ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

மனிதர்களும் ***மரங்களும் ***

மனிதர்களும் ***மரங்களும் ***
அல்லாஹ்வின் திருபெயரால்.....
மனிதர்களில் நான்கு வகையினர் உள்ளனர். அதைபோலேவே மரங்களில் நான்கு வகைகள் உள்ளன.

முதலாவது வகை மனிதர்கள் தாம் மட்டும் தனிமையிலிருந்து அதிகமாக நல்ல அமல்களைச் செய்வார்கள் . ஆனால் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் , அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். தாம் மட்டும் அமல்செய்து சொர்க்கத்திற்குப் போனால் போதும் என்ற எண்ணமுடையவர்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பலர் இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.  செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்குமேயன்றி மனிதர்களுக்கு அதிகமான பயனைக் கொடுக்காது.


இரண்டாவது வகை மனிதர்கள் மனிதர்களுக்கு பயன் கொடுக்கும் மரங்களைப் போன்றவர்கள்,, தாமும் நற்கருமங்கள் செய்வதோடு மற்ற மக்களையும் நற்கருமங்கள் செய்யும்படி தூண்டிக்கொண்டே இருப்பார்கள். மேலும் யாராவது ஒரு தீய காரியத்தைச் செய்து விட்டார்கள் என்றால் மனம் வருந்தி எப்படியாவது அவரை அந்தத் தீய காரியத்தை விட்டும் தடுத்து நிறுத்தி நல்ல அமல்களின் பக்கம் கொண்டு வரவே முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். தம் சொந்த ஊரிலும், அக்கம் பக்கத்து ஊர்களுக்கும், தூரமான இடங்களுக்கும் சென்று மனிதர்களின் நன்மைக்காகவே அல்லும் பகலும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த மனிதர்களைக் கொண்டு பல மக்கள் ஹிதாயத்தைய்டைந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடைவார்கள். மனிதர்களுக்குப் பயன் கொடுக்கும் மரங்களைப் போன்றவர்கள் இம்மனிதர்கள். இம்மரங்கள் தரும் பழவர்க்கங்கள் அப்பழங்கள் காய்க்கும் ஆவூர் மக்களும் சாப்பிட்டுப் பயனடைவதோடு அக்கம் பக்கத்து ஊர்களுக்கும், தூரமான இடங்களுக்கும் அப்பழங்கள்  அனுப்பப்பட்டு, அங்குள்ள  மக்களும் சாப்பிட்டுப் பயனடைவது போன்று இம்மக்களின் முயற்ச்சியினால் அவர்கள் வசிக்கும் ஊரிலும், அக்கம் பக்கத்து கிராமங்களிலும், தூரமான இடங்களிலும் உள்ளவர்கள் ஹிதாயத்து அடைந்து அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொள்வார்கள்.

மூன்றாவது  வகை மனிதர்களின் உதாரணம்,, சில மரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறலாம். அம்மரங்களை வெட்டி அறுத்து துண்டு துண்டாக்கியபின், கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் மற்றும் பல பொருள்களை செய்ய பயன்படுகின்றன. இம்மரங்களும் மதிப்பு உள்ளதுதான். ஆனாலும் அம்மரங்கள் ரம்பத்தால் அறுக்கப்படுகின்றன. உளியால் வெட்டப்படுகின்றன. இவ்வாறு பலவகையில் கஷ்டங்கள் கொடுக்கப்பட்டு பின்னர்தான் மதிப்பு உள்ளனவாகி விடுகின்றன. அதைப்போலவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் பல தவறுகள் செய்வதின் காரணமாக மறுமையில் நரகத்தில் இவ்வகை மனிதர்கள் போடப் பட்டு பல கஷ்ட்டங்களை மேற்கொண்டபின் பிறகுதான் சொர்க்கத்தில் போக  அனுமதிக்கப்படுவார்கள்.

நான்காவது வகை மனிதர்களின் உதாரணம்.. காட்டு மரங்களைப் போன்றவர்கள். இவர்கள்தான் காஃபிர்கள். காட்டு மரங்களை வெட்டி அடுப்பில் திணித்து எரிப்பதுபோன்று காஃபிர்கள் நரகத்தில் தூக்கி போடப்படும். இவர்களுக்கு விமோசனம் என்பது கிடையாது.
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் மூன்றில் எந்த வகை இருப்பவர்களாக விரும்பீர்கள்? முதலாவதும் வேண்டாம்.. மூன்றாவது எவ்ண்டாம்  இரண்டாவதாக இருக்க அல்லாஹ்  போதுமானவன்..
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!