அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
islamiyan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
islamiyan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 10, 2015

இஸ்லாமிய குண நலன்கள்

இஸ்லாமிய குண நலன்கள்

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க
அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம்
தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன்.
உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத்
தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று
கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்?
எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய
தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய
உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என
தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள்
அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

ஞாயிறு, மார்ச் 08, 2015

அல்லாஹ்வின் அழைப்பு


அல்லாஹ்வின்  திருபெயரால் .........

மறுமையில் முதல் முதலாக விசாரிக்கப்படும் தொழுகையைப் பற்றி ,அது சீராக இருந்தால் மற்ற காரியங்கள் சீராகிவிடும் . இல்லையெனில் ...???

பொதுவாக முஸ்லிம்களில் பலர் மனிதர்களைக் கண்டு அஞ்சும் அளவிற்கு, அல்லாஹ்விற்கு அஞ்சுவதில்லை. எடுத்துக்காட்டாக சொல்லப் போனால், அரபு நாடுகளில் சென்று வேலை செய்யும் முஸ்லிம்கள் அங்கு ஐவேளைத் தொழுகையையும் தவறாமல் தொழுகின்றனர். ஆனால் தாய் நாட்டிற்கு வந்து விட்டாலோ அவர்களில் 99 சதவிகிதம் பேர்களுக்குப் பள்ளி வாசல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரிவதில்லை. இதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், அரபுநாடுகளில் வேலை செய்வோர், கண்டிப்பாக, அதாவது முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளையும் விடாது தொழ வேண்டும். இல்லையேல் , அங்கு காலந்தள்ள முடியாது. ஆயிரக்கணக்காக பணம் சம்பாதிக்க முடியாது.எனவே அரபு ஷேக்குக்கு அஞ்சி அவர்கள் அங்கு தொழுதார்கள் . தாய் நாட்டிற்கு வந்து விட்டால் அவர்கள் யாருக்கு அஞ்ச வேண்டும்? அல்லாஹ்வுக்கா ? அந்த அச்சம் வந்துவிட்டால் தான் எல்லாம் வந்து விடுமே.

சனி, மார்ச் 07, 2015

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே !

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்
எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப்
படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின்
வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து
இக்கட்டுரையில் காண்போம்.
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து
அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)
 மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன்
பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்!…
(அல்குர்ஆன்11 :3)
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக
(தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…. ( அல்குர்ஆன்
66:8)

வெள்ளி, மார்ச் 06, 2015

கண்ணாடிகள் கவனம்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....

   அல்லாஹ் மிகவும் கிருபையாளனாக இருக்கிறான். பிரார்த்தனை செய்யும் அடியார்களின் வேண்டுதலை , கைகளை , வெறுங்கையாக விடுவதற்கு வெட்கப்படுகிறான் .
நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! குழப்பங்கள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .

ஞாயிறு, மார்ச் 01, 2015

குர்ஆனும் சுன்னாவும்

 இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக
வேகமாகப் பரவி வருகின்றது. உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல்
பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது
வழிகாட்டுதலையும் பின்பற்றவும் வேண்டும்.

புதன், பிப்ரவரி 25, 2015

ஜனாஸா வீட்டில் நடந்தேறும் நூதனங்கள்

ஜனாஸா வீட்டில்  நடந்தேறும் நூதனங்கள் 
இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிகழ்வது நிச்சயம். நாம் பிறக்க
முன்பே எமது இறப்பின் காலமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.ஒருவர்
மரணிக்கும் தருவாயில் இருந்து மையத்தை அடக்கம் செய்த பிறகு வரை எம்
சமுதாயத்தில் மார்க்கத்தில் இல்லாத, மார்க்கத்துக்கு முரணான பல
காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். அவற்றை
ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மாற்றத்தின் நேரம் அதிகாலை !

