அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், அக்டோபர் 20, 2014

இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று தண்ணீர்

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

தண்ணீரின் தேவை

உடலின் ஒவ்வொரு செல்லும் ஆற்றுகின்ற ஒப்பற்ற பணிகளுக்கு இன்றியமையாத பொருளாகத் தண்ணீர் திகழ்வதோடு , உடலியக்கம் தோற்றுவிக்கும் பல நச்சுப் பொருட்கலிருந்து உடலைப் பாதுகாக்கும் கேடயமாகவும் விளங்குகிறது.


உடல் இயக்கம் , உணர்வு ஜீரணம் தோற்றுவிக்கும் பல நச்சுப் பொருட்ள்கள் யூரியா அமிலம் கழிவுப் பொருட்களாக, சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்றன . யூரியா , யூரிக் அமிலம் போன்ற இக்கழிவுப் பொருட்கள் நீக்கப்படுவதற்கு முன்பு , நீரில் கரைக்கப்படுகின்றன. இதனால் சிறுநீரகங்கள் பழுதடையாமல் பாதுகாக்கப்பட்டு எளிதில் இவைகள் நீக்கப்படுகின்றன.

உட்கொள்ளும் உணவு ஜீரணிக்கப்படுவதற்கும் , நொதிகள், இரசாயனப் பொருட்கள் முதலியன இயங்குவதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. நமது உடலில் ஓடுகின்ற இரத்தத்தின் அளவு 5 லீட்டர் . இதில் 90 சதவிகிதம் தண்ணீர் . இத்தண்ணீர் மூலமே குளுகோஸ் , இரும்புச் சத்து, பிராணவாயு போன்ற அத்யாவசியப் பொருட்கள் , உடலின் பல பாகங்களைச் சென்றடைகின்றன.

வியர்வை மூலமே உடலின் வெப்பநிலை சீர்பெருகிறது. வியர்வை அதிக வெப்பத்தை நீக்கி , உடலைக் குளுமைப்படுத்துகிறது .

உடலின் மூட்டுக்கள் ஒழுங்காக இயங்கிட,  நாம் உட்கொள்ளும் தண்ணீரே உதவுகிறது. மூட்டுவலி உள்ளவர்களும் , தசை எலும்பு கோளாறு உள்ளவர்களும் அதிக அளவு நீர் அருந்துதல் வேண்டும். எவ்விதம், இயந்திரங்கள் சீராக இயங்க எண்ணெய் ஊற்றப்படுகிரதொ , அதுபோல மூட்டுக்கள் இயங்க தண்ணீர் தேவைப்படுகிறது.

சுவாசிப்பதற்கு தண்ணீர் உதவுகிறது . பிராண வாயுவை ஈர்த்துக் கொள்ளவும் , கரியமில வாயுவை வெளியேற்றவும் , நுரையீரல்களுக்கு ஈரப்பசை தேவை. வெளியேறும் சுவாசகாற்றின் மூலம் 350 முதல் 500 மில்லி அளவு திரவத்தை உடல் தினமும் இழக்கிறது . வியர்வை மூலம் 500 மில்லி நீர் வெளியேறுகிறது.

தேவையான அளவு நீர் உட்கொள்ளப்படவில்லை என்றால் , உடலியக்கம் பாதிக்கப்படும் . திரவ சமநிலை சிதைந்து விடும். எனவே உடல் அதிக உழைப்பில் ஈடுபடும் பொழுதும் உடற்பயிற்சி செய்யும் பொழுதும் திரவ சமநிலையைக் காத்திட , அதிக அளவு  நீர் உட்கொள்ள பட வேண்டும். உடல் அதிக  பருமன் உள்ளவர்கள் , உடல் இளைக்க விரும்பின் , அதிக நீரை உட்கொள்ள வேண்டும். இதுப்பற்றி டாக்டர் ஹோவார்ட் ஃ பிளாக்ஸ்  அவர்கள் கருத்து குறிப்பிடத்தக்கது.

