்!
நன்றி  நர்கிஸ்
சத்திய பாதை இஸ்லாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!