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை
நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக
அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான
ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப்
பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட
முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த
பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

மரணிக்கும்போதும் மண்ணறையில் நிகழ்பவைகளும்

அல்லாஹ் கூறுகிறான்: – ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே
இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம்
உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்-குர்ஆன் 21:35)

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது.
நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும்
அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே
மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும்
மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக்
கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய
நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

சனி, பிப்ரவரி 21, 2015

பொறாமை தீ(யது) அணைப்போம்….இறைவனை என்றும் நினைப்போம்





அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம்
நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம்.
நிறைவான வாழ்வு.
அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு
என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி
இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள  உயர்வும்
இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது" என்றார்.
பொதுவாக நாம் அனைவரும் என் நண்பரைப் போல் நமக்கும் மற்றவருக்கும் இடையே
வருமானத்தை வைத்தும் செல்வத்தை வைத்தும் நம் வாழ்க்கையையும் நமக்கு
இறைவன் செய்துள்ள நன்மைகளையும் எடை போடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான்
அதிகமாக சம்பாதிப்பவர்களை மற்றும் செல்வந்தர்களைப் பார்த்து
பொறாமைப்படுகிறோம்

புதன், பிப்ரவரி 18, 2015

உண்மையான முஸ்லிம் [சிறுகதை]

உண்மையான முஸ்லிம் [சிறுகதை]

அல்லாஹ்வின் திருபெயரால் ........................

தோளில் மாட்டிய லெதர் பேக் ஒரு சிறிய சூட்கேஸ் சகிதம் கேட்டைத் திறந்துக் கொண்டு நுழைந்தான் யாசர் .
ஏராளமான செடிகளோடு, பறந்து விரிந்த பச்சை புல் தரையாலும் சூழப்பட்டிருந்தது அந்த பங்களா.
யாசர் தயங்கி நடந்தான் . புல் தரையில் பிரம்பு நாற்காலி போட்டு காற்றோட்டமாய் அமர்ந்து அன்றைய காலைப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார் ஷஹாப்புத்தீன் . நிழலாட நிமிர்ந்தார் யாரோ ஓர் இளைஞன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து பத்திரிகையை மடித்து வைத்துவிட்டுத் திரும்பினார்.

திங்கள், பிப்ரவரி 16, 2015

இறையருளைப் பெறும் வழிகள்




அருள் புரியக் கூடியவன் அல்லாஹ். அவனால் மட்டுமே அதைச் சாத்தியப்
படுத்தலாம். அல்லாஹ்வின் அருள் பல்வேறுபட்ட வடிவங்களில் எம்மை
வந்தடைகின்றது. அவற்றில் இலகுவாகப் பெற முடியுமானவற்றைப் பெறுவதற்கான
முயற்சிகளில் மட்டுமே நாம் முனைப்புடன் செயல்படுகிறோம்.
அவற்றில் அல்லாஹ்விடம் வாயினால் கேட்டுப் பெறும் முறையும் ஒன்றாகும்.
அல்லாஹும்மர் ஹம்னா (இறைவா எங்களுக்கு அருள் புரிவாயாக) என்பது அதற்கு
ஓர் உதாரணமாகும். ரமழான் மாத ஆரம்பப் பத்துத் தினங்களிலும் அதை நாம்
பெறுவதற்காக நாவைப் பயன்படுத்துகின்றோம்.

வியாழன், பிப்ரவரி 12, 2015

தொழுகை மார்க்கத்தின் தூணாகும் [தொடர்ச்சி..]

அல்லாஹ்வின் திருபெயரால் ..............

இன்ஷாஅல்லாஹ் நாம் தொழுகையின் சிறப்பைப் பற்றி தொடர்ச்சியாக பார்க்கப் போகிறோம் . நீங்கள் தொழாதவர ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மறுமை நாளில் முதல் கேள்வி '' தொழுகைப் பற்றிதான்''  இன்ஷாஅல்லாஹ்  இந்த கட்டுரையைப் படித்து விட்டு தொழக் கூடியவர்களாக ஆவீர்கள் .

புதன், பிப்ரவரி 11, 2015

தொழுகை மார்க்கத்தின் தூணாகும்

அல்லாஹ்வின் திருபெயரால்.......

அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள் .. நபி [ஸல்] அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.. ''உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஓடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் ஏதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி  என்ன நினைக்கிறீர்கள் ? '' என்று கேட்டார்கள். ''எந்த அழுக்கும் [அவர் மீது] இருக்காது'' என நபித்தோழர்கள் கூறினர் . நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக் கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.''
ஆதாரம்.. புகாரி ]

செவ்வாய், பிப்ரவரி 10, 2015

அழிக்க வேண்டுமா மறுமை எண்ணத்தை ...?