தேவையான  அளவு தண்ணீர் அருந்தாவிடில் , உடலில் கொழுப்புத் தன்மை அதிகரித்து, உடல் கொழுத்துப் பருத்து விடுகிறது. தசைகளின் அளவு, விறைப்பு சக்தி, செயல் திறன் முதலியான குறைந்து விடுகின்றன. கழிவுப் பொருட்களின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. தசைகள் , மூட்டுக்கள் ஆகியவற்றில் குறிப்பீட்ட உடற்பயிச்சிக்குப் பின்  வலி அதிகரிக்கின்றது. அதிக நீர் அருந்தாவிடில், கழிவு வெளியேற்றம் தடைப்படுகிறது  . ஆதலின், கழிவு நீர் அதிகம் வெளியேற, அதிக நீர் வெளியேற்றப்பட வேண்டும்.

பருகும் நீர்

தூய்மையான  நீரையே எப்போளும்தும் அருந்த வேண்டும். கொதிக்க வைத்து, ஆரிய  நீர் சாலச் சிறந்தது. ஏனெனில் , தூய்மையற்ற நீரைப் பருகுவதன் மூலம், வயிற்றுபோக்கு , மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தோன்ற அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன  . ஆண்டு தோறும் இதனால் பல லட்ச்ச்கனகானோர்  பலியாடுவதை மருத்துவ ஏடுகள் குறிப்பிடுகின்றன.
அதிகக் குளிர்ச்சியாகவோ  அல்லது அதிக சூடாகவோ இல்லாத மிதமான தண்ணீரையோ அல்லது பிரபானங்களையோ  எப்பொழுதும் பருகுமாறு நபிமொழி ஒன்று  நயம்பட உரைக்கிறது.

அழகிய வழி

நபித் தோழர் ஒருவர் தொழுகைக்காக ஒளூ செய்யும்போது  , அதிக நீரைப் பயன்படுத்தி விரயமாக்குவதைக்  கண்ணுற்ற அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சிக்கனமாக நீரை  பயன்படுத்துமாறு, அத்தோழ ருக்கு அறிவுரை கூறினார்கள். அதற்க்கு  அத்தோழர் , தண்ணீர் தான் நிறைய இருக்கிறதே , என்று கூற '' பொங்கி வழியும் நதிக்கரையிருந்தாலும் கூட தண்ணீரைச்  சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், விரயம் செய்வதைத் தவிர்க்குமாறும்'' கூறிய அண்ணலாரின் வார்த்தைகள், காலத்தைப் கடந்து கருவூலமாக, நாயக்கத்தக்க நடுநிலையே, நலம் பெருகும் நல்வழி என்ற இஸ்லாமியக் கருத்தை வலியுறுத்துவதாகக் காண்கிறோம்.

அதிகமாகவும் , வீணாகவும் நீரைப் பயன்படுத்தி , நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி  வந்து விடுமோ என்று அஞ்சும் மானிடர்களுக்கு நீர் சுழற்சியின் காரணமாக பயன்படுத்தப்பட்ட நீர் பலவழிகளில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும்  பயன்படுத்த நமக்குக் கிடைத்துக் கொண்டு தானிக்கிறது என்ற விஞ்சஜானக்  கருத்து, அல்லாஹ்வின் கருணை என்ற மழை எப்பொழுதும் பைய்து கொண்டே  தானிக்கிறது என்பதைத்தான் உணர்த்துக்கிறது.
என்றாலும், நலம் தரும் தண்ணீரை விரயம் செய்யாது சீராகவும் அளவோடு பயன்ப்படுத்தி  , வாழ்வில் வளம் பெருக , அருள் புரிவானாக!

தண்ணீர் தானே என்று  சாதரணமாக எண்ணி விடாதீர்கள். தண்ணீர் இல்லாத ஊர்களில் தண்ணீரைப் பற்றி கேளுங்கள்! அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்க் கொடைதான்  என்று பதில் வரும் .
நன்றி நர்கிஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!