அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, ஜனவரி 02, 2015

இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனையைப் போக்கும் மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறைகள்

இன்று எமது இளைஞர்கள் மத்தியில் "மேற்கினது வாழ்க்கை" முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு வகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது "வாழ்வினது மொடலாக அவர்கள் நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும்" அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குப்பார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “பெஷன் “ என்ற பெயரில் இவர்கள் பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் உள்ள தெளிவின்மையும் இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவர படிக்காமல் இருப்Pதுமேயாகும்.


முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு "மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் மார்க்கமாகவும்" இவர்கள் நோக்குவதால் இவர்கள் தொழுதால் போதும் அல்லது எப்படி வேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும்.

உண்மையில் இஸ்லாம் "அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பை ஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல்" அது "பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல், பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத் தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றை ஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக" ஒரு முழுமையான இஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம் பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத்தவறுவதாலேயே மதஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவ தாராண்மைவாதச் சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு அவன் “நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப் பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான்.

இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன்காணும் தாவா முறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத் தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் மேற்கினது கலாச்சார படையெடுப்பும், வாழ்கை முறையையும், சிந்தனைப்படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன் உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology) வாழ்க்கை முறையாக அவன் விளங்க வேண்டும்.

அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின் அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது 

1.இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும்,
2.முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும்,
3. மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பான்.

அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான்.

அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது வாழ்க்கை முறைபற்றிய அடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத் திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ் நிறுவப்பட்டு, முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும், இஸ்லாமிய வெளிநாட்டு கொள்கை மூலமாக தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு உலகில் இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும் ஒரு தலைமையாக இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய” இளைஞனாக அவன் மாறுவான்.

இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து பாதுகாத்து மறுமையில் ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் பலம் சேர்க்கும்.

- See more at: http://islamicuprising.blogspot.
சிந்திக்க சில வரிகள் 
சத்திய பாதை இஸ்லாம்  
நல்லதை ஏவி தீயதைத் தடுக்க வேண்டும் ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும் , பெண்களும்.  facebook  வழியாக எத்தனை பேர்கள் இந்த புதிய ஆண்டைக் கொண்டாட கூடாது என்றும், அது மேற்கத்திய கலாச்சாரம்  அல்லது மாற்றுமத கலாச்சாரம் என்றும் . மாற்றுமத கலாச்சாரத்தை யார் பின்பற்றுக் கிறார்களோ  அவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய பொன்மொழிகளையும்  நினைவுக் கூறினார்கள். இருப்பினும் சில முஸ்லிம் மக்கள்கள்  அவைகளை காதில் வாங்காமல் , வழக்கம்போல் அவர்கள் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். சில முஸ்லிம் நாடுகள் அதை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள் . அதில் ஒன்றுதான் துபாய்  ஆடம்பரமும் , வீண்விரயமும் அதிகமாக பணத்தை செலவுச் செய்து உலகத்துக்கு  அதிசியமாக காண்பித்தார்கள் . இவர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.  அவர்களுக்கு முக்கியத்துவம் மற்றவர்களை அல்லது மற்ற நாடுகளை ஈர்க்க வேண்டும்  , கவர வேண்டும். அந்த நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகமாக  வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தெரியவில்லை . கண்டதுக் காட்சி கொண்டதுக் கோலம் இவர்களின் நிலைப்பாடு. விசா என்ற பெயரிலே  சுரண்டலும் , கொள்ளையடிப்பதும்  மாற்றுமத கலாச்சாரத்தில் வேருண்டு இருக்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்வின் விசாரணையில் தப்பிக்க முடியாது. 

இளைஞர்களை வழிநடத்தக் கூடிய இயக்கங்களும்  வழிக் கெட்டுத்தான் போகிறார்கள் . அவர்களின் சுயநலத்திற்காக  அவர்களை பயன்  படுத்துகிறார்கள்   என்று தான் சொல்ல வேண்டும். சில நல்ல நோக்கத்துடன் செயல்ப் படக் கூடிய ஜமாத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. ஒருக்காலத்தில் கருத்து வேறுப்பாடுகள் இருந்தன அதனால் பல பிரிவுகளாக பிரிந்தன. இன்று வேறு திசையை நோக்கி போகிறது.  ஒற்றுமை ஒற்றுமை என்று பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்  , அதற்க்கு யாரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை.  இரு கைகள் தட்டினால்தான் ஓசை  ! எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் ஒற்றுமை! ஒவ்வொரு இயக்கமும்  , ஜமாத்தும் வெவ்வேறு வழிகளில் செயல்ப் படுகிறார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல் படுவோம் என்ற எண்ணம் இல்லை  .  இன்ஷாஅல்லாஹ்  நாம் அனைவரும் ஒன்றுப் பட அல்லாஹ்  உதவி செய்வானாக .ஆமீன் .......

இன்றைய  முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனையைப் போக்கும் மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறைகள்    /தலைப்பு 
keywords -சிந்தனை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!