அல்லாஹ்வின் திருபெயரால் ...

சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன் . மதங்கள் கூறும் மறுமைக் கொள்கை மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறுமை எண்ணத்தையே  அழித்துவிட வேண்டும் என்று ஆவேசமாக வாதிட்டார். அதற்கான சில காரணங்களையும் அவர் முன்வைத்தார்.

யாகம் என்ற பெயரில் வேள்வி வளர்த்து, விலை உயர்ந்த பொருள்களைத் தீயில்  போட்டுச் சாம்பலாக்குகிறார்கள் .

திங்கள், பிப்ரவரி 09, 2015

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

அல்லாஹ்வின் திருபெயரால் ......

முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளகூடாது அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரை அல்லாஹ் மனிதர்களின் பால் சாட்டிவிடுகிறான்.  [ஆதாரம்.. திர்மிதி]

ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

நியாயங்களுக்காக அநியாயங்களா ?

அல்லாஹ்வின் திருபெயரால் ........

நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே  என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

'நான் செய்வது தவறாக இருப்பினும், அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதச்சணை  வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்'  .என்கிறார்கள்.

வியாழன், பிப்ரவரி 05, 2015

உஹதுப் போர் படிப்பினைகள்



உஹதுப் போர் படிப்பினைகள்

 لَيْسَ لَكَ مِنَ الأَمْرِشَيْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ
يُعَذِّبَـهُمْ فَإِنَّـهُمْ ظلِمُوْنَ

    '(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை, அவன் அவர்களை
மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம், - நிச்சயமாக
அவர்கள் கொடியோராக இருப்பதன் காரணமாக.' (அல்குர்ஆன் - ஆல இம்ரான் 3: 128)

செவ்வாய், பிப்ரவரி 03, 2015

அமைதியாக இருந்தால் அமைதி வருமா?

அல்லாஹ்வின் திருபெயரால் .......

''தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மௌனமாக இருப்பதே ஆகும் ' எட்மண்ட் பர்க்

''உண்மையை அறிந்த பின்னரும் , உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள் '' மார்டின் லூதர் கிங்

இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன . ஆனால் , இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால், அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ , மற்றவர்கள் தங்களுக்காக குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் . பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே , பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராக பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் , அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுபினால்தான் , நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதைச் சமூகம் மறந்துவிடக் கூடாது.

சனி, ஜனவரி 31, 2015

அதிகமாக குர்ஆன் ஓதுவார்

அல்லாஹ்வின் திருபெயரால் .................

குரான் ஓதுவதின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .......!!!
அந்த குரான் நமக்காக மறுமையில் சிபாரிசு செய்கிறது .  இன்றையக் காலத்தில் நாம் குரானை எப்படி பாவிக்கிறோம் என்பதிப் பார்க்க வேண்டும். சில விடயங்களை  சொல்லி ஆக வேண்டும்.   இந்த குரானை சிலர் பயன்படுத்தும் விதம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், கூற வேண்டும். உயிருள்ளவர்களுக்காக இந்த குரான் இரக்கப்பட்டுள்ளது என்பதை சிலர் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு புரியவைக்க  வேண்டும்.

செவ்வாய், ஜனவரி 27, 2015

சீமான் ஆக்கிய ஈமான் [தொடர்ச்சி ]

சீமான் ஆக்கிய ஈமான் [தொடர்ச்சி ]
அல்லாஹ்வின் திருபெயரால் ...........

ஒருவரின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது ''சோம்பேறி '' முயற்சி நம்முடையது வெற்றியை கொடுப்பது இறைவனுடையது ! 

ஹசன் பாய் அல்லாஹ்வின் கிருபையால் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே போகிறார்... அடுத்த ஓராண்டில் பேங்கு லோன் போட்டு  'சீதேவி ' பழமுதிர் சோலை , அதுவும் நல்ல இடத்தில் திறந்தார். கல்லா நிரம்பி வழிந்துக் கொண்டேயிருந்தது . அடுத்த லாபகரமான தொழில் ஒன்றை யோசித்தார். அவருக்கு நினைவுக்கு வந்தது டீ ஸ்டால் . டவுனில் நாலைந்து இடங்களில் டீ ஸ்டால் ஆரம்பித்தார